-
- 2 friends

விஞ்ஞானிகளையே வியக்க வைத்த நடராஜர் தத்துவம்
கம்பீரமாக நிற்கும் தமிழர்களின் சொத்தான இந்த நடராசர் சிலை நிறுவபட்டுள்ள இடம் இந்தியா அல்ல..... தமிழ்நாடு அல்ல. சுவிட்சர்லாந்த் நகரம் ஜெனிவா CERN ஆராய்ச்சி மையத்தில் நடராஜரின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஏன் தெரியுமா ?
CERN ( The European Organization for Nuclear Research, known as CERN ) என்பது சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் உள்ள 20நாடுகள் ஒன்றிணைந்த ஐரோப்பிய அணு ஆராய்ச்சி நிறுவனம். இங்கே Large Hadron Collider (LHC) என்ற உலகிலேயே மிகப்பெரிய துகள் முடுக்கி (Particle Accelerator) இருக்கிறது. இது மூலத்துகளைகளை அதிவேகத்தில் பயணிக்கச் செய்து அவற்றின் குணங்களை, செயல்களை ஆராயும் பணி நடக்கிறது.
பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக உலகநாடுகள் கண்டுபிடித்துள்ளன.. Center Point of World’s Magnetic Equator.எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் இதனை கண்டறிந்த நமது தமிழன் எப்பேற்பட்ட அறிவுமிக்கவன்..?
அதை உணர்ந்து அணுத்துகள் அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில்மறைமுகமாக அமர்த்திய அவன்சாதனை எப்பேற்பட்டது..?இதனை 5000 வருடங்களுக்கு முன்பே கண்டறிந்து திருமந்திரத்தில்குறிப்பிட்டதிருமூலரின் சக்தி எப்படிப்பட்டது..? புரிகிறதா..? தமிழன் யார் என தெரிகிறதா..?
திருமூலரின் திருமந்திரம் மிகப்பெரிய உலகிற்கே வழிகாட்டும் அறிவியல் நூலாகும்.
இதை உணர்ந்துகொள்ள தற்போதுள்ள அறிவியலுக்கு இன்னும் ஒரு நூற்றாண்டு தேவைப்படலாம்..வாழ்க தமிழ்..வெல்க...தமிழனின் நுண்ணறிவு!
முன்னோர்கள் செய்த எல்லா செயல்களும் ஒரு தெளிவான சிந்தனையை நோக்கியே பயணித்துள்ளது, அவர்கள் நிர்ணயித்த பிரம்மாண்டமான கற்கோவில்களுக்கு பின் இருக்கும் பல அற்புதங்களை உள்ளடக்கி உள்ளதை அறியவே இந்த பதிவு, அந்த வகையில் நடராஜர் சிலையில் பல அற்புதமான ரகசியங்கள் அடங்கி உள்ளன"
"சைவ சமயமே சமயம்" என தாயுமான சுவாமிகளும் "சைவமாம் சமயஞ் சாரும் ஊழ்பெறல் அரிது" என அருணந்தி சிவாச்சாரியாரும் நவின்றதது சாலச் சிறப்பான தமிழ் வாசகங்களாகும்.
எல்லாம் வல்ல சிவப்பரம்பொருளை தமிழர்கள் கண்டு நடராசாப் பெருமானாக அறுபத்தி நான்கு மூர்த்தங்களில் ஒன்றாய் சைவப் பண்பாட்டில் இருத்தி, வேதநாகரீகத்துக்கு பொதுச்சின்னமாக மலரும் வகையில் பாரதப் பண்பாட்டுக்கு குறியீடாக மலரும் வகையில் மெய்ஞ்ஞானம்,விஞ்ஞானம்,சமயம், அழகியல் உட்பட ஏராளமான அம்சங்களை நடராச திருவுருவத்துள் கண்டு இவ்வுலகுக்கு அளித்தனர் எனலாம்.
