- · 5 friends
-
I
உங்கள் முகம் சுருக்கம் இல்லாமல் இளமையாகவே இருக்க டிப்ஸ்
பெரும்பாலான பெண்கள் சந்திக்கும் பிரச்சனை இளம் வயதிலேயே சருமம் முதுமையான தோற்றத்தை தருவது. இதனை ஆன்டி ஏஜிங் என்று கூறுவார்கள். இந்த பிரச்சனைக்கு ரசாயனங்கள் நிறைந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக இயற்கையாக கிடைக்கும் பொருட்களை வைத்து ஃபேஸ் பேக் செய்யலாம்.
அதிக அளவில் மேக்கப் போடுவது, சரியான சரும பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்யாமல் இருப்பதுவே சருமங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. அதனை சரி செய்ய வெண்டைக்காய் இருந்தால் போதும். இதை வைத்து எப்படி ஃபேஸ் பேக் செய்யலாம் என்பதை பார்ப்போம்.
வெண்டைக்காய் ஃபேஸ் பேக் :
வெண்டைக்காய் மூன்று, தயிர் 2 டீஸ்பூன் போதும். முதலில் வெண்டைக்காயை நன்கு கழுவி அதனை சின்ன சின்னதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதனுடன் தயிரையும் சேர்த்து நன்றாக ஃபைன் பேஸ்ட்டாக அரைத்து கொள்ள வேண்டும். முகத்தை கழுவி விட்டு பின்னர் அரைத்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வரை உலர விட்டு பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். வாரத்திற்கு இரண்டு முறை இதை செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இரண்டாவது ஃபேஸ் பேக்:
வெண்டைக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து பின்னர் வெண்டைக்காயை அதில் சேர்த்து 10 நிமிடம் வரை கொதிக்க விட வேண்டும். பிறகு அடுப்பை அணைத்துவிட்டு வெண்டைக்காயை ஆரவிட்டு மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவையுடன் தேங்காய் எண்ணெயை சேர்த்து நன்றாக அரைத்து அந்த பேஸ்ட்டை முகத்தில் அப்ளை செய்து 15 முதல் 20 நிமிடங்கள் உலர விட வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும். சருமம் வறட்சியாக இருப்பவர்கள் இதை பயன்படுத்தலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·