- · 5 friends
-
I

தியாக மனப்பான்மை (உண்மைச்சம்பவம்)
பல வவருடங்களுக்கு முன் பிலடெபியா நகரில் மழையும் புயலும் கொண்ட ஒரு இரவில் ஒரு வயது முதிர்ந்த தம்பதியினர் ஓர் சிறிய விடுதியை அடைகின்றனர். அங்கு அவர்கள் வரவேற்பு அறையில் இருந்த ஒரு கிளெர்க்கிடம் அந்த இரவு தங்கள் தங்க ஒரு அறை கொடுக்குமாறு கேட்டார்கள் .
நல்ல விருந்தோம்பல் துறையில் அனுபவம் பெற்ற அந்த நபர் அவர்களை புன்னகையோடு வரவேற்றான். மேலும் அந்த வாரம் அந்த நகரில் மிகப்பெரிய மாநாடு நடப்பதால் அனைத்து அறைகளும் ஏற்கனவே விற்கப்பட்டன என்று மிகுந்த பணிவன்புடன் கூறினார் .
சற்றே ஏமாற்றம் அடைந்த தம்பதியர் வெளியே செல்ல ஆயத்தம் ஆக அந்த நல்ல உள்ளம் கொண்ட கிளார்க் அவர்களை சற்றே நிறுத்தி ஐயா! மணி 1ன்றை கடந்து விட்டது மேலும் வெளியில் மழையும் புயலுமாக உள்ளது .இந்த நேரத்தில் தங்களை வெளியே அனுப்ப எனக்கு மனமில்லை .
தங்களுக்கு சரி என்றால் என்னுடைய அறையில் நீங்கள் தங்கிக்கொள்ளலாம் ஆனால் அது மிகப்பெரிய சொகுசு அரை இல்லை என்று அன்புடன் எடுத்து உரைத்தான்.
சற்றே அந்த தம்பதியினர் தயக்கம் காட்ட அவரோ . என்னை பற்றி கவலை வேண்டாம் நான் சமாளித்து கொள்வேன் என்று சொல்ல அந்த தம்பதியினர் அரை மனதுடன் அறைக்கு சென்றனர்.
மறுநாள் காலை நல்ல உறக்கம் ஓய்வுக்கு பின் விடுதியின் வரவேற்பு அறை வந்த அவர்கள் அந்த விடுதி கிளர்க்கிடம் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.
சற்றே உணர்ச்சிவசப்பட்ட அந்த பெரியவர் இந்த காலத்தில் அன்பும் உதவி செய்யும் உள்ளம் கொண்ட நபரை சந்திப்பது மிக அபூர்வம் என்றார் . இந்த துறையில் நீ சிறந்து வருவாய் என்றும் நீ இந்த சிறிய விடுதியில் இருக்க வேண்டியன் அல்ல என்று அன்புடன் கூறினார்.
மேலும் நான் ஒரு பெரிய விடுதி கட்டி நீதான் அதற்க்கு மேலாளர் என்று சொல்லிவிட்டு விடைபெற்றார்.
இரண்டு வருடம் உருண்டு ஓடியது. அந்த அன்பு உள்ளம் கொண்ட அந்த சிறிய விடுதியின் கிளார்க் அந்த விடுதியை செவ்வனே நடத்தி கொண்டிருந்தார்.
அன்று அவருக்கு ஒரு கடிதம் வந்தது.ஆவலுடன் பிரித்து படித்த அந்த கிளார்க் சற்றே குழப்பத்துடன் மகிழ்ச்சி அடைந்தார். அந்த கடிதத்தில் இரண்டு வருடத்திற்கு முன்பு நடைபெற்ற அந்த நிகழ்வை குறிப்பிட்டு தன்னை வந்து நியூயார்க்கில் சந்திக்குமாறு விமான டிக்கெட் அனுப்பிவைத்து இருந்தார்.
நன்றியை தெரிவித்ததோடு கட்டாயம் வருமாறு அந்த பெரியவர் அன்பு கட்டளை இட்டிருந்தார்.
நியூயார்க் சென்ற அந்த நபர் அந்த பெரியவரை சந்தித்தார்.
அங்கு புதிதாக விண்ணைமுட்டும்படி சிகப்பு கற்களால் கட்டப்பட்ட அந்த பெரிய கட்டடத்தை காட்டினார்.
இனி அந்த பெரிய நட்சத்திர விடுதிக்கு நீங்தான் மேலாளர் என்று உரைத்தார்.‘
அந்த வயதான பெரியவர் பெயர் வில்லியம் வால்டோர்ப் ஆஸ்டர் .
அந்த பெரிய கட்டிடம் வால்டோர்ப் அஸ்டோரியா நட்சத்திர விடுதி.
அந்த நட்சத்திர விடுதியின் முதல் மேலாளர் ஜார்ஜ் .சி. போல்டட் ( நம் அன்பு கிளார்க் )
இந்த கதை ஒரு சாதாரண சிறிய விடுதியின் கிளார்க் தன அன்பும் உதவும் தன்னலமில்லா தியாக மனப்பான்மை மற்றும் செயல் கட்டாயம் புகழின் உச்சிக்கு உங்களை சேர்க்கும் என்பதற்கு பெரிய அடையாளம்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·