ஆனந்த தாண்டவமானது வேறு எங்கும் இல்லாது தமிழகத்திலே காணக்கிடைப்பது ஆனந்த தாண்டவமானது தமிழரின் ஆன்மீக கண்டுபிடிப்பென நவில வலுச்சேர்க்கின்றது.
கி.பி 4ம் நூற்றாண்டளவில் இருந்து தமிழகத்த்ல் நடராச சிலைகள் இருந்தமைக்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளமை பரதக் கலையிலும் இறைவனின் திருநடன வடிவங்ககளிலும் தமிழரின் உரித்து அதிகம் இருப்பதை புலனாக்கிறது.
தமிழரிடம் இருந்த நாட்டியக் கலையை சற்று மேலதிக இணைப்புக்களுடன் பரதர் சாத்திரம் செய்தார் எனபதே சாலச் சிறந்ததாகும், இறைவனின் படைத்தலைக் குறிக்கும் காளிகா தாண்டவம் அல்லது முனிதாண்டவம் திருநெல்வேலியில் உள்ள தாமிரசபையிலும், ஆன்மாக்களின் நல்வினைக்கு ஏற்ப இன்பங்களை அளித்துக்காக்கும் இன்பக் காத்தலைக் குறிக்கும் சந்தியா தாண்டவம் மதுரையில் உள்ள வெள்ளியம்பலத்திலும், தீவினைக்கு ஏற்ப தண்டித்துக் காத்தலாகிய துன்பக் காத்தலைக் குறிக்கும் கௌரீ தாண்டவம் திருப்புத்தூர் சிற்சபையிலும் அழித்தலைக் குறிக்கும் சம்கார தாண்டவம் நள்ளிரவில் சுடலையிலும் மறைத்தலைக் குறிக்கும் திரிபுர தாண்டவம் குற்றாலத்தில் உள்ள சித்திரசபையிலும் அருளுதலைக் குறிக்கும் ஊர்த்துவ தாண்டவம் திருவாலங்காட்டில் உள்ள இரத்தினசபையிலும் நடைபெறுகின்றன.
உலகின் மிகப் பெரும் இயற்பியல் விஞ்ஞானிகளில் ஒருவர் கார்ல் சகன். (பிறப்பு 9-11-1934; மறைவு 20-12-1996). சிறந்த விஞ்ஞான எழுத்தாளராகவும் விளங்கியது இவரது தனிச் சிறப்பு! பாமரனுக்கும் அறிவியலைக் கொண்டு செல்ல வேண்டும் என்ற அவாவில் இவர் கடுமையாக உழைத்தார்.
தொலைக்காட்சித் தொடர்களை எளிய முறையில் அமைத்து பெரிய விஞ்ஞான விஷயங்களை அழகுற எளிமையாக விளக்கினார்.அமெரிக்காவில் ஒளிபரப்பப்பட்டு உலகெங்கும் உள்ளோர் பார்த்த 'காஸ்மாஸ்' என்ற பிரபஞ்சம் பற்றிய தொடரை எடுக்கும் மாபெரும் பொறுப்பை இவர் மேற்கொண்டார்.
13 எபிசோடுகளில் பிரபஞ்சத்தைப் பற்றி விளக்க வேண்டும். இந்தத் தொடரை ஒரு நல்ல அறிமுக உரையுடன் துவக்க அவர் எண்ணினார். இதற்காக பிரபஞ்சம் பற்றிய அறிவை சரியான முறையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்பிற்கும் விளக்கத்திற்கும் ஒப்ப எந்த நாகரிகம் கொண்டிருக்கிறது என்று ஆராய ஆரம்பித்தார்.
