- · 5 friends
-
I

வாழ்க்கை
25 வருடங்கள் முன்னர் எங்கள் ஊரில் ஒத்தக்கை தேவர் என்று ஒருவர் இருந்தார் பெண்ணொன்று , பையன்ஒன்று
இரண்டு பேரையும் அவ்வளவு அருமையாக வளர்த்தார் பையன் குதிரை பூட்டிய வண்டி ஓட்டி வரும் பொழுது ஊரே வேடிக்கை பார்க்கும்
அதற்கு இணையாக அந்தப் பெண் சைக்கிள் ஓட்டுவதும் ,இருசக்கர வாகனம் ஓட்டுவதும் ,குதிரை வண்டி ஓட்டுவதும், சிலம்பு சுற்றுவது என பார்ப்பவர்களை கவரும் வண்ணம் ஆக படிப்பும் சேர்த்து சொல்லிக் கொடுத்து வளர்த்தார் .
அந்த பெண் பருவமடைந்த பின் அவர்கள் சொந்தத்திலேயே பையன் ஒருவன் ஒருவனுடன் காதல் உண்டாயிற்று .
அவர்கள் இருவரும் சாரட்டு வண்டியில் செல்லும் பொழுதும் ,இருசக்கர வாகனத்தில் அந்த காலத்தில் அந்தப் பெண் ஒட்டி அந்த பையன் பின்னால் அமர்ந்து செல்வதும் வேடிக்கை பார்க்காதவர் பாக்கி இல்லை
18 வயதைத் தாண்டியதும் முறைப்படியே ஊரறிய 20 ஆடுகளுக்கு மேல் வெட்டி ,சமையல் செய்து பெரிய அளவில் திருமணம் நடந்தது
ஐந்து நாட்கள் கழித்து அவர்கள் மணமகன் ஊருக்குப் போகும்போது வருத்தப்படாத ஜனம் இல்லை . அந்த பெண் அனைவரிடம் சிரித்தவாறு தெரிந்தவர், தெரியாதவர் அனைவருக்கும் டாட்டா காண்பித்து சென்றது இன்றும் கண்களில் இருக்கிறது
அங்கே சென்று இரண்டாம் நாள் இருவரும் கிணற்றுக்கு குளிக்க சென்றிருக்கிறார்கள்.பெண் மேலே இருக்க அந்த பையன் கிணற்றில் விழுந்து குளித்து கொண்டிருக்கும் போது மின்சாரம் தாக்கி கிணற்றுக்குள் விழுந்து இறந்துவிட்டார்
அந்த பெண் செய்வதறியாமல் துடித்து, கத்தி பின்னர் மின்சாரத்தை துண்டித்து அவனை வெளியே கொண்டு வருவதற்குள் அனைத்தும் முடிந்துவிட்டது
அன்று ஊரே அந்த பெண்ணுக்கு அழுதது .
அந்த பெண்ணின் அழகு ,அவ்வளவு சந்தோசங்கள் அழகு எல்லாமே பட்டுபோய் விட்டது
ஒரு மாதம் முன்னர் தெரிந்த ஒருவருக்கு பஸ்ஸ்டாண்ட் அருகில் வெள்ளரிப்பிஞ்சு வாங்கிக் கொடுப்பதற்காக வாகனத்தை நிறுத்தினேன் .
அப்போது ஒரு பெண் அண்ணா !இங்க வாங்க ,அண்ணா! இங்க வாங்க, 50 ரூபாய்க்கு மொத்தமாக தரேன் என்று செம்பட்டை முடியும், தோளில் துண்டும் ,வியர்த்த முகமாக அழைத்தார்.
சரி ,என்று ஐம்பது ரூபாய் கொடுக்கும் போது மனதுக்குள் ஏதோ ஒரு நெருடல் .
முகத்தை மறுபடியும் ஒருமுறை பார்த்து பொறி தட்டியது போல, நீங்கள்ஒத்தக்கை தேவர் மகள் தானே ?என்றதும் , ஆமாம் அண்ணா ,சரியாச் சொன்னே. இத்தனை வருஷத்துல கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டே, என்று சிரித்தவாறு இன்னும் இரண்டு மூன்றுபிஞ்சுகள் சேர்த்து போட்டாள்
நான் கேட்க வந்த கேள்வியும், அந்த பெண் இருந்த நிலையும் ,முன்னொருகாலத்தில் பட்டாம்பூச்சி போன்று சிறகடித்த அவளின் அழகும் ,சிரிப்பும் ,பளீரென அவளின் சிரிப்பும், சிலம்பம் சுற்றும் கண்ணுக்குள் மின்னல் அடிக்க நல்லா இருக்கியாமா ?என்று உதட்டளவில் கேட்டுவிட்டு மனதளவில் மிகவும் வருத்தப்பட்டு வந்துவிட்டேன்
அண்ணா !பிஞ்சு வெள்ளரிக்கண்ணா ,ரொம்ப பிஞ்சுங்கண்ணா , வாங்க அண்ணா என்ற சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது
வாழ்க்கை சில பேருக்கு அழகாக இல்லை. பல பேருக்கும் கூட

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·