- · 5 friends
-
I
தலைமுடி நன்கு வளர இயற்கை வரமான ஆளி விதை
தலைமுடி வளர்ச்சியை தூண்ட இயற்கை நமக்கு பல அற்புதமான வரங்களை தந்திருக்கிறது. இதையெல்லாம் நாம் சரியாக பயன்படுத்தினாலே தலை முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்து விடலாம்.
போன தலைமுறையில் எல்லாம் முடி வளர வேண்டி தனியாக எந்த ஒரு கெமிக்கல் கலந்த பொருட்களையும் பயன்படுத்தி இருக்கவில்லை. இயற்கையான முறையில் கிடைப்பவற்றை பயன்படுத்தி தான் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தி கொண்டார்கள்.
இன்றைய கால சூழ்நிலை வேண்டுமானால் அதற்கு ஒத்துழைக்காமல் இருக்கலாம். ஆனால் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் அழகிற்கும் நாம் தான் சிறிது மெனக்கிட வேண்டும். இதற்கென நீங்கள் செலவு எதுவும் செய்யத் தேவையில்லை. உங்களுடைய நேரத்தில் உங்களுக்காக கொஞ்சம் நேரம் ஒதுக்கி நல்ல உணவு தூக்கம் ஆரோக்கியமான சூழ்நிலை இவற்றை உருவாக்கிக் கொண்டாலே போதும்.
ஆளி விதையில் முடி வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளது. குறிப்பாக முடியின் வேர்க்கால்களில் இருந்து முடி வலுவாக வெளிவர தேவையான விட்டமின் ஈ, ஒமேகா 3 போன்ற சத்துக்கள் இந்த ஆளி விதையில் அதிகமாக உள்ளது. இது தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்வதுடன் முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடிய ஆற்றலும் இதற்கு அதிகம் உண்டு.
தலைமுடி வளர்ச்சியை முதலில் தடுப்பது முடி வெடிப்பு தான். இது வந்து விட்டால் தொடர்ந்து முடி வளராது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த ஆளி விதியில் உள்ள புரதச்சத்துக்கள் இந்த முடி வெடிப்பினை அறவே தடுத்து நிறுத்துவதோடு முடி நல்ல பளபளப்பாக சைனிங் ஆகவும் இருக்கும். இது முடி வறண்டு போகாமலும் காக்கும்.
ஆளி விதையில் முடி வளர்ச்சிக்கு தேவையான இத்தனை சத்துக்கள் அடங்கி இருக்கிறது என்பது எத்தனை பெரிய ஆச்சரியம். இது உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய உணவாகவும் இதை சில வழிமுறைகளின் மூலம் எடுத்துக் கொள்ளலாம். - ஆளி விதையை தலைமுடிக்கு எப்படி பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.
மூன்று டம்ளர் தண்ணீர் எடுத்து நன்றாக சூடு படுத்திக் கொள்ளுங்கள். இந்த தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் மூன்று ஸ்பூன் ஆளி விதையை இதில் சேர்த்து நீங்கள் ஊற்றிய தண்ணீர் ஒரு டம்ளர் ஆக குறையும் வரை நன்றாக கொதிக்க விட வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.
இந்த ஆளி விதை சேர்த்த தண்ணீர் ஜெல்லி பதத்திற்கு இருக்கும். இது ஓரளவிற்கு சூடாக இருக்கும் போதே நீங்கள் வடிகட்டியில் இதை தனியாக வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். ஆளி விதை கொதித்த தண்ணீர் நன்றாக ஆறும் வரை விட்டு விட்டால் அதன் பிறகு வடிகட்ட சிரமமாக இருக்கும். ஆகையால் கொஞ்சம் இளம் சூட்டாக இருக்கும் பொழுது வடிகட்டி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஜெல்லை உங்கள் முடியின் வேர்க்கால்களில் தேய்த்து நன்றாக பத்து நிமிடம் வரை மசாஜ் செய்த பின்பு ஒரு மணி நேரம் உங்கள் தலையில் அப்படியே ஊற விடுங்கள். இது இவ்வளவு நேரம் உங்கள் தலையில் ஊறுவதும் மிகவும் முக்கியம். அதன் பிறகு கெமிக்கல் கலந்த ஷாம்புகள் எதையும் பயன்படுத்தாமல் சீயக்காய் சேர்த்து தலைமுடியை நன்றாக அலசி விடுங்கள். ஆளி விதை ஜெல் பதத்திற்கு இருப்பதால் தலைமுடியை சீயக்காய் கொண்டு அலசுவதும் சுலபமாகவே இருக்கும். இந்த ஆளி விதை பேக்கை வாரம் இரு முறை அல்லது ஒரு முறை யாவது பயன்படுத்தி வாருங்கள் உங்கள் முடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·