- · 0 friends
-
நாடு முழுமையாக இன்னும் மீளவில்லை - முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென மத்திய வங்கியின் ஆளுநர் வலியுறுத்து
சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் இடம்பெற்ற மோசமான பொருளாதார நெருக்கடியிலிருந்து, நாடு முழுமையாக இன்னும் மீளவில்லையென்றும், தற்போது நடைமுறைப்படுத்தப்படும் திட்டமிட்ட முக்கியமான சீர்திருத்தங்களை எந்தவகையிலும் மாற்றியமைக்கக் கூடாதென்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் தலைமையகத்தில் நேற்று (07) நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போதே ஆளுநர் இவ்விடயங்களை குறிப்பிட்டார்.
நாட்டின் பொருளாதாரத்தை 2022 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது.இருந்தபோதிலும், அதனை மிகவும் வெற்றிகரமான மற்றும் நிரந்தரமான பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு மேம்படுத்தும் போது தவறான திட்டமிடப்பட்ட கொள்கைகளை கையாளக்கூடாது .
இச்சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு பரந்த அரசியல் மற்றும் சமூக இணக்கப்பாட்டின் அடிப்படையில் பொருளாதார சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது.
இதனுடாக நிலையான வளர்ச்சியை ஏற்படுத்தி பொது மக்களின் சேம நலன்கள் மேம்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க புதிய சட்டத்துக்கமைவாக இலங்கை மத்திய வங்கியின் 2023 வருடாந்த பொருளாதார விளக்கவுரை, மற்றும் நிதி அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே ஆளுநர் இந்த விடயங்களை தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் டி.எம்.ஜே.வை பி.பெர்னாண்டோ , முனைவர், கலாநிதி சி.அமரசேகர, பொருளாதார ஆராய்வு பணிப்பாளர் கலாநிதி எஸ்.ஜெகஜீவன், பொருளாதார ஆராய்வு மேலதிகப் பணிப்பாளர் கலாநிதி எல்.ஆர்.சி.பத்பெரிய ஆகியோரும் கருத்துத் தெரிவித்திரந்தமை குறிப்பிடத்தக்கது
000
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·