- · 5 friends
-
I
இவர் யார் என்று தெரியுமா?
படத்தில் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.
ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப் படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக இறாக்கை அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான (Wikipedia) வை எமக்காக வடிவமைத்தவர் இவர்தான்.
ஆம், (Wikipedia) வின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதிருக்க முடியும், அவருக்கு வந்த விளம்பர ஓபர்களை பயன்படுத்தி
பேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் நின்றிருக்கலாம்.
ஆனால் தனக்கு வந்த அனைத்து விளம்பரங்களையும் ஏற்க மறுத்தார், முழு உலகுமே பயன் பெரும் இந்த மாபெரும் கலைக்களஞ்சியம் என்றென்றும் இலாப நோக்கற்ற தளமாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த மண்ணில் வாழும் முன்மாதிரிமிக்க மனிதர்கள் தர வரிசையில் தானும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருந்தார்.
கல்விக்கும் தேடலுக்குமான முதல் தர தளமாக விளங்கும் விக்கிபீடியாவை பணம் பார்க்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளுக்கும் தாரை வார்க்க மறுத்தே வந்தார்.
சமீபத்தில் "Wikipedia Zero" என்ற விஷேட கலைக்களஞ்சியத்தை வடிவமைத்து ஆரம்பித்து வைத்த அவர், உலக மூலை முடுக்களிலெல்லாம் இன்டர்நெட் பேக்கேஜுக்கு பணம் செலுத்த முடியாத,
வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் அறிவுப் பசியை போக்கவும் கலைத் தாகத்தை தீர்க்கவும் வசதியை ஏற்படுத்தி வைத்தார்.
இதன் மூலம் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மொபைல் நிறுவனங்களிடமிருந்து விக்கிபீடியாவிற்கான இலவச (access) களை பெற்றுக்கொள்ளலாம்.
இன்னும் இந்த பூமிக் கிரகத்தில் நன்மையை மாத்திரம் நாடும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் வாழுகிறார்கள் என்பதை ஜிம்மி வேல்ஸ் நிரூபித்துள்ளார்.
ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் அறிவியல் பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைத்த இவருக்கு எங்கே நீங்களும் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்கலாமே.
ஒருவன் தனது மொத்த பரம்பரைக்கும் சேர்த்து சொத்து, செல்வம் சேர்க்கும் போது ஒருவன் இந்த உலகம் உள்ளவரை அனைத்து மக்களும் பயன்படுமாறு ஏதோ ஒன்றை இவ்வுலகிற்கு கொடுத்து தனது பெயரை மட்டும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவாறு செதுக்கி செல்கிறான்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·