Support Ads
 ·   ·  138 posts
  • 2 members
  • 2 friends

சனி பகவானின் கெடு பலன் குறைய

சனியின் கெடுபலன் தோஷம் குறைய , எந்தெந்த வழிபாட்டை ,எப்படி எப்படி செய்ய வேண்டும்?

ஏழரைச் சனி, அட்டம சனி , பாவ தொடர்பு பெற்ற சனி திசை ,புத்தி கடுமையான கெடு பலனை கொடுக்கும்.

சனியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமே அதன் கொடுமை தெரியும்.

சனியால் பாதிக்கப்பட்டவர்கள் , கீழ்கண்ட எளிய பரிகாரங்களை செய்து வர நல்ல பலன்களை பெறலாம்.

1. சனியின் குரு காலபைரவர்.

சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், சனியின் குருவான காலபைரவரை,தினசரி ராகு கால நேரத்தில் வழிபடுவது நல்லது.

நமக்கு ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவர்களை தண்டிக்க காத்திருப்போம். ஆனால் நமக்கு குருவாக இருப்பவர்கள் , அவரை தண்டிக்காதே என கட்டளை இட்டால், வேறுவழியின்றி, நமக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், குருவின் வார்த்தையை மீறாமல் , தண்டிக்காமல் இருப்போம். அதுபோல் , சனியின் அதிபதியான கால பைரவரை வழிபடுவது, சனியின் தோஷத்தை நிச்சயம் குறைக்கும்.

2.சனிக்கிழமை காலை, சனி ஹோரையில், காலபைரவருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவது, தோஷத்தைக குறைக்கும்.

3. மண் அகல் விளக்கில் உபயோகப்படுத்தாத, காட்டான் சிவப்புத் துணியில், சிறிதளவு மிளகை கட்டி, நல்லெண்ணெய் ஊற்றி , சனிக்கிழமை, சனி ஓரையிலோ அல்லது சனிக்கிழமை ராகு கால நேரத்திலோ விளக்கேற்றி, காலபைரவர் காயத்ரி மந்திரத்தை 11 முறை கூறிவழிபட்டு, சிவன் கோயிலில் உள்ள சிவனையும் வழிபட்டு வர, தோஷம் நிச்சயமாக குறையும்.

4.தினசரி விநாயகப் பெருமானை வீட்டிலும் ,கோயிலிலும் வழிபடுவது சனி தோஷத்தை குறைக்கும். சங்கடகர சதுர்த்தி விரதம் இருப்பது நல்லது.

5. அனுமன் சாலிசா தினமும் படிக்கலாம்.

6. தினசரி சுந்தரகாண்டத்தில் ஒரு சர்க்கம் (பகுதி) பாராயணம் செய்யலாம்.

7.நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஸ்ரீராமஜெயம் மனதிற்குள் சொல்லலாம் அல்லது எழுதலாம்.

8. பிரதோஷ பூஜையில் கலந்து கொள்பவர்களை, சனிபகவான் எந்தவிதத்திலும் பெரிய அளவில் துன்புறுத்துவதில்லை.

9. குலதெய்வக் கோயிலுக்கு மாதம் ஒருமுறையோ அல்லது குறைந்தது வருடத்திற்கு ஒருமுறையாவது சென்று வருவது நல்ல பலனைக் கொடுக்கும் .சனி தோசம் அண்டாது. தினசரி ஒரு நிமிடமாவது குலதெய்வத்தை பாராயணம் செய்பவர்களுக்கு, சனியின் தாக்கம் பெரிய அளவில் பாதிப்பை தராது.

10.முறையாக திதி தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களை வழிபடுவார்களையும், ஏழைகளுக்கும், வயதானவர்களுக்கும், உடல் ஊனமுற்றவர்களுக்கும், தங்களால் முடிந்த உதவிகளை செய்பவர்களுக்கு, சனி தோஷம் பெரிய அளவில் பாதிப்பை கொடுக்காது.

11.எந்த உதவியும் மற்றவருக்கு செய்ய முடியாவிட்டாலும், கைப்பிடி அளவு அரிசியை, எறும்புப் புற்றில் தூவலாம். இது சனி தோஷத்தை நீக்க சக்திவாய்ந்த பரிகாரம்.

12.நீதி நேர்மையுடன் வாழ்பவர்களையும், மனசாட்சிக்கு பயந்து வாழ்பவர்களையும், சனிபகவான் பெரிய அளவில் தண்டிப்பதில்லை. சுருக்கமாக சொன்னால் நேர்மையாக வாழ்பவர்களை, சனிபகவான் பெரிய அளவில் எந்தவிதத்திலும் தொந்தரவு படுத்துவதில்லை. லேசாக பட்டி ,டிங்கரிங் பார்த்து அனுப்பிவிடுவார்.

தவறுகள் வாழ்க்கையில் கடுமையாக செய்திருந்தால், அவர்களை, சனி, அவருடைய ஆதிக்க காலத்தில், கரும்பு மிஷினில் ,அகப்பட்ட கரும்பை போல் பிழிந்து எடுத்து விடுவார்.

கிட்னி, சட்னி ஆகாம இருக்க, Wanted வரக்கூடிய தேவையில்லாத ( மது,மாது,சூது) போன்ற கெட்ட பழக்கங்களை ,ஜோதிடரின் அறிவுரைப்படி ,ஆரம்பத்திலேயே அண்டவிடாமல், களை எடுப்பது நல்லது.

இல்லைன்னா சனியின் ஆதிக்க காலத்தில், படுக்க வெச்சு, வாயில நெல்லு குத்திட்டு போயிரும்.

பாவ தொடர்பு பெற்ற சனி, ராகு திசை, அட்டமாதிபதி திசையில் வரும் 71/2 ,அட்டம சனி, வேணாம்ம்ம் விட்டுறுறுறு உயிர்நாடிடிடி.

அடே ரத்த ஓட்டமெல்லாம் நிக்குதுடா என்று சொல்வதைப்போல், சனியின் ஆதிக்க காலத்தில் ,உயிர் மட்டுமே உடலில் ஒட்டிக் கொண்டிருக்கும். அந்த அளவு கஜகஜவென கசக்கி பிழிந்து விடுவார்.

அதனால் வாழ்வும், தாழ்வும் உங்கள் கையிலே உள்ளது . உங்களை ,நீங்கள் தான் நெறிப்படுத்தி கொள்ள வேண்டும்.

  • 487
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்