-
- 3 friends
இன்றைய ராசி பலன் – டிசம்பர் மாதம் 19, 2024
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, மார்கழி மாதம் 4ஆம் தேதி
மேஷபம் ராசி:
மனை மற்றும் வீடு தொடர்பான செயல்பாடுகளில் ஆர்வம் மேம்படும். வியாபாரம் நிமித்தமாக எதிர்பார்த்திருந்த சில உதவிகள் சாதகமாக அமையும். பொருளாதாரம் சார்ந்த நெருக்கடிகள் குறையும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம் ராசி:
மனதளவில் தன்னம்பிக்கை உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். குண நலன்களில் சில மாற்றங்கள் ஏற்படும். பாரம்பரியமான விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். உயர்கல்வியில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மிதுனம் -ராசி:
கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். பேச்சுக்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகப் பணிகளில் ஆதரவு மேம்படும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். கல்வியில் இருந்துவந்த மந்தநிலை மறையும். எதிர்காலம் தொடர்பான சேமிப்புகள் அதிகரிக்கும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
கடகம் -ராசி:
பணி மாற்றம் சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். உயர் கல்வி சார்ந்த தெளிவுகள் பிறக்கும். ஆடம்பரப் பொருட்கள் மீதான ஆர்வம் உண்டாகும். குழந்தைகள் இடத்தில் பொறுமை காக்கவும். பணிகள் நிறைவு பெறுவதில் அலைச்சல் உண்டாகும். தடைகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
சிம்மம் -ராசி:
கனிவான பேச்சுக்கள் தேவையற்ற பகைமையை குறைக்கும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். ஆடம்பரமான பொருட்கள் மீது ஈர்ப்பு உண்டாகும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்புகள் மேம்படும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் குறையும். உலக வாழ்க்கை பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கன்னி -ராசி:
பெற்றோர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். சேமிப்புகளை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபார பணிகளில் முன்னேற்றம் ஏற்படும். அலுவலக பணிகளில் மதிப்பு அதிகரிக்கும். சில நுட்பமான விஷயங்களைப் புரிந்து கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
துலாம் -ராசி:
வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் விலகும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அரசு செயல்பாடுகளில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் ஏற்படும். பணிகளில் ஒரு விதமான சோர்வு உண்டாகும். வியாபார செயல்பாடுகளில் கவனம் வேண்டும். சிந்தனைப் போக்கில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். பெருமை மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம்சாம்பல்
விருச்சிகம்- ராசி:
குடும்பத்தில் அமைதியான சூழல் நிலவும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். உடன் பிறந்தவர்களை பற்றி புரிந்து கொள்வீர்கள். தெய்வீக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார பணிகளில் புதிய தொடர்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் பணிகளை விரைவாக செய்து முடிப்பீர்கள். திட்டமிட்ட பணிகள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நலம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்
தனுசு -ராசி:
மனதில் இனம் புரியாத சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். நெருக்கமானவர்களிடம் கருத்து வேறுபாடுகள் நேரிடும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். வியாபாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்துச் செல்லவும். சூழ்நிலைக்கு ஏற்ப கருத்துக்களை பகிர்வது நல்லது. விவேகம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
மகரம் -ராசி:
சூழ்நிலை அறிந்து எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொள்வீர்கள். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். திறமைக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். உத்தியோக பணிகளை சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்ததன்மை குறையும். உழைப்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கும்பம் –ராசி:
மனதில் தோன்றிய எண்ணங்களை செயல் வடிவில் மாற்றுவீர்கள். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். குழந்தைகள் பொறுப்பு அறிந்து செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். எதிலும் புத்துணர்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். உதவி கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
மீனம் -ராசி:
வருமானத்தை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம், பக்கம் வீட்டார் ஆதரவாக இருப்பார்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். கலை சார்ந்த பணிகளில் ஆர்வம் ஏற்படும். கடினமான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகப் பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்பட்டு எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·