- · 5 friends
-
I
நரி சொன்ன பதில்
முன்னொரு காலத்தில், ஒரு பசியெடுத்த சிங்கம், நரியிடம் சொன்னது:
"எனக்கு சாப்பிட ஏதாவது கொண்டு வா; இல்லையெனில் உன்னை சாப்பிட்டு விடுவேன்"
நரி ஒரு கழுதையிடம் சென்று சொன்னது: "சிங்கம் உன்னை காட்டுக்கு ராஜாவாக முடிசூட்ட அழைத்து வரச்சொன்னது. நல்ல நாட்கள் வரப்போகின்றன"
கழுதையும் சென்றது.....
கழுதையைக் கண்டதும் சிங்கம் அதனைத் தாக்கியது, அதனால் கழுதையின் காதுகள் அறுபட்டாலும், கழுதை தப்பித்து விட்டது.
கழுதை நரியிடம் சொன்னது:
நீ என்னை ஏமாற்றிவிட்டாய். சிங்கம் என்னை கொல்லப் பார்த்தது.....
அதற்கு நரி சொன்னது:
சேச்சே, உன் தலையில் கிரீடம் சூட்டவே, சிங்கம் உன் காதுகளை அகற்றியது. வா மீண்டும் செல்வோம். வேண்டும் கிரீடம்.
கழுதைக்கு அது சரி எனப் பட்டது, அதனால் திரும்பிச் சென்றது.
மீண்டும் கழுதையைத் தாக்கிய சிங்கம், இம்முறை அதன் வாலை அறுத்தது..
கழுதை மீண்டும் தப்பித்து நரியிடம் சொன்னது:
நீ பொய் சொல்கிறாய்; இதோ பார், சிங்கம் என் வாலை அறுத்துவிட்டது.
நரி சொன்னது:
நீ அரியாசனத்தில் வசதியாக அமரவேண்டும் என்பதற்காகவே சிங்கம் உன் வாலை அகற்றியது. மீண்டும் செல்வோம். வேண்டும் அரியாசனம்.
நரி கழுதையை மீண்டும் அழைத்து சென்றது. இந்த முறை, சிங்கம் கழுதையைப் பிடித்து கொன்றது.
சிங்கம் நரியிடம் சொன்னது:
பலே பலே, எப்படி சிக்கி சீரழிந்தாலும், திரும்ப கழுதையை அழைத்து வந்துவிட்டாயே. போய் கழுதையின் தோலை உரித்து, அதன் மூளை, நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தைக் கொண்டு வா.
நரி கழுதையின் தோலை உரித்து, அதன் மூளையை சாப்பிட்டது; கழுதையின் நுரையீரல், கல்லீரல் மற்றும் இதயத்தை சிங்கத்திற்கு கொண்டு வந்தது.
சிங்கம் கோபமடைந்து கேட்டது:
மூளை எங்கே?
நரி பதிலளித்தது:
அந்த கழுதைக்கு மூளை இல்லை அரசே. மூளை இருந்திருந்தால், காதையும், வாலையும் இழந்த பின்னர் உங்களை நம்பி மூன்றாம் முறை வந்திருக்குமா?
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·