- · 5 friends
-
I
கருமை நிறத்தை சிவப்பாக மாற்றக்கூடிய சீக்ரெட் டிப்ஸ்
இயற்கையிலேயே கருமை நிறமாக உள்ளவர்களை நல்ல நிறமாக மாற வேண்டும் என்றால் அது கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்துவதாலோ அல்லது அழகு நிலையம் சென்று அழகு படுத்திக் கொள்வதாலும் மாறலாம். அதுவும் நிரந்தரம் இல்லை.
கருமை நிறத்தை கூட நல்ல சிகப்பாக மாற்ற இயற்கையான முறையிலே அதுவும் அதிக செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கும் பொருளை வைத்து பண்ணலாம் என்றால் எத்தனை நல்ல விஷயம். கருமை நிறத்தை போக்கி முகத்தை வெள்ளையாக மாற்றும் பேஸ் பேக் தயாரிக்க நமக்கு தேவையான பொருள் ஒன்று உளுத்தம் பருப்பு, மற்றொன்று தேன்.
இவை இரண்டை வைத்து தான் இந்த பேக்கை நாம் தயார் செய்யப் போகிறோம். இந்த பேக் தயாரிக்க முதலில் ஒரு கைப்பிடி அளவு உளுத்தம் பருப்பு எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டு நல்ல பைன் பவுடராக அரைத்துக் ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள். இதை தேனூற்றி நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து விடுங்கள். இதற்கு நல்ல தரமான தேனாக பார்த்து வாங்கி சேர்ப்பது நல்லது.
அப்போது தான் பலனும் அதிகமாக கிடைக்கும். அவ்வளவு தான் முகத்தை நிறமாக்கியக் கூடிய பேக் தயாராகி விட்டது. இதற்கென அதிக பொருள் செலவும் இல்லை நேரமும் இல்லை. தேன் ஊற்றி கலந்திருப்பதால் ப்ரிட்ஜில் வைக்க வேண்டிய அவசியம் இல்லை. தேனூற்றி கலந்த எந்த பொருளும் வீணாகாது எனவே அதை வெளியிலே கூட வைத்து விடலாம்.
இந்த பேக்கை நீங்கள் தினமும் காலை அல்லது இரவு உறங்க செல்லும் முன் உங்களுக்கு எப்போது நேரம் கிடைக்கிறதோ அப்போது கொஞ்சமாக கைகளில் எடுத்துக் கொள்ளுங்கள். தேனூற்றி கலந்ததால் கெட்டியாக மாறியிருக்கும். ஆகையால் கைகளில் எடுத்து கொஞ்சம் நேரம் கைகளாலே பிசைந்தால் பேஸ்ட் பதத்திற்கு வந்து விடும். அதன் பிறகு உங்கள் முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் வரை இதை அப்படியே விட்ட பின் கைகளில் தண்ணீர் தொட்டு முகத்தை மசாஜ் செய்து அலம்பி விடுங்கள்.
இந்த பேக்கை பயன்படுத்தி வரும் போது இயற்கையிலேயே கருமை நிறமாக உள்ளவர்கள் கூட நிறம் மாற கூடிய வாய்ப்பு அதிகம். தேன் எப்போதும் முகத்திற்கு நல்ல ஒரு இளமையை தரக் கூடியது அதுமட்டுமின்றி முகச்சுருக்கத்தை நீக்கக் கூடியது. உளுந்து ஒரு நல்ல ப்ளீச்சிங் கன்டென்ட் உடையது இதை முகத்தில் தேய்க்கும் போது நிறத்தை அதிகரிக்க கூடிய ஆற்றல் இதற்கு அதிகமாகவே உண்டு. நிறம் நிச்சயமாக அதிகரிக்கும்.
அன்றாடம் வேலைக்கு செல்லும் பெண்கள் தங்கள் முகத்தை பாதுகாக்க பேஸ் பேக்கை இரவில் மட்டும் போட்டு விட்டாலே போதும். அவர்கள் முகம் என்றுமே பளபளப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். இந்த பேக்கை தினமும் தயாரித்து போட வேண்டும் என்று நினைப்பவர்கள் இதை சிறிது பாலில் ஊற வைத்து அதன் பிறகு அரைத்து அப்படியே முகத்தில் போட்டுக் கொள்ளலாம் அல்லது ரோஸ் வாட்டர் கலந்தும் போட்டுக் கொள்ளலாம். இதில் சேர்க்கும் பொருள்கள் எல்லாம் தரமானதாக இருக்க வேண்டும். நல்ல ரோஸ் வாட்டர், பசும்பால் என இப்படி இருப்பது மிகவும் முக்கியம். இனி நாம கருப்பா இருக்கும்ன்னு யாரும் கவலைப்படவே வேண்டாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·