·   ·  1465 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா? கெட்டதா?

சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு. சிலர் வாரம் ஒரு முறை அல்லது 2 முறை மட்டுமே தலைக்கு தண்ணீரை ஊற்றி குளிப்பார்கள். தினமும் தலைக்கு குளித்தால் நல்லதா? அல்லது கெட்டதா? எப்படி தலைக்கு குளிக்க வேண்டும்? எப்படி தலைமுடியை பராமரிக்க வேண்டும்? என்பதை காணலாம். 

உச்சந்தலையில் நீங்கள் ஊற்றும் தண்ணீர் தான் உடல் முழுவதும் இருக்கும் உஷ்ணத்தை தணிக்கிறது எனவே தலைக்கு குளிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல! நீங்கள் தலைக்கு குளிக்கும் முறையை வைத்து தான் உங்களுடைய தலைமுடியின் வளர்ச்சியும், உடல் நலமும் அடங்கி உள்ளது 

இதற்கு நீங்கள் கட்டாயம் முக்கியத்துவம் கொடுத்து தான் ஆக வேண்டும். உடலுக்கு உள்ளே எடுத்துக் கொள்ளும் உணவு எவ்வளவு முக்கியமோ அதே போல உடலுக்கு வெளியில் தலையில் நாம் ஊற்றும் தண்ணீரும் மிகவும் முக்கியமானது. தினமும் தலைக்கு குளிப்பவர்கள் அவர்களுடைய உடல் நிலையை பொறுத்து தான் அதை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். 

உங்களுடைய முடி ரொம்பவும் மெல்லியதாக மற்றும் அதிக வியர்வை உடையதாக இருந்தால், பொடுகு, அரிப்பு, உஷ்ணம் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டால் நீங்கள் கட்டாயம் தினமும் குளிக்கலாம் தவறில்லை. அதுவே உங்களுடைய முடி ரொம்பவும் கடினமாகவும், வறண்ட தன்மையுடனும் இருந்தால் நீங்கள் தினமும் தலைக்கு குளிப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். 

வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே தலைக்கு தண்ணீர் ஊற்றுவேன் என்று சொல்பவர்களும் தவறான முறையைத் தான் கடைப்பிடிக்கிறீர்கள். முடிந்தவரை உங்களுக்கு தலைமுடி சுத்தமாக இல்லை என்று தோன்றும் பொழுதெல்லாம் தலைக்கு குளிக்க வேண்டும், இதனால் உடல் உஷ்ணமும் தணியும், தலைமுடியும் பராமரிக்கப்படும். 

நீங்கள் எத்தனை முறை தலைக்கு குளித்தாலும் ஷாம்புவை அதிகம் ரசாயனம் இல்லாததாக தேர்ந்தெடுத்து குளிப்பது அவசியமானது. மேலும் அதை அளவாக தான் பயன்படுத்த வேண்டும். தண்ணீரில் கலந்து பின்னர் பயன்படுத்துவது நல்லது. இதனால் ரசாயன தாக்கம் குறையும். அதிகம் ஷாம்பு பயன்படுத்துபவர்களுக்கு முடி அதிகம் உடையும் மற்றும் பொடுகு தொல்லையும் அதிகரிக்கும். 

தலைக்கு ஷாம்பு பயன்படுத்தாமல் சிலர் வெறும் தண்ணீரிலேயே அலசி கொண்டிருப்பார்கள். இதுவும் தவறான முறை தான். வெளியில் சுற்றுவதால் ஏற்படக்கூடிய மாசு காரணமாக உங்களுடைய தலைமுடியில் அழுக்குகள் சேர்ந்து இருக்கும். நீங்கள் வெறும் தண்ணீரால் குளிப்பதால் இந்த அழுக்குகள் படிந்து பொடுகு தொல்லையை உண்டாகும். உங்களுடைய தலைமுடியின் தன்மை மற்றும் அதில் சேரக்கூடிய அழுக்குகள் தான் எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும்? மற்றும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டுமா? அல்லது வெறும் தண்ணீரில் அலச வேண்டுமா? என்பதை நிர்ணயிக்க வேண்டும். 

உங்களுக்கு நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நீங்கள் தலைக்கு தண்ணீர் ஊற்றினால் நல்லதல்ல! தலைமுடி சுத்தமாக இருந்தால் தான் சருமமும் பொலிவாக இருக்கும். எண்ணெய் வழியும் சருமம் கொண்டவர்கள் வாரத்திற்கு இரண்டு நாள் கண்டிப்பாக தலைகுளிப்பது நல்லது.

  • 197
  • More
Info
Category:
Created:
Updated:
Comments (0)
Login or Join to comment.
Ads
Featured Posts
தமிழ் குழந்தைகளின் பெயர்கள்
  •  ·  Yathusan
  •  · 
1 = அகரன் > முதன்மையானவன்2 = அகவி > அகம் செம்மையானவள் / அகத்தூய்மையள்3 = அகன் > ஆழ்ந்த உளத்தவன்4 = அகன் > ஆழ்ந்த உள்ளம் உடையவன்5 = அகிலன்
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய