- · 5 friends
-
I
கருமை நிறம் மாறி முகபொலிவை பெற எளிமையான பேஸ்பேக்
தோல் நிறம் வெள்ளையாக மாற வேண்டும் என்பதற்காக கடைகளில் பல கெமிக்கல் நிறைந்த கிரீம்கள் விற்கப்படுகிறது. இந்த கிரீம்களை வாங்கி உபயோகப்படுத்தும் பொழுது நிறம் வெள்ளையாவதை நம்மால் உணர முடியும் என்றாலும் அதனால் முகத்தில் தேவையில்லாத பாதிப்புகளும் ஏற்படும்.
அந்த பாதிப்புகளை தவிர்த்து இயற்கையான பொருட்களை வைத்தே நம்முடைய முகத்தை வெள்ளையாக்க முடியும். இதற்கு ஒரு ஸ்பூன் அளவிற்கு கோதுமை மாவு, ஒரு ஸ்பூன் அளவிற்கு அரிசி மாவு, மூன்று ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால், மூன்று ஸ்பூன் அளவிற்கு தக்காளி சாறு இவை நான்கையும் ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேக்கை நம்முடைய முகத்தில் தடவி கிளாக் வைஸ் ஆன்டி கிளாக் வைஸ் என்று முகத்தில் நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். இதை முகத்தில்தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை ஒரு சிலருக்கு வெயிலில் சென்று வருவதால் கைகள் கருப்பாக இருக்கும். அப்படி இருக்கும் கைகளுக்கும் இதை நாம் பயன்படுத்தலாம். கழுத்தில் கருமை படந்திருப்பவர்களும் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தலாம்.
எந்த இடத்தில் கருமை அதிகமாக இருக்கிறதோ அந்த இடத்தில் இந்த பேஸ் பேக்கை பயன்படுத்தும் பொழுது அதில் இருக்கக்கூடிய கருமை என்பது நீங்குவதோடு இயற்கையான நிறத்தையோ அல்லது அதைவிட அதிகமான நிறத்தையோ நம்மால் பெற முடியும். இதில் சேர்க்கப்பட்டுள்ள இந்த நான்கு பொருட்களுமே நம்முடைய முகத்தில் இருக்கக்கூடிய அழுக்குகளை நீக்கி முகத்தை பிரகாசமாக மின்னச் செய்யக்கூடிய பொருட்களாகவே திகழ்கின்றன.
அதோடு மட்டுமல்லாமல் இந்த நான்கு பொருட்களும் நம்முடைய வீட்டில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். அனைவரின் இல்லத்திலும் இருக்கக்கூடிய பொருட்கள்தான் என்பதால் இதற்காக பெரிதும் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. 15 நிமிடம் இந்த பேஸ் பேக்கை அப்படியே முகத்தில் வைத்துவிட்டு பிறகு வெதுவெதுப்பான நீரினால் முகத்தை கழுவி விட வேண்டும். முகத்தில் இருக்கக்கூடிய கருமை படிப்படியாக நீங்குவதை நம்மால் உணர முடியும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·