-
- 3 friends

மூலம் நட்சத்திரம் பற்றிய சில விளக்கம்
ஆனி மாதத்தில் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், சந்திரனை குருபார்வை செய்தால் நற்பலன்கள் தேடி வரும். ஆனி மூலம் அரசாளும் என்று சொல்வதைத்தான் ஆண் மூலம் அரசாளும் என்று சொல்கிறார்கள்.
மூலம் நட்சத்திரத்தில் பிறந்த பெண் சிறு வயதில் இருந்தே புத்திசாலியாக இருப்பதால், அவள் திருமணம் செய்து, வாழ்க்கை நடத்த புகுந்த வீடு செல்லும் பொழுது அங்கு தனது புத்திசாலித்தனமான நடவடிக்கையால் எல்லோரையும் கவர்ந்து விடும் தன்மை கொண்டவராக இருப்பார்கள். மேலும் நிர்வாக திறமை கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இதனால் இதுவரை குடும்ப நிர்வாகத்தை கவனித்து வந்த தனது கணவர் மற்றும் மாமனாருக்கு, தனது நல்ல ஆலோசனை சொல்வார்கள். அப்பொழுது கணவன் ஏற்றுகொள்ளும் தன்மையுடன் இருப்பார், ஆனால் மாமனார் ஏற்றுக் கொள்ள மறுப்பார் இதற்கு காரணம் நேற்று வந்தவள் எனக்கு ஆலோசனை சொல்வதா என்று நினைப்பார். இதனால் மாமனாருக்கும், மருமகளுக்கும் அதிகமாக சண்டை சச்சரவுகள் ஏற்படுவதால் ஜோதிடத்தின் மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனார் இறந்து விடுவார் என்று குறிப்பிடுகின்றனர். எனவே மூலம் நட்சத்திரம் உள்ள பெண்களால் மாமனாருக்கு எந்த விதமான ஆபத்தும் இல்லை என்பதே உண்மை ஆகும்.
அன்னை சரஸ்வதியும் மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர்தான். புரட்டாசி மாதம் சரஸ்வதி பூஜை கொண்டாடப்படுகிறது. மூலநட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே.
பௌர்ணமி திதியை ஒட்டி ஆனி மாதம் மிதுன ராசியில் சூரியன் இருக்கும்போது வரும் மூல நட்சத்திரம் சுப திதியில் வருவதால், ஆனி மூலத்தை மக்கள் ஏற்றனர். அதுவே ஆண் மூலம் எனப்பட்டது. பௌர்ணமி என்பது யோக திதி என்பதால் 'ஆண் மூலம் அரசாளும்' என்றாகிவிட்டது. பண்டைய நூல்களில் ஆனி மூலம் அரசாளும் பின் மூலம் நிர்மூலம் என்பது மருவி ஆண்மூலம் அரசாளும் பெண்மூலம் நிர்மூலம் என்றாகி விட்டது.
ஆனி மூலம் நட்சத்திரத்தில் பிறந்தால் அரசு, அரசு சார்ந்த துறை இவருக்கு சாதகமாக அமையும் என்பதே விளக்கமாகும். பின்மூலம் அடுத்தடுத்த மாதங்களில் மூல நட்சத்திரத்தில் பிறந்தால் எதிரிகள் நிர்மூலமாகி விடுவார்கள் என்பதே உண்மையான வழக்கு. கன்னி மாதமாகிய புரட்டாசியில், மூல நட்சத்திரம் அஷ்டமியோடு சேர்ந்து வருவதால், அந்த நாளில் சுப காரியங்கள் தவிர்க்கப்பட்டது. அன்று துவங்கும் நற்காரியங்கள் விருத்தியாகாது எனும் பொருள்படும்படி கன்னி மூலம் நிர்மூலம் எனச் சொல்லி வைத்தார்கள். இதில் கன்னி ராசி மறக்கப்பட்டு, கன்னிப் பெண்கள் எனத் தவறாகப் பொருள் கொண்டு பெண் மூலம் நிர்மூலம் என்றாகிவிட்டது.
ஒரே நட்சத்திர ஆண் பெண் ஜாதகத்தை இணைக்கக்கூடாது என்பதும் ஜோதிட விதி. ஆனால், மூல நட்சத்திர ஜாதகம் வந்தால் பொருத்தம் பார்க்க வேண்டிய அவசியமே இல்லை. மூல நட்சத்திர பெண்ணுக்கு மூல நட்சத்திர ஆண் ஜாதகத்தை தாராளமாகச் சேர்க்கலாம்" என்பது ஜோதிட சாஸ்திரம் சொல்லும் விதி. எனவே மூலம் நட்சத்திர வரன் வந்தால் கவலையே படாதீர்கள். மூல நட்சத்திரம் என்பது இருபாலருக்கும் பெருமை சேர்க்கும் நட்சத்திரமே! அதேபோன்று, மூல நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்தால் மாமனார்- மாமியாருக்கு ஆகாது என்பதும் தவறான வாதம் ஆகும்.
எனவே 27 நட்சத்திரங்களில் எல்லா நட்சத்திரங்களுமே சிறப்பு வாய்ந்தவைதான்.

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·