உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்பட திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் அதிகாலை யில் நடைபெறும் கொடிமர பூஜையில் நீங்கள் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.
திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும் மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடிமரத்துக்கு த்தான் பூஜை நடைபெறும் . இந்த கொடி மரம் பொதிகை மலையிலிருந்து வரப்பெற்ற
சந்தன மரமாகும். இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.
திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது. அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது.
ஆனால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும். ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்கு வரத்து வசதி எல்லாம் கிடையாது. எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது.
சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..
தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத் துக்கு பூஜைகள் நடைபெறும்போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல அவர்களு டன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத் தின் முடிவிலும் நமஸ்காரம் செய்வார்கள். இதற்கான அனுமதி இலவசம்.
அதிகாலையில் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப் பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!
இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்து கொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்.
நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!