- · 5 friends
-
I
வயதான தோற்றத்தை கொஞ்சம் காலம் தள்ளிப் போட எளிமையான குறிப்பு
சிலருக்கு 40 வயதான போதும் பார்ப்பதற்கு சின்ன பொண்ணு போல, முகத்தில் சுருக்கம் தெரியாமல் அழகாக இருப்பாங்க. சில பேர் 20 வயதில் இருக்கும்போதே வயது முதிர்ந்த தோற்றம் முகத்தில் தெரியும். வயது முதிர்ந்த தோற்றத்தை போக்க எளிமையான அழகு குறிப்பு உள்ளது. இதை நீங்கள் தொடர்ந்து இரவு தூங்க செல்வதற்கு முன்பு பின்பற்றி வந்தால் வயதான தோற்றத்தை இன்னும் கொஞ்சம் காலம் தள்ளிப் போட முடியும்.
ஆளிவிதை 2 டேபிள் ஸ்பூன், பாதாம் பருப்பு 2, பொட்டுக்கடலை 3 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நைசாக பவுடராக அரைத்துக் கொள்ள வேண்டும். இதில் கொஞ்சம் கூட தண்ணீர் படக்கூடாது. இந்த பொடி கொரகொரப்பாக இருக்கவே கூடாது. அப்படி கொரகொரப்பாக இருக்கும் பட்சத்தில் இதை சலித்து எடுத்து நன்றாக நைஸ் பவுடராக பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த பவுடர் வெளியில் வைத்தால் கூட இரண்டு வாரம் நன்றாக இருக்கும். இதை தான் அழகு குறிப்புக்கு பயன்படுத்த போகின்றோம். ஒரு சிறிய கிண்ணத்தில் 2 ஸ்பூன் அளவு நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த பவுடரை எடுத்து போட்டுக்கோங்க. இதில் நாம் ஏதாவது ஒரு பொருளை ஊற்றி கலக்க வேண்டும்.
தண்ணீர், தயிர், ரோஸ் வாட்டர், பால், அரிசி வடித்த கஞ்சி, என்று எது உங்கள் சருமத்துக்கு செட் ஆகுமோ, அந்த ஒரு திரவத்தை ஊற்றி இதை பேஸ்ட் ஆக கலந்து கொள்ளுங்கள். இரவு தூங்க செல்வதற்கு முன்பு முகத்தில் இருக்கும் மேக்கப் எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, முகத்தை கழுவி கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். கழுத்து பகுதியிலும் தடவிக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் அப்படியே விட்டால் போதும். பிறகு முகத்தை தண்ணீரில் நனைத்துக்கொண்டு, லேசாக வட்ட வடிவில் ஜென்டில் ஆக மசாஜ் செய்து முகத்தை கழுவிக் கொள்ளவும். பிறகு நீங்கள் பயன்படுத்தும் மாய்ஸ்ரைஸ் கிரீமை முகத்தில் போட்டுக் கொள்ளலாம். பிறகு தூங்க செல்லலாம். இல்லை என்றால் தேங்காய் எண்ணெயை முகத்தில் தடவலாம்.
தொடர்ந்து 5 நாட்கள் இந்த குறிப்பை பயன்படுத்தி பாருங்கள். உங்கள் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் படிப்படியாக குறைவதை உணர முடியும். 30 வயதுக்கு மேலே இருப்பவர்கள் தொடர்ந்து இந்த பேஸ் பேக்கை இரவு நேரத்தில் முகத்தில் போட்டால் உங்களுடைய முகச்சுருக்கம் குறைய தொடங்கும்.
முகத்தில் சுருக்கமே இல்லை என்பவர்களும் வாரத்தில் இரண்டு நாள் இந்த பேக்கை போட்டு வர உங்களுடைய இளமையான அழகு பாதுகாக்கப்படும். முதுமையான தோற்றம் தள்ளிப் போகும்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·