- · 5 friends
-
I
கம்ப்யூட்டர் கீபோர்டில் F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன் தெரியுமா?
கம்ப்யூட்டர் (Computer) பயன்படுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம்.
கம்ப்யூட்டர் என்று சொல்லும் பொழுது லேப்டாப், டெஸ்க்டாப் என்று இரண்டுமே வந்துவிடுகிறது. கம்ப்யூட்டரை இயக்க கீபோர்ட் முக்கியமானது. கீபோர்ட் உதவி இல்லாமல் ஒரு கம்ப்யூட்டரை இயக்குவது அவ்வளவு சுலபமான காரியமாக இருக்காது. கீபோர்ட் தான் கம்ப்யூட்டரின் இன்புட் சாதனமாக செயல்படுகிறது.
கம்ப்யூட்டர் கீபோர்டில் மொத்தம் எத்தனை கீஸ்கள் இருக்கிறது தெரியுமா? ஒரு கீபோர்டில் மட்டும் மொத்தம் 104 கீஸ்கள் இருக்கிறது. என்ன தான் ஒரு கீபோர்டில் 104 கீஸ்கள் வழங்கப்பட்டிருந்தாலும், உலகளவில் உள்ள எல்லா கீபோர்ட்களிலும் உள்ள F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இதை பெரும்பாலானோர் கவனித்திருப்பீர்கள். இன்னும் பெரும்பாலானோர் இப்போது வரை இதை கவனித்திருக்கமாடீர்கள். இந்த F மற்றும் J ஆகிய இரண்டு கீஸ்களில் மட்டுமே ஏன் இந்த கோடு வழங்கப்பட்டுள்ளது? இதற்கான காரணம் என்ன?
கீபோர்டில் உள்ள எல்லா கீஸ்களையும் எளிதாக அணுக அனுமதிக்கும் முறைக்கு பெயர் தான் ஹோம் ரோ கீ பொசிஷன் (home row key position) ஆகும்.
இந்த பொசிஷனில் உங்கள் கைகளை சரியாக வைப்பதற்கு தான் F மற்றும் J கீ-களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த பொசிஷனில் உங்கள் விரல்களை வைப்பது தான் சரியான டைப்பிங் முறை என்றும் கூறப்படுகிறது. உங்கள் கைவிரல்களை F மற்றும் J கீஸ்களில் ஆள்காட்டி விரலை வைத்து, அதற்கு பின் மற்ற 3 விரல்களையும் வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாக பார்க்கப்படுகிறது.
இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், A, S, D, மற்றும் F கீகளில் உங்கள் இடது கைவிரல்களும், J, K, L, மற்றும் செமிகோலன் (;) கீகளில் உங்கள் வலது கைவிரகளை வைப்பது தான் சரியான டைப்பிங் முறையாகும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் கீபோர்டில் உள்ள அணைத்து கீகளையும் உங்களால் எளிதாக அணுக முடியும் மற்றும் வேகமான டைப்பிங்கிற்கும் இது தான் சிறந்த முறையாக வலியுறுத்தப்படுகிறது.
இதை தவிர்த்து இந்த F மற்றும் J கீ-களில் மட்டும் காணப்படும் சிறிய கோடு போன்ற மேடு பார்வையற்றவர்கள் அவர்களின் கைகளை சரியாக கீபோர்டில் பொசிஷன் செய்ய உதவுகிறது. இந்த இரண்டு காரணங்களுக்காக மட்டுமே நம்முடைய கீபோர்ட்களில் உள்ள F மற்றும் J கீஸ்களில் மட்டும் ஒரு சிறிய கோடு போன்ற மேடு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நீங்கள் தெரிந்து கொண்ட இந்த பயனுள்ள தகவலை மற்ற நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·