உலகின் மிகப் பழம் பெரும் நாகரிகங்களான எகிப்திய, சுமேரிய, கிரேக்க ரோமானிய, பாபிலோனிய நாகரிகங்கள் உள்ளிட்ட அனைத்து நாகரிகங்களையும் ஆராய்ந்தும் அவருக்கு திருப்தி ஏற்படவில்லை. பல்வேறு நாகரிகங்களையும் அவை சார்ந்த மதங்களையும் ஆராயப் புகுந்தவர் அவற்றின் இதிகாச புராணங்களையும் படிக்க நேர்ந்தது.
இறுதியாக அவர் பார்வை இந்து நாகரிகத்தின் மீதும் இந்து இதிகாச புராணங்களின் மீதும் பதிந்தது. இந்து மதத்தின் அறிவியல் ரீதியான பிரபஞ்சம் பற்றிய கொள்கையைப் படித்துப் பிரமித்து அவர் அசந்தே போனார்.
இந்தியர்கள்தான் உலகிற்கே பூஜ்யத்தை வழங்கியவர்கள். ஒன்றுக்கு பக்கத்தில் பூஜ்யத்தைப் போட்டால் அது பத்து, நூறு, ஆயிரம் என்று அதிகரிக்கிறது. ஆனால் ஒன்றுக்கு இடப்பக்கதில் எத்தனை பூஜ்யங்களைப் போட்டாலும் ஒன்று ஒன்றாகவே இருக்கிறது. இந்த வியப்பிற்குரிய அமைப்பு கணிதத்தையே எளிமையாக்கி எவ்வளவு பெரிய எண்ணானாலும் எழுதுவதற்கும் கணக்குகளைப் போடுவதற்கும் சௌகரியத்தை
ஏற்படுத்தியது. ரோமானிய எழுத்துக்களால் எழுதப்படும் எண்ணோ ஒரு பெரிய தொகையை எழுதும் போது மிக்க குழப்பத்தை விளைவிக்கிறது. சுலபமான நடைமுறையில் இல்லாத அதை எழுதவே சிரமப்பட வேண்டும்.
இது மட்டுமன்றி எல்லையற்ற பிரபஞ்சத்தில் ஆயிரம், பத்தாயிரம், லட்சம் என்ற எண்களெல்லாம் மிக மிகச் சிறியவை ஆகி விடுகிறது. பெரிய பெரிய எண்களைக் குறிக்கும் வார்த்தைகள் எந்த நாகரிகத்தில் இருக்கிறது என்று பார்த்தால் திரும்பவும் பார்வை ஹிந்து மதம் பக்கமே திரும்ப வேண்டும்!
விஞ்ஞானத்தின் முக்கிய இயல்களில் ஒன்றான இயற்பியல் (பிஸிக்ஸ்) முன்னேற முன்னேற, அதன் புதுப் புதுப் பகுதிகளாக க்வாண்டம் பிஸிக்ஸ், பார்டிகிள் பிஸிக்ஸ் போன்றவை உருவாகி உள்ளன.
கார்ல் சகன் தனது காஸ்மாஸ் டி.வி. தொடருக்காக நடராஜரைத் தேடி சிதம்பர ரகசியத்தை அறிய தமிழ்நாடு வந்தார். தமிழ்நாட்டில் ஒரு நாள் காலை ஆறரை மணிக்கு தனது படப்பிடிப்புக் குழுவினர் புடைசூழ நந்தி இருக்கும் இரு கோவில்களுக்கு விஜயம் செய்தார். ஒரு கோவிலின் அருகே தாமரைத் தடாகம் ஒன்று இருந்தது. இவர்கள் வருவதைப் பார்த்த பத்து வயதுச் சிறுவன் ஒருவன் சரேலென தாமரைக் குளத்தில் பாய்ந்து ஒரு அழகிய தாமரை மலரைப் பறித்து வந்து கார்ல் சகனின் மனைவியிடம் தந்து தனது பெயரைச் சொல்லி அறிமுகப்படுத்திக் கொண்டான்.
