- · 5 friends
-
I
அனுபவ அறிவு - (குட்டிக்கதை)
ஒரு கிராமத்தில் ஒரு மிகப் பெரிய மைதானம். அதில் ஒரு தொழிற்சாலை கட்டுவது என்று தீர்மானிக்கப்பட்டது.
அதற்காக பெரிய அலுவலர்களும், பொறியியல் வல்லுநர்களும், தொழில் அதிபர்களும் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டனர்.
தொழிற்சாலை வாசற்பகுதி என்று தீர்மானிக்கப்பட்ட இடத்தில் ஒரு மிகப் பெரிய பாறாங்கல் இருந்தது. இதை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்று யோசித்தனர். ஒவ்வொருவரும் அவரவருக்குத் தோன்றிய யோசனையைச் சொன்னார்கள்.
ஒரு என்ஜினியர் ஒரு டைனமைட் வெடிகுண்டு வைத்துப் பாறாங்கல்லை வெடித்து சிதற வைத்து அப்புறப்படுத்தலாம் என்றார். ஒருவர் பெரிய பெரிய துண்டுப் பாறைகள் ஆக்கி 'கிரேன்' மூலம் தூக்கி அப்புறப்படுத்தலாம் என்றார். இவர்கள் சொன்ன யோசனைக்கு நேரமும், பொருள் செலவும் அதிகமாக இருந்தன.
நண்பகல் வந்தது. அந்தப் பக்கம் வந்த ஒரு முதியவர், என்ன எல்லோரும் பேசிக்கிறாங்க என்று வினவ, பாறாங்கல்லை அகற்றுவது பற்றிப் பேசுவதாகச் சொன்னார்கள். அதற்கு இவர் "இதற்கு ஏன் இவ்வளவு யோசனை? பக்கத்திலேயே,பெரிய அளவில் பள்ளம் தோண்டி கல்லைத் தள்ளிவிட்டு, மண்ணால் மூடிவிட வேண்டியது தானே?” என்று மிக எளிதாகச் சொல்லிவிட்டு போய்க் கொண்டே இருந்தார். யோசிக்காமல் ‘டக்' கென்று அவர் சொன்ன பதிலைக் கேட்டு கூடியிருந்தவர்கள் ஆச்சரியத்தால் வியந்தனர். இதுதான் 'அனுபவ அறிவு' என்பது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·