Support Ads
 ·   ·  1506 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

வல்லவனுக்கு வல்லவன்

வெகு நாட்களாக வெளியூரில் இருந்த தெனாலிராமன், தலைநகர் ஹம்பிக்குத் திரும்பினான். அவன் ஊருக்குள் நுழையும்போது மக்கள் ஆங்காங்கே கூடிக் கூடி பேசுவதை கண்டான்.காரணம் தெரியாமல் திகைத்தபடியே தன் இல்லத்துக்குள் நுழைந்தான். தெனாலிராமனின் வேலைக்காரர்கள் இருவரும் அடிக்கடி கூடி ஏதோ ஆலோசனை செய் துகொண்டிருந்தனர்.ஊருக்குள் வந்தபோது மக்கள் கூடிநின்று பேசுவதைப் பார்த்த தெனாலிராமன், தன் வேலைக்காரர்களும் அதேபோல் சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள் என யோசித்தான். காரணம் கண்டு பிடிக்க முடியாததால் தன் வேலைக்காரர்களுள் ஒருவனை அழைத்தான்.டேய்,உண்மையைச் சொல். என்ன காரணமாகக் கூடிக் கூடிப் பேசுகிறீர்கள்? ஏதேனும் திட்டம் தீட்டுகிறீர்களா? என்று கேள்வி கேட்டான்.

வேலைக்காரன் பயந்து, ஐயா, சாமி, நாங்க நம்ம ஊருக்கு வந்திருக்குற வடநாட்டு வியாபாரியைப் பற்றிப் பேசுறோம், என்றான். அவரைப் பற்றி என்ன பேச்சு? என்று தெனாலி ராமன் கேட்டான். அவர் ஒரு பொருள் வைத்திரு க்கிறாராம். அதன் எடை என்னன்னு கண்டுபிடிச்சா எடைக்கு எடை பொன் தருவதாகச் சொல்லியிருக்கிறாராம். அப்படி கண்டுபிடிக்க முடியலனா காலம் பூராவும் அவருக்கு அடிமையா அவருக்குப் பணிவிடை செய்து வாழணுமாம், என்றான் வேலைக்காரன். தெனாலிராமன் சிந்தித்து, அரசபைக்கு சென்று அந்த வியாபாரியைச் சந்தித்தான். மன்னர் கிருஷ்ண தேவராயரும் வியாபாரியின் இந்த சவாலை ஏற்கவும் முடியாமல், விட்டு விடவும் முடியாமல் பெரும் குழப்பத்தில் இருந்தார். தெனாலிராமன் சபைக்கு வந்ததும், மன்னர் அவ ரிடம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு கேட்டார்.

தெனாலிராமன்னும் அதை ஏற்றுக்கொண்டு வியாபாரியிடம், தாங்கள் எடை காணவேண்டும் என்று கூறும் பொருள் என்னவோ? என்று கேட்டார். வியாபாரி மிகுந்த கர்வத்துடன், நான் ஜெயித்தால் நீர் எமக்கு அடிமை. ஆனால் நீர் ஜெயித்தால் எடைக்கு எடை பொன் தருவேன், என்றான். உங்கள் நிபந்தனையை நான் ஒப்புக் கொள்கி றேன். நானும் ஒப்புக்கொள்கிறேன். எந்தப் பொருளுக்கு எடை சொல்ல வேண்டும்? சொல்லுங்கள், என்றான் தெனாலிராமன்.