எளிமையான, ஆனால் உணர்ச்சிபூர்வமான இந்த அன்பளிப்பால் அனைவரும் அசந்து போனார்கள். இதை நினைத்து நினைத்து நெகிழ்ந்து போன கார்ல் சகன் பின்னால் நியூ டைஜஸ்ட் என்ற பத்திரிக்கையின் ஆசிரியரான ப்ளேசிடோ பி.டி.சௌஸா என்பவரிடம் இதை சொல்லி தமிழக விஜயம் தனக்கு பல அதிசய அனுபவங்களைத் தந்ததாகக் குறிப்பிட்டார்.
பிரபஞ்சத்தில் எல்லையற்ற காலத்தையும் ஆக்கலையும் அழித்தலையும் சுட்டிக் காட்டும் சிவநடராஜரைப் பற்றி தமிழகத்தில் அறிந்து கொண்டு நடராஜரைத் தன் காஸ்மாஸ் தொடரில் பத்தாவது எபிசோடான 'தி எட்ஜ் ஃபார் எவரில்' (The edge forever) அவர் பயன்படுத்திக் கொண்டார்.
கலிஃபோர்னியாவில் பாஸடோனா என்ற இடத்தில் உள்ள நடராஜரை அவர் படம் பிடித்தார்.
இதே கால கட்டத்தில் அணுத்துகள் விஞ்ஞானத்தை விளக்க வந்த உலகின் மிகப்பெரும் இயற்பியல் விஞ்ஞானியான டாக்டர் பிரிட்ஜாஃப் காப்ரா சிவ நடராஜாவின் நடனத்தைக் கண்டு அதிசயித்திருந்தார்!
ஆஸ்திரியாவில் பிறந்த அமெரிக்க விஞ்ஞானி இவர். "தி டாவோ ஆஃப் பிஸிக்ஸ்' (The Tao of Physics) என்ற இவரது நூல் உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் 1975ல் வெளிவந்தது. 23 மொழிகளில் 43 பதிப்புகளாக வெளிவந்த இந்த நூலை லட்சக்கணக்கானோர் படித்தனர்; இன்றும் படித்து இன்புறுகின்றனர்!
அதில் அவர் சிவ நடராஜரின் நடனம் பற்றிக் கூறுகிறார்:-"மேலை நாடுகளின் இயந்திரத்தனமான பார்வையை விட கீழை நாடுகளின் பார்வை உயிருள்ள முழுமையான ஒன்று; அது சுற்றுப்புறச் சூழலை ஒட்டியது! கீழை நாட்டு ஞானிகளுக்கு பொருள்கள் எப்போதும் மாறிக் கொண்டே இருக்கும் திரவ வடிவம் போன்ற ஒன்றுதான்!
பிரபஞ்சம் எப்போதுமே இயங்கிக் கொண்டிருக்கும் பிரிக்க முடியாத ஒன்றாக அவர்களால் காணப்பட்டது. இந்தக் கருத்தே இன்றைய நவீன பௌதிகத்திலும் உருவாகி வருகிறது. நவீன பௌதிகம் அணுத்துகளை - தொடர்ந்து நடனமாடும் ஒன்றாக - அதிர்ந்து கொண்டே இருக்கும் ஒன்றாகக் கூறுகிறது.
கீழை நாட்டு ஞானிகள் உலகைப் பற்றி விவரிப்பது போலவே இது உள்ளது. ஆற்றல் நடனம் அல்லது உலகை உருவாக்கி பின்னர் அழிக்கும் நடனமானது சிவ நடராஜரின் நடனம் போலவே உள்ளது."
அணுத்துகள் விஞ்ஞானம் கற்க விரும்புவோர் நடராஜரின் நடனத்தைப் பற்றி முதலில் சற்று அறிய வேண்டும் என்றார் காப்ரா! அணுவில் உள்ள அசைவை - நடனத்தை - சிவ நடராஜரின் ஆட்டத்தில் கண்ட காப்ரா அதை அப்படியே லாஸ் ஏஞ்சலீஸில் 1977 அக்டோபர் 29ம் தேதி பிஸிக்ஸ் அண்ட் மெடா பிஸிக்ஸ் என்ற கருத்தரங்கத்தில் தான் ஆற்றிய முக்கிய உரையில் உலகத்திற்கு விளக்கினார்:
"நவீன இயற்பியல் விஞ்ஞானிகள் பொருளை அசைவற்ற ஜடமாகக் கருதவில்லை. துடிப்புள்ள தொடர்ந்து நடனமிடும் ஒன்றாக கருதுகின்றனர். இந்தியக் கலைஞர்கள் சிவ நடராஜரின் நடனத்தைச் சித்தரிக்கும் அருமையான ஓவியங்களையும் சிற்பங்களையும் படைத்துள்ளனர். இவை பிரபஞ்ச நடனத்தின் பார்வை சித்திரங்களாகும்.
மேற்கத்திய நவீன உபகரணங்களை உபயோகித்து இப்போது நாம் கண்டறிந்துள்ளவை சிவ நடனத்தின் புதிய பிரதியே. இந்து சிற்பங்களில் உள்ள பிரம்மாண்டமும் அழகும் இதிலும் உள்ளன என்றே எனக்குத் தோன்றுகிறது. ஆகவே அவை இரண்டையும் இணைத்துள்ளேன்."
நவீன உபகரணங்கள் மூலமாக அணுவில் உள்ளே துகள்கள் நடனமிடும் அற்புத காட்சியைப் படம் பிடித்து அதை அப்படியே நடராஜரின் நடனத்துடன் ஒப்பிடும் காட்சியைப் பார்த்த உலக விஞ்ஞானிகள் வியந்தனர்.
விஞ்ஞானிகள் தங்களது நவீன உபகரணங்கள் வாயிலாகக் கண்டதை நம் மெய்ஞானிகள் அந்தக்கரணம் வழியே கண்டு அப்படியே உலகிற்கு எடுத்துரைப்பதன் உதாரணம்தான் அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பாடிய பரமகுருவாய், அணுவில் அசைவாய் என்ற வரிகளாகும் (இருவர் மயலோ என்று தொடங்கும் திருப்புகழ்)
இதைத் தொடர்ந்து 2004ம் ஆண்டு ஜூன் மாதம் 18ம் தேதி ஐரோப்பிய அணுத்துகள் இயற்பியல் ஆராய்ச்சி மையத்திற்கு இந்திய அரசாங்கம் 2 மீட்டர் (சுமார் ஆறு அடி) உயரமுள்ள நடராஜரின் சிலையை அந்த நிறுவன விஞ்ஞானிகள் இந்தியாவுடன் தொடர்ந்து கொண்டிருக்கும் நல்லுறவைப் போற்றும் வகையில் வழங்கியது.
செர்ன் (CERN) விஞ்ஞானிகள் அணுத்துகள் நடனத்தையும் நடராஜரின் நடனத்தையும் ஒப்பிடுவதைப் போற்றி நன்றி தெரிவிப்பதற்காக இதை வழங்குவதாக நம் அரசு பெருமையுடன் தெரிவித்தது. ஆக, விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?
ஜீன் 18 2004 இல் ஜெனீவாவின் புகழ் பெற்ற CERN அணுத்துகள் ஆராய்ச்சி மையத்தில் சிவ தாண்டவ நடராஜ சிலை நிறுவப்பட்டது ஏன் ?
ஐரோப்பிய அணு ஆய்வு நிறுவனம் (CERN), உலகிலேயே மிகப் பெரிய அணு ஆய்வு கூடத்தைக் கொண்டிருக்கும் நிறுவனம் ஆகும். இது ஸ்விட்சர்லாந்தில் அமைந்துள்ளது.
