-
- 3 friends
இன்றைய ராசி பலன்கள் - 22.1.2025
மேஷம்
மனைவி வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். கூட்டாளிகளின் ஆதரவுகளால் நன்மைகள் ஏற்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். போட்டிப்பந்தயங்களில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
ரிஷபம்
உயர் அதிகாரிகள் மூலம் சில விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். வழக்குகளில் நுணுக்கமான விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பங்கள் மறையும். உத்தியோகப் பணிகளில் அனுகூலமான வாய்ப்புகள் கிடைக்கும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். கால்நடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மிதுனம்
குழந்தைகளின் கல்வி குறித்த எண்ணம் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். பூர்வீக சொத்துக்கள் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில சலுகைகளால் லாபம் மேம்படும். பணிபுரியும் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். புதுவிதமான கனவுகள் பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
கடகம்
மனதளவில் சிறுசிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். தெளிவற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். தற்பெருமை பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். திடீர் பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் ஏற்படும். சபை பணிகளில் முக்கியத்துவம் மேம்படும். சவாலான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் குறைகளை பெரிது படுத்தாமல் இருக்கவும். மாற்றம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
சிம்மம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். காலில் சிறு சிறு வலிகள் ஏற்பட்டு நீங்கும். விமர்சனங்களால் சிறு கவலைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபார பணிகளில் அலைச்சல்கள் உண்டாகும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். எதிலும் விவேகத்துடன் செயல்படுவது நன்மதிப்பை ஏற்படுத்தும். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
கன்னி
பழக்கவழக்கங்களில் மாற்றங்கள் காணப்படும். மனதில் ஏதோ இனம்புரியாத சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். துரித வகை உணவுகளை தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத சில அலைச்சல்களால் ஒருவிதமான சோர்வுகள் உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். நெருக்கமானவர்கள் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். சாந்தம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
துலாம்
அதிகார பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நல்லது. வித்தியாசமான சிந்தனைகள் மனதில் உண்டாகும். தனித்து செயல்படுவதில் ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளால் சேமிப்புகள் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். எதிர்பாலின மக்களின் ஆதரவுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்
விருச்சிகம்
செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வுகள் குறையும். சிந்தனை திறன் மேம்படும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். திட்டமிட்ட காரியம் நிறைவேறும். வெளிநாட்டு வர்த்தக பணிகளில் நன்மைகள் உண்டாகும். மனதில் புதிய தேடல்கள் பிறக்கும். தெய்வீக பணிகளில் ஈடுபாடு மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
தனுசு
உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நெருக்கமானவர்களிடமிருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வர்த்தகம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறும். தன வரவுகள் மூலம் திருப்தி உண்டாகும்.
இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
மகரம்
மற்றவர்களை எதிர்பார்த்து இருக்காமல் செயல்படுவது நல்லது. வியாபார பணிகளில் கனிவு வேண்டும். சிக்கலான சில சூழ்நிலைகளை சமாளிப்பீர்கள். உடல்நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். உறவுகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் உண்டாகும். எண்ணிய சில பணிகளில் நிதானத்துடன் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
கும்பம்
எதிர்பார்த்த சில வரவுகள் தாமதமாக கிடைக்கும். வியாபார பணிகளில் வேலை ஆட்களால் விரயங்கள் ஏற்படும். கடன் தொடர்பான பிரச்சனைகளால் மன வருத்தங்கள் நேரிடலாம். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். எதிலும் சகிப்புத்தன்மையுடன் செயல்படுவது நல்லது. ஆரோக்கிய விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். அச்சம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
மீனம்
சிந்தனைகளில் புதுமைகள் பிறக்கும். அதிகாரப் பொறுப்புக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். விருந்தினர்களின் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். குழந்தைகளால் மதிப்புகள் மேம்படும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். தந்தை வழியில் ஆதரவான சூழல் அமையும். எதிலும் சிக்கனத்துடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்.
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·