·   ·  156 posts
  •  ·  0 friends

இலங்கையின் விவசாயத் துறை தொடர்பில் அமெரிக்கா விசேட கலந்துரையாடல்.

இலங்கையின் விவசாயத் துறைக்கு அமெரிக்க விவசாயத் திணைக்களம் வழங்கும் ஆதரவு தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளரான அலெக்சிஸ் டெய்லர், அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் ஆகியோர் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஏனைய சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளை நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பில் சந்தித்திருந்தனர்.

அதிகரித்த உணவுப் பாதுகாப்பை ஊக்குவித்தல் மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழுவதை அதிகரிப்பதற்கு இலங்கையின் விவசாய அபிவிருத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கான அமெரிக்காவின் ஆதரவு இதன்போது கோடிட்டுக்காட்டப்பட்டது.

சுற்றுச்சூழலுகேற்ற மற்றும் மேம்படுத்தப்பட்ட சந்தை இணைப்புகள் ஊடாக உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலையுடன் தொடர்புடைய சவால்களுக்கு எதிராக மீண்டெழும் தன்மையினை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும் 2024 Food for Progress எனும் முன்முயற்சியில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கின்றமையும் உறுதிப்படுத்தப்பட்டது.

இலங்கையில் 15,000 இற்கும் மேற்பட்ட பாற்பண்ணையாளர்கள் தங்கள் பாலுற்பத்தியை மேம்படுத்துவதற்கு உதவிசெய்த 27.5 மில்லியன் டொலர் பெறுமதியுடைய மார்கெட் ஓரியென்டட் டெய்ரி ( Market-Oriented Dairy) எனும் செயற்திட்டம் தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.

எரிசக்தி நுகர்வினைக் குறைக்கும் வகையிலான கால்நடை வளர்ப்பு மற்றும் தீவன நுகர்வு உத்திகள் தொடர்பாக விரிவான பயிற்சியினை வழங்குவதன் மூலம் பாற்பண்ணையாளர்கள் காலநிலை மாற்றங்களுக்கு இசைவாக்கமடைவதை மேம்படுத்துவதே அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் பாற்பண்ணை செயற்திட்ட இலக்காக காணப்படுகின்றது.

மேலும், கல்வி அமைச்சின் பங்காண்மையுடன் சேவ் த சில்ட்ரன் அமைப்பினால் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் McGovern-Dole செயற்றிட்டமானது 2018 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதிலுமுள்ள சுமார் 100,000 ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு நாளாந்த உணவை வழங்கியுள்ளது.

பதுளை, கொழும்பு, கிளிநொச்சி, மொனராகலை, முல்லைத்தீவு, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் திருகோணமலை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் பாடசாலைகளுக்கு உணவு வழகப்படுகின்றது.

ஏற்பாடுகளை மேலும் அதிகரிப்பதற்காக 32.5 மில்லியன் டொலர் பெறுமதியான ஐந்தாண்டு செயற்திட்ட விரிவாக்க நடவடிக்கையிலும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

ஸ்திரத்தன்மையை பேணுவதற்கு எமது பரந்த இலக்கின் ஒரு பகுதியாக அமெரிக்க விவசாயத் திணைக்களத்தின் ஊடாக இலங்கையில் உணவுப் பாதுகாப்பினை மேம்படுத்துவதற்கு அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது.

இலங்கையின் தேசிய பாடசாலை உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளடக்கப்பட்டுள்ள சுமார் 200,000 மாணவர்களுக்கு உணவு வழங்குவதே இந்த செயற்றிட்டத்தின் இலக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.

000

  • 245
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்