இது உலகம் எப்படி தோன்றியது, இப்போது எப்படி இயங்குகின்றது என்பதையெல்லாம் ஆராய்ச்சி செய்யும் முக்கிய நிறுவனமாகும். இதன் வளாகத்தில் அமைந்திருக்கும் நடராஜர் திருவுருவத்தைப் பற்றிய குறிப்புகள் அங்கே குறிக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் தெளிவாகவும், அறிவியல்பூர்வமாகவும் விளக்கப்பட்டுள்ளன. அவை பின்வருமாறு:
நடராஜா சிவபெருமானின் இந்த குறிப்பிட்ட தோற்றம் “நடனமாடும் சிவா” என்றழைக்கப்படுகிறது.
சிவனின் இத்தோற்றம் உலக கலைக்கு கிடைத்த அளப்பரிய பரிசு தான். இந்து திருமூர்த்திகளில், சிவபெருமான் ”சக்தி” என்று சொல்லப்படும் உயிர் ஆற்றலை பிரதிபலிப்பவராக திகழ்கிறார். அவரே ஆக்குபவர், காப்பவர் மற்றும் அழிப்பவர்.
நடராஜரின் கலைத் தத்துவத்திற்குப் பின்னால், நாம் அறிந்து கொள்ளவேண்டிய ஆழ்ந்த அர்த்தங்கள் பல கோணங்களில் மறைந்துள்ளன.
நடராஜரின் ‘ஆனந்த தாண்டவம்’ பிரபஞ்சத்தின் ஆக்கத்தையும், அவர் எழுப்பும் இசை பிரபஞ்சத்தின் இயக்கத்தையும், இறுதியாக அவரின் நடனம் பிரபஞ்சத்தின் அழிவுக்கு வித்திடும். வலது கையில் கொண்டிருக்கும் டமாரில் எழும் ஓசையின் இருந்து கிளம்பும் அதிர்வுகள், பிரபஞ்சத்தின் ஆக்கத்திற்கு வித்திட்டன. மற்றொரு வலது கை அபய முத்திரையைக் குறிக்கின்றது; இது பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் காத்தருள்வதையும் குறிக்கின்றது. அபய முத்திரை ‘யாமிருக்க பயமேன்’ என்பதைக் குறிக்கும். இடது கையில் ஏந்தி எரியும் அக்னி பிரபஞ்சத்தின் முடிவைக் குறிக்கின்றது.
மேலும், மற்றொரு இடது கை முன்புறத்தில் கீழ்நோக்கியும், தூக்கிய காலும் சகல லோகங்களின் துயரைத் துடைப்பவர் என்பதைக் குறிக்கின்றது. அபஸ்மரா அறியாமையைக் குறிக்கின்றது. அதை வலது காலால் மிதிப்பது, அறியாமையை நீக்குவதை குறிக்கின்றது. தலைசூழ் ஒளிவட்டங்கள் : பிரபஞ்சம், சூரியன், நிலவு மற்றும் முடிவே இல்லாது சுடர்கின்ற நட்சத்திரங்களையும் குறிக்கின்றன.
ஆனந்த குமாரஸ்வாமி, நடராஜரின் எல்லையற்ற மிகச்சிறந்த இசை, எழில், சக்தி, அருள் ஆகியவற்றைக் கண்டு “இதுவே இறைவனின் செயலாக்கத்தின் மிகச் சரியான விளக்கம். இத்தகைய தெளிவான விளக்கத்தைக் கொண்டிருக்கும் சமயத்தின் சிறப்புகள் யாவும் பெருமையாகப் பேசப்படவேண்டும்” என்று எழுதினார்.
