·   ·  190 posts
  • 2 members
  • 2 friends

சொந்த வீடு வாங்க வேண்டுமா? எளிமையான இந்த

நினைத்தது நிறைவேற செவ்வாய்கிழமை வழிபாடு. செவ்வாய்கிழமையில் முருகப் பெருமானை வேண்டி எந்த வழிபாடு, விரதம் ஆகியவற்றை மேற்கொண்டாலும் அது பல மடங்கு அதிகமான பலனை தரும். எந்த பிரச்சனையாக இருந்தாலும் செவ்வாய்க்கிழமையில் விரதம் இருந்து வழிபட்டால் அது நிச்சயம் பலன் தரும்.

செவ்வாய்க்கிழமையில் துர்க்கை வழிபாடு, பைரவர் வழிபாட்டிற்கும் ஏற்ற நாளாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானுக்கு உரிமையான நாள் என்பதாலேயே செவ்வாய்க்கிழமை என குறிப்பிடுகிறோம். முருகுப் பெருமானுக்கு திதி, நட்சத்திரம், கிழமை என மூன்று விதமான விரதங்கள் கடைபிடிக்கப்படுக்கின்றன. செவ்வாய் பகவானுக்குரிய அதிதேவதை முருகப் பெருமான் என்பதால் செவ்வாய்க்கிழமை முருகன் வழிபாட்டிற்கு மிகவும் ஏற்றதாக சொல்லப்படுகிறது. 

திதி அடிப்படையில் விரதம் இருந்தால் 15 நாட்களும், நட்சத்திர அடிப்படையில் விரதம் இருந்தாலும் மீண்டும் அந்த நட்சத்திரம் வருவதற்கு ஒரு மாதமும் காத்திருக்க வேண்டும். ஆனால் கிழமை அடிப்படையில் விரதம் இருப்பது குறுகிய கால விரதம் என்றாலும், மிக விரைவாக பலன் தரக் கூடியதாகும். செவ்வாய் பகவான், வீடு, நிலம், சொத்து ஆகியவற்றிற்கு காரணமான கிரகம் என்பது அனைவருக்கும் தெரியும். செவ்வாய் பகவானை வழிபட்டால் வீடு, வாகன யோகம் அமையும்.

மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், கல்லீரல், இடது காது, எலும்புகளுக்கு தேவையான சத்துக்கள் ஆகியவற்றிற்கு செவ்வாய் பகவான் தான் காரணமானவராக இருக்கிறார். இதனால் செவ்வாய் கிழமையில் விரதம் இருந்து, அவருக்குரிய அதி தேவதையான முருகப் பெருமானை வழிபடுவதால் செவ்வாய் கிரகத்தால் ஏற்படும் பாதிப்புக்கள் அனைத்தும் குறையும். அதோடு சில குறிப்பிட்ட வழிபாடுகளை செவ்வாய் கிழமையில் வரும் செவ்வாய் ஓரை நேரமான காலை 6 மணி முதல் 7 மணி வரையிலான காலத்தில் செய்யும் போது அதற்கு விரைவான பலன் கிடைக்கும். என்ன நினைத்து இந்த வழிபாட்டினை செய்கிறோமோ அந்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும். அதோடு வாழ்க்கையில் ஏற்றம் என்பது இருந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையை மாற்றும் சிறப்பான வழிபாடு என்று கூட இதை சொல்லலாம். 

செவ்வாய்க்கிழமையில் காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டில் உள்ள பூஜை அறையில் வழக்கமாக ஏற்றும் விளக்கை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு தட்டினை எடுத்துக் கொள்ளுங்கள். எவர்சில்வர், பிளாஸ்டிக் இல்லாத மற்ற உலோகங்களால் ஆன தட்டுக்களை பயன்படுத்துவது சிறப்பு. அதன் மத்தியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். 6 என்ற எண்ணிக்கையில் வெற்றிலைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றின் காம்பு பகுதியை கிள்ளி எடுத்து விடுங்கள். வெற்றிலை மகாலட்சுமியின் அம்சம் என்றாலும், அதன் காம்பு பகுதியில் மூதேவி வசிப்பதாக ஐதீகம். அதனால் அதனை அகற்றி விட்டு, ஆறு வெற்றிலைகளின் மேல், நடு, நுனி பகுதியில் மஞ்சள், குங்குமம் தொட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்போது இந்த வெற்றிலைகளை விசிறி போல் தட்டில் பரப்பி வையுங்கள்.

ஆறு வெற்றிலைகளின் நுனி பகுதியும் வெளிபுறமாக இருப்பது போலவும், அடிப்பகுதி உட்புறமாக இருப்பது போலவும், அந்த வெற்றிலைகள் ஒன்றின் மீது ஒன்று படும் வகையிலும் வைக்க வேண்டும். அந்த ஆறு வெற்றிலைகளிலும் பூ வைத்து, மத்தியில் ஒரு அகல் விளக்கினை ஏற்றி வையுங்கள். நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி, அந்த விளக்கில் கிள்ளி வைத்த வெற்றிலை காம்புகளை போட்டு, விளக்கு ஏற்ற வேண்டும். ஆறு வெற்றிலைகளிலும் படும் வகையில் விளக்கை வைத்து ஏற்ற வேண்டும். பிறகு முருகப் பெருமானை மனதார நினைத்து, உங்களின் வேண்டுதலை சொல்லி முறையிடுங்கள். இந்த விளக்கு அரை மணி நேரமாவது பூஜை அறையில் எரிய வேண்டும். வெற்றிலை தீபம் மட்டுமின்றி செவ்வாய்கிழமையில் வீட்டின் பூஜை அறையில் கோலமிட்டு, அதன் மீது ஆறு நெய் விளக்குகள் ஏற்றியும் வழிபடலாம். இப்படி ஏற்றுவதால் அந்த ஆறு விளக்குகளிலும் முருகப் பெருமானின் ஆறுமுகங்களும் எழுந்தருளி, நமக்கு அருள் செய்யும் என்பது நம்பிக்கை. முருகனுக்கு நைவேத்தியமாக இரண்டு வாழைப்பழங்கள் அல்லது சர்க்கரை கலந்த பால் என எது வேண்டுமானாலும் வைக்கலாம். இந்த இரண்டில் ஏதாவது ஒரு வழிபாட்டினை செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஓரையில் தொடர்ந்து 6 வாரங்கள் செய்து வர வேண்டும். ஆறு வாரங்களில் இந்த வழிபாடு நிறைவு செய்வதற்குள், உங்களின் வேண்டுதல் நிறைவேற துவங்கி விடும்.

  • 1511
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய