- · 5 friends
-
I
உசுப்பேற்றி விடுபவர்களிடம் உஷாராக இருக்க வேண்டும்
1987.
எம்ஜிஆர் ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். அப்போதுதான் 'ஆனந்த விகடன்' அட்டையில் அரசியல்வாதிகளைக் கிண்டல் செய்த அந்த ஜோக் வெளிவந்தது. அதை எடுத்துச் சென்று எம்ஜிஆரிடம் காட்டினார்கள் அவரது கட்சிக்காரர்கள்.
எத்தனையோ கேலிகளையும் கிண்டல்களையும் பார்த்து விட்ட எம்ஜிஆர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. புன்னகையோடு அடுத்த வேலைகளைக் கவனிக்க ஆரம்பித்து விட்டார்.
ஆனால் உடன் இருந்தவர்கள் விடாமல் உசுப்பேற்ற ஆரம்பித்தார்கள் : "தலைவரே... விகடன் ஆசிரியர் நம் கட்சிக்காரர்களைத்தான் மறைமுகமாக கிண்டல் செய்திருக்கிறார். சும்மா விடக் கூடாது அவரை..!"
"என்ன செய்ய வேண்டும் ?"
"உடனே கைது செய்து ஜெயிலில் தள்ளுங்கள். கம்பி எண்ணினால்தான் புத்தி வரும்."
கட்சிக்காரர்கள் மாறி மாறி அழுத்தம் கொடுக்கவே, வேறு வழியின்றி, அந்த ஜோக்கை வெளியிட்டதற்காக 'விகடன்' ஆசிரியர் எஸ். பாலசுப்பிரமணியனை, கைது செய்யச் சொன்னார் எம்.ஜி.ஆர்.
மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். மறுத்தார் பாலசுப்பிரமணியன்.
மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அவ்வளவுதான் !
எம்ஜிஆரே எதிர் பார்க்காத ஒரு திடீர் திருப்பம், அங்கு நிகழ்ந்தது. பொங்கி எழுந்தார் ‘விகடன்’ எஸ். பாலசுப்பிரமணியன்.
எம்.ஜி.ஆர் அரசின் உத்தரவை எதிர்த்து வழக்குத் தொடுத்தார். வாதாடினார். விடுதலையும் பெற்றார் .
அடுத்து நடந்ததுதான் எவரும் எதிர்பாராதது.
“காரணம் இல்லாமல் விகடன் ஆசிரியரை கைது செய்து அவமானப்படுத்தியதற்காக 1000 ரூபாயை அபராதமாகக் கட்ட வேண்டும்”- எம்.ஜி.ஆர் அரசுக்கு இப்படி அதிரடி உத்தரவிட்டது நீதிமன்றம்.
திகைத்துப் போன எம்ஜிஆர்
வேறு வழியின்றி, சத்தமில்லாமல் அபராதத் தொகையை ஆனந்த விகடன் ஆசிரியருக்கு செலுத்தினார்.
(அது இப்போதும் விகடன் அலுவலகத்தில் ஃபிரேம் செய்து மாட்டப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார்கள்.)
எத்தனை எத்தனையோ பேருக்கு, ஆயிரம் ஆயிரமாக அள்ளி அள்ளிக் கொடுத்தவர் எம்.ஜி.ஆர்.
ஆனால் அவர் இப்படி அபராதமாக ஆயிரம் ரூபாயை கட்டிய அந்த அவஸ்தை நிலைக்குக் காரணம், உடன் இருந்து உசுப்பேற்றிய ஒரு கூட்டம்தான்.
உசுப்பேற்றி விடுபவர்களிடம்
உஷாராக இருக்க வேண்டும் என்பதற்கு நல்லதொரு உதாரணம் இந்த சம்பவம்..!
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·