மிக அண்மையில், பிரித்ஜொஃப் கொப்ரா “நவீன இயற்பியல் நமக்கு எதை விளக்குகின்றன என்றால், ஆக்கம் மற்றும் அழிவு ரிதம், ஒவ்வொரு முறையும் தொடர்ந்து கொண்டே இருக்கும்; ஒவ்வொரு உயிரும் பிறந்து அழிந்து போகும் போதும் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. அதுவே இப்பிரஞ்சத்தின் உயிரியல் உறுப்பமைதியற்ற, உயரிய சாரமாகும். ஆகவே, நவீன இயற்பியலாளர்களுக்கு சிவபெருமானின் நடராஜ கோலம் அணுக் கருப்பொருள் அசைவை உணர்த்துகின்றது.” என்று விளக்கினார்.
மேலும், அவர் பின்வருமாறு கூறினார். “நூற்றாண்டுகளுக்கு முன்னர், இந்திய வல்லுநர்கள் தாண்டவமாடு சிவபெருமானின் அழகிய கோலத்தை வெண்கலத்தால், மிக துல்லியமாக தெளிவாக உருவாக்கினர்.
இன்றைய இயற்பியலாளர்கள், மிக நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு ‘cosmic dance’ எனப்படும் பிரபஞ்ச நடனத்தின் தோற்றங்களை விளக்குகின்றனர். ஆகவே, பிரபஞ்ச நடன உருவகம் பண்டைய, சமய கலை மற்றும் நவீன இயற்பியலோடு தொடர்புக் கொண்டது...”
இவ்வாறு அங்கு குறிக்கப்பட்டுள்ளது.
யாவும் உன் லீலையே சர்வேஸ்வரா,
யாவும் உன் லீலையே ஜெகதீஸ்வரா...
அணுவில் அணுவாகி இயக்குவதும்,
அண்டத்தில் அண்டமாகி இயக்குவதும் யாவும் அவனே.
அசையும், அசையாத, உயிருள்ள, உயிரற்ற
என்று எல்லாப் பொருள்களிலும் நிறைந்து
இருக்கும் அவனன்றி ஓரணுவும் அசையாது
என்பது இன்றைய நவீன அறிவியலின்
அறிவோடு உறுதியாகின்றது.
"சிவனன்றி ஓரணுவும் அசையாது"
சிதம்பரம் நடராஜர் தாண்டவமும் அணுவின்
செயல்பாடும்.....
அவனின்றி ஓர் அணுவும் அசையாது....!
"அணுவும் அவனும் அவனுள் அணுவும்
கணுஅற நின்ற கலந்து உணரார்
இணையிலி ஈசன் அவனெங்கும் ஆகித்
தணிவற நின்றான் சராசரம் தானே"
சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டவம் என்ற கோலம் "Cosmic Dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கப்படுகின்றது.
அணுவின் அசைவும் நடராஜரின் நடனமும் ஒன்றாக கருதபடுகிறது. அதனாலேயே அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று திருமூலர் கூறியுள்ளார்.
அகாரம், உகாரம், மகாரம் என்ற பிரணவ அட்க்ஷரங்களே அணு அல்லது பரமாணுத்துகள்- களுக்குள் உள்ள புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான் என்ற தத்துவங்களாகி ‘ஓம்’ என்கிற பிரணவமாகிறது.
அகரம் என்பது இறைவனாகவும், உகரம் உயிர்ச் சக்தியாகவும், மகரம் இரண்டும் ஒன்று சேரும் மாயா சக்தியாகவும் தத்துவத்தில் குறிக்கப்படுகின்றது.
இந்த மூன்றின் தத்துவமே தொம்பதம், தற்பதம், அசிபதம் என்ற மகாதேவ வாக்கியங்களாய் குறிக்கப்படுகின்றது.
தொம்பதம் என்றால் ஆணவம், கன்மம், மாயை நீங்கப் பெற்ற ஆன்மாவாகும்.
தற்பதம் என்றால் ஜீவனுக்குள் தங்கியிருக்கின்ற அருட்சக்தியாகும்.
அசிபதம் என்றால் மும்மலம் நீங்கப்பெற்ற ஆன்மாவும், அருட்சக்