-
- 3 friends
இன்றைய ராசி பலன்கள் - 31.12.2024
மேஷம்
பூர்வீக சொத்து மூலம் சாதகமான பலன்கள் கிடைக்கும். வரவுகளால் கையிருப்புகள் மேம்படும். கடினமான பணிகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். தந்தையின் ஆரோக்கியம் தொடர்பான பிரச்சனைகள் குறையும். திறமை வெளிப்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
ரிஷபம்
மனதளவில் குழப்பங்கள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போராட்டங்கள் அதிகரிக்கும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். மற்றவர்களின் ஆசை வார்த்தைகளை நம்ப வேண்டாம். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. சந்தேக உணர்வுகளால் மகிழ்ச்சியின்மை ஏற்படும். உயர் அதிகாரிகளுடன் சிந்தித்துச் செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
மிதுனம்
போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் ஒற்றுமை மேம்படும். கடினமான செயல்களையும் எளிதாக முடிப்பீர்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். புகழ் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : கருஞ்சிவப்பு
கடகம்
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அரசு சார்ந்த பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரம் நிமித்தமான முதலீடுகள் அதிகரிக்கும். கணவன், மனைவி இடையே அனுசரித்து நடந்து கொள்ளவும். உத்தியோக பணிகளில் மாற்றம் ஏற்படும். மனதில் நினைத்த காரியம் நிறைவேறும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்
சிம்மம்
புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். சகோதரர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை உருவாக்கும். புதிய தொழில் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். சக ஊழியர்களிடம் கவனம் வேண்டும். பயனற்ற செலவுகளை குறைப்பீர்கள். உயர்கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
கன்னி
பொருளாதார சிக்கல்கள் குறையும். சமுகப் பணிகளில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். வரவுகள் குறித்த சிந்தனைகள் மேம்படும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வேலை ஆட்களின் ஒத்துழைப்புகள் மூலம் லாபம் அடைவீர்கள். பணி நிமித்தமான கருத்துக்களுக்கு ஆதரவு மேம்படும். உறுதி மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம்
மாறுபட்ட அணுகு முறையால் எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வேலையாட்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
விருச்சிகம்
கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். செலவுகளை கட்டுப்படுத்த முயற்சி செய்வீர்கள். தோற்றப்பொலிவுகள் மேம்படும். பேச்சுவார்த்தைகள் மூலம் சாதகமான சூழல் அமையும். வியாபாரத்தில் வரவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் ஒத்துழைப்பான சூழல் அமையும். மனதளவில் புதுவிதமான நம்பிக்கை பிறக்கும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
தனுசு
பழைய நினைவுகள் மூலம் குழப்பங்கள் உண்டாகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். உடல் தோற்றத்தில் சில மாற்றங்கள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் புதுமையான சூழ்நிலைகள் அமையும். உடன் இருப்பவர்களால் புதிய கண்ணோட்டம் பிறக்கும். நேர்மறை சிந்தனைகளுடன் செயல்படவும். வேலையாட்களிடத்தில் பொறுமை வேண்டும். ஊக்கம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகரம்
செய்யும் பணிகளில் கவனம் வேண்டும். குழந்தைகளிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். திடீர் பயணங்களால் திருப்பங்கள் ஏற்படும். குடும்ப விஷயங்கள் பகிர்வதை தவிர்க்கவும். உபரி வருமானம் குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். நீண்ட நேரம் கண் விழிப்பதை குறைத்துக் கொள்ளவும். வியாபார முதலீடுகள் மேம்படும். மறதி குறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கும்பம்
வியாபார பணிகளில் லாபம் மேம்படும். அரசியல்வாதிகளுக்கு செல்வாக்கு உயரும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். கணினி தொடர்பான துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்த சிந்தனைகள் மனதில் மேம்படும். தாய்வழி சொத்துக்கள் தொடர்பான செயல்களில் பொறுமை வேண்டும். பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
மீனம்
அரசுத்துறை பணிகளில் சாதகமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். மகளுக்கு சுபகாரிய செய்திகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் திருப்தி கிடைக்கும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·