- · 5 friends
-
I
கெமிக்கல் இல்லாத இயற்கையான நறுமணமுள்ள சென்ட்
நம்முடைய உடம்பு வாசமாகவும், துர்நாற்றம் வீசாமலும், அதேசமயம் கிருமி தொற்று இல்லாமலும் இருக்க வேண்டும். முழுமையான நிறைவான அழகு என்பது இதில் தான் இருக்கிறது. நீங்கள் ஆரோக்கியம் சேர்ந்த அழகுடன் வாசமாக வலம் வர ஒரு நலுங்கு மாவு ரெமெடியை தெரிந்து கொள்ளலாம்.
தினமும் குளிக்கும் போது இதை பயன்படுத்தி வந்தால், உங்கள் அழகு, தேவதைகளுக்கு சமமாக இருக்கும். வாசம் நிறைந்த நலுங்கு மாவு என்பது பாரம்பரியமாக ஒவ்வொருவர் வீட்டில், ஒவ்வொரு முறைப்படி அரைக்கப்படும். இன்று நாம் பார்க்கக்கூடிய நலுங்கு மாவு ஒருவகை.
இந்த நலுங்கு மாவு அரைக்க பன்னீர் ரோஜா இதழ்கள் காய்ந்தது 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், விரலி மஞ்சள் 50 கிராம் கோரைக்கிழங்கு 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம், கார்போக அரிசி 50 கிராம், செண்பக மொட்டு 50 கிராம். இது எல்லாமே மூலிகை பொருட்கள் தனித்தனியாக நாட்டு மருந்து கடைகளில் காய்ந்த பொருட்களாகவும் கிடைக்கும்.
அரைத்த பொடியாகவும் கிடைக்கும் உங்களுக்கு எது தேவையோ அதை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த எல்லா பொடியையும் சேர்த்து கலந்து வச்சுக்கணும். இதனுடன் நாம் 500 கிராம் அளவு பச்சைப்பயிறு மாவை கலக்க வேண்டும். பச்சை பயிறு மாவு உங்கள் சருமத்திற்கு செட்டாகாதா, முல்தானி மெட்டி பொடியை கலக்கலாம், அல்லது கடலை மாவை கலந்து கொள்ளலாம்.
உடம்பு முழுவதும் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் தேய்த்து மசால் செய்து கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த நலுங்கு மாவை கொஞ்சமாக சின்ன கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி, கரைத்து அதை எடுத்து உடம்பு முழுவதும் தேய்த்து பூசி, வட்ட வடிவில் மசாஜ் செய்து குளித்தால் சருமத்தில் எந்த ஒரு கிருமி தொற்றும், நோய் தொற்றும் நெருங்காது.
துர்நாற்றம் வீசாது. உங்கள் சருமம் மென்மையாக பாதுகாப்பாக இருக்கும். சரி இதில் இவ்வளவு நல்ல விஷயம் இருக்கே நம்முடைய முகத்தில் இதை பூசிக்கொள்ளக் கூடாது. உடம்பை விட, முகத்தில் இருக்கும் சருமம் ரொம்பவும் மென்மையானது. இப்படிப்பட்ட ஸ்க்ரப்பரை நம்முடைய முகத்தில் தினமும் தேய்த்து குளிக்கும் போது முகத்தில் இருக்கும் சருமம் பாதிப்படையும்.
முகத்திற்கு தேவை என்றால் நீங்கள் தனியாக நலங்கு மாவு அரைத்து வைத்துக் கொள்ளுங்கள். உடம்பில் பூசி குளிக்க கூடிய இந்த நலுங்கு மாவை தினமும் தேய்த்துக் குளிக்க முடியவில்லை என்றாலும் வாரத்தில் மூன்று நாட்களாவது பயன்படுத்த வேண்டும். குறிப்பாக அக்குள் பகுதி, தொடை இடுக்கு பகுதி, கழுத்து பகுதி, போன்ற இடங்களில் எல்லாம் சரும தொற்று வராமல் இருக்க வேண்டும் என்றால் இந்த மாவு பெண்களுக்கு ஏற்றதாகும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·