வியாபாரி கள்ளச் சிரிப்புடன், வீதி யில் நிற்கும் என் யானையின் எடை என்ன என்று சொல்லவேண்டும், என் றான். சபையே அதிர்ந்தது. யானையை எப்படி எடை போடுவது? எந்தத் தராசி ல் நிற்க வைப்பது என்று அனைவரும் சிந்திக்கத் தொடங்கினர். மன்னரும் சிந்தனை வயப்பட்டார். தெனாலிராமன் மறுநாள் பதில் கூறுவதாகச் சொல்லி இல்லம் திரும்பினான். இரவு தன் மனைவியிடம் இந் தப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தான். அப்போது அவனுக் குத் திடீரென்று யோசனை தோன்றியது. மறுநாள் பொழுது விடிந்ததும், வியாபாரியிடம் யானையின் எடை யைக் கூறுவதாகக் கூறி அழைத்தான். மக்கள் ராமன் எப்படி யானையை எடை போடுகிறான் என்பதைப் பார்க்கக் கூடிவிட்டனர்.

மன்னரும் மக்களுடன் சேர்ந்து ஆவலுடன் பார்த்து நின்றார். ராமன் வடநாட்டு வியாபாரியை நதிக்க ரைக்கு அழைத்துச் சென்றான். அவனும் தன் யானையை நடத்திக்கொண்டு ராமனுடன் சென்றான். நதிக்கரையை அடைந்தவுடன், அங்கிருந்த ஒரு பெரிய படகில் யானையை ஏற்றச் சொன்னான் ராமன். யானையை ஏற் றியவுடன் படகு நீருக்குள் மிதக்கவிடச் சொன் னான். படகு நீருக்குள் அமிழ, நீரின் அளவை குறித்துக் கொண்டான். பின்னர் மரக்கட்டை களை படகில் வைத்து நீருக்குள் விட்டான். படகு மீண்டும் அமிழ, நீர் மேலே வந்து நிற்கும் அளவை குறித்துக் கொண்டான். அரசே, கட்டைகளைத் தனித் தனியே எடை போட்டுப் பார்க்கச் சொல்லுங்கள், என்றான் ராமன். மன்னர் கிருஷ்ணதேவராயர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். வியாபாரியைப் பார்த்து, ஐயா, நீங்கள் கேட்ட கேள்விக்கு எங்கள் ராமன் சரியான விடை தந்து விட்டான். அவனிடம் சொன்னது போல் பரிசைத் தருவதுதான் நியா யம், என்று கூறியவுடன் வியாபாரி தலை குனிந்து ஒப்புக் கொண்டான். 

ஆனால் இடைமறித்த ராமன், மகாராஜா பொறுங்கள், என்றவன் வியாபாரியைப் பார்த்துக் கூறினான். 

ஐயா வியாபாரியே! நான் வெற்றி பெற்றால் தாங்கள் என்ன தருவதாகக் கூறினீர்கள்? எடைக்கு எடை பொன் தருவதாகக் கூறி னேன், என்றான். அது சரி. யாருடைய எடைக்கு எடை என்று நீங்கள் சரியாகச் சொல்லவில்லையே. எடையைப் பார்த்துச் சொன்னவரின் எடைக்கா அல்லது யானையின் எடைக்கா? என்றான் ராமன். இது கேட்ட வியாபாரி மயங்கி சரிந்தான். யானையின் எடைக்கு எடை பொன்னுக்கு அவன் எங்கே போவான். எனவே அவனைச் சிறையில் அடைக்குமாறு மன்னர் கட்டளையிட்டார். பல நாடுகளில் மக்களை அடிமைப்படுத்தி சிறுமைப்படுத்திய வியாபாரிக்குச் சரியான தண்டனைதான் அது என்று மன்னர் தீர்ப்பளித்தார். ராமனுக்குப் பெரும் பொன்னைப் பரிசாகக் கொடுத்து வாழ்த்தினார். வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பதை நிரூபித்த தெனாலிராமனை மக்கள் அனைவரும் பாராட்டி மகிழ்ந்தனர்.

கதையின் நீதி --

யாரையும் துன்புறுத்தி மகிழ்தல் தவறு. வல்லவனுக்கு வல்லவன் இவ்வுலகில் உண்டு என்பதையும் புரிந்து கொண்டால் நலமடைவோம்.

  • 1682
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய