- · 5 friends
-
I
முடி உதிர்தல் மற்றும் இளநரையை போக்கும் எண்ணெய்
தலைமுடியை பராமரிக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது. முதலில் தலைமுடியை அடர்த்தியாக வளரச் செய்ய வேண்டும் என்றுதான் அனைவருமே ஆசைப்படுவார்கள்.
இளநரை வந்த புதிதில் எதையாவது செய்து இளநரையை தடுக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள். இவை இரண்டையும் தீர்க்கக்கூடிய மிகவும் எளிமையான ஒரு வழிமுறையை பற்றி தான் பார்க்கப் போகின்றோம்.
முடி நீளமாக இருக்க வேண்டும், அடர்த்தியாக இருக்க வேண்டும், கருமையாக இருக்க வேண்டும் என்று தான் பல பெண்களும் ஆசைப்படுவார்கள். அதற்கான முயற்சிகளையும் செய்வார்கள். இருப்பினும் ஏதோ ஒரு காரணத்தினால் இளநரை பிரச்சினை என்பது ஏற்படும்.
பொதுவாக இளநரை பிரச்சினை ஏற்படுவதற்கு நம் உடலில் உற்பத்தியாக கூடிய மெலனின் சத்தின் குறைபாடு தான் காரணம் என்று கூறப்படுகிறது. இந்த மெலனின் குறைவான அளவில் உற்பத்தியாகும் பொழுது தலைமுடி விரைவிலேயே நரைத்து விடும். இதே மெலனின் உற்பத்தி அதிகரிக்கும் அதிகமாக இருக்கும் பொழுது வயதானாலும் நரை முடி பிரச்சனை என்பது ஏற்படாது.
இந்த மெலனின் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு ஒரு எண்ணையை நாம் வீட்டிலேயே தயார் செய்யலாம். இந்த எண்ணையை நாம் உபயோகப்படுத்துவதன் மூலம் இளநரை பிரச்சனை தீர்வதோடு முடி உறுதியாகும். முடி உறுதி ஆவதால் முடி உதிர்தல் பிரச்சனை நீங்கி முடி அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும். இதற்கு நமக்கு செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் வேண்டும்.
தினமும் தலைக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினாலும் சரி அல்லது தலைக்கு குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு எண்ணெய் தடவி ஊறவைத்து பிறகு குளித்தாலும் சரி. ஆனால் தேங்காய் எண்ணெயை தலைக்கு உபயோகப்படுத்துவதன் மூலம் தலைமுடியின் ஆரோக்கியத்தை நம்மால் மேம்படுத்த முடியும்.
இந்த தேங்காய் எண்ணெயுடன் ஒரு சாறை சேர்க்கப் போகிறோம். அதுதான் நெல்லிக்காய் சாறு. ஒரு நெல்லிக்காயை நன்றாக அரைத்து அதன் சாறை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். அதற்கு சரிசமமான அளவு தேங்காய் எண்ணெயை நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதை உங்களுடைய தலையில் அப்படியே தடவ வேண்டும். பிறகு உங்களுடைய விரல் நுணியால் தலையை நன்றாக மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பிறகு தலைக்கு குளிக்க வேண்டும்.
எப்பொழுதெல்லாம் தலைக்கு குளிக்கிறீர்களோ அதற்கு முன்பாக இந்த நெல்லிக்காய் சாறு தேங்காய் எண்ணெயை தலையில் தேய்த்து ஊற வைத்து குளிப்பதன் மூலம் மெலனின் உற்பத்தி அதிகரிக்கும். மேலும் தலைமுடி வலுவாகி தலை முடி உதிர்தல் பிரச்சனை நீங்கும் இந்த நெல்லிக்கனி சாறை தலைக்கு தேய்ப்பது போல் தினமும் உள்ளுக்குள் எடுத்துக்கொண்டு வந்தாலும் நம்முடைய உடல் ஆரோக்கியமும் மேம்படும், தலைமுடியின் ஆரோக்கியமும் மேம்படும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·