- · 5 friends
-
I

அக்பர் கூறிய விளக்கம் (குட்டிக்கதை)
அக்பரை காண வெளிநாட்டில் இருந்து அறிஞர் வந்தார். அப்போது அக்பர் அரண்மனையிலிருந்த சில அலுவலர்களோடு சதுரங்கம் விளையாடிக்கொண்டிருந்தார்.
இறுக்கமான முகத்தோடு விரைப்பாக பாதுஷா இருப்பார் என்று எதிர்பார்த்து வந்த அந்த அறிஞருக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அவர் உடல்மொழியைக் கண்டு கொண்ட அக்பர் அந்த அறையின் மூலையில் இருந்த வில்லைக்காட்டி “இந்த வில் எப்போதும் நாண் ஏற்றப்பட்டிருந்தால் என்ன ஆகும்?" என்று கேட்டார்.
வந்தவர், "வில் முறிந்துபோகும்" என்றார். "நாண் ஏற்றப்படாமலே இருந்தால் என்ன ஆகும்" என்று வினவினார் அக்பர். "வில் பயன்படாமல் போய்விடும்" என்றார் அந்த அறிஞர்.
அக்பர், "தேவைப்படும்போது நாண் ஏற்றுவதைப்போல வேண்டியபோது கடுமையாகவும், மற்ற நேரங்களில் கனிவாகவும் இருப்பதுதான் நல்ல ஆட்சியாளரின் அழகு" என்று குறிப்பிட்டார்.
பணியிலும் குடும்பத்திலும் இந்த சம்பவத்தை நினைவில் கொள்ளுங்கள் சிறந்த மனிதராக ஏற்றுக்கொள்ளப்படுவீர்கள்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·