-
- 2 friends
விரிசல் இல்லாத பஞ்சு போன்ற பூரண கொழுக்கட்டை
கொழுக்கட்டை இல்லாத விநாயகர் சதுர்த்தியே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு முக்கியமான இந்த கொழுக்கட்டையை பலரும் பல வகைகளில் செய்வார்கள்.இதில் பிடி கொழுக்கட்டை பூரண கொழுக்கட்டை என எத்தனையோ வகைகள் உண்டு.
பூரண கொழுக்கட்டையை ரொம்ப சுலபமாக அதே நேரத்தில் ருசியாக எப்படி செய்வது என்று தான் தெரிந்து கொள்ளப் போகிறோம். விரிசல் இல்லாத பூரண கொழுக்கட்டை செய்ய முதலில் அரை கப் பொட்டுக்கடலை இரண்டு ஏலக்காவை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பவுடராக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்து அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் முக்கால் கப் அளவு வெல்லத்தை பொடித்து சேர்த்து வெல்லம் மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி வெல்லம் கட்டிகள் இல்லாமல் கரையும் வரை கொதிக்க விட்டு அடுப்பை அணைத்து விடுங்கள். அடுத்து அடுப்பில் ஒரு பேன் வைத்து இரண்டு டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி அரைக் கப் துருவிய தேங்காயை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு நாம் ஏற்கனவே கொதிக்க வைத்து இருக்கும் வெல்லத் தண்ணீரை வடிகட்டி இதில் சேர்த்த பிறகு அரைத்து வைத்த பொட்டுக்கடலை மாவையும் இதில் சேர்த்து சிறிது நேரம் கைவிடாமல் கலந்த பிறகு கெட்டியானதும் அடுப்பை அணைத்து விடுங்கள். கொழுக்கட்டைக்கு தேவையான பூரணம் தயாராகிவிட்டது.
அடுத்து கொழுக்கட்டைக்கான மாவு. பவுலில் ஒரு கப் கொழுக்கட்டை மாவு எடுத்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடர், ஒரு சிட்டிகை உப்பு, ஒரு ஸ்பூன் நெய் சேர்த்த பிறகு தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கரண்டி வைத்து மாவை கலந்து விடுங்கள். தண்ணீர் சூடாக இருக்கும் எனவே கை வைக்காமல் கரண்டி வைத்து கலந்து விடுங்கள்.
மாவு ரொம்ப தண்ணீராக கரைத்து விடாமல் நல்ல கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் கை பொறுக்கும் சூடில் இருக்கும் போதே நன்றாக பிசைந்து வைத்து விடுங்கள். அடுத்து ஒரு சிறிய வாழை இலையில் நெய் தடவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தயார் செய்து வைத்திருக்கும் கொழுக்கட்டை மாவை சின்ன உருண்டையாக எடுத்து லேசாக தட்டிய பிறகு பூரணத்தை கொஞ்சமாக எடுத்து அதில் வைத்து இரண்டு புறமும் மாவை ஒன்றாக சேர்த்து விட அருமையான கொழுக்கட்டை தயார்.
கொழுக்கட்டையை வேக வைக்க இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதித்த பிறகு இட்லி தட்டை வைத்து நீங்கள் தயார் செய்து வைத்து இந்த கொழுக்கட்டைகளை வைத்து மூன்று நிமிடம் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்து விடுங்கள். நல்ல பஞ்சு போல மிருதுவான அதே நேரத்தில் இனிப்பான சுவை மிகுந்த பூரண கொழுக்கட்டை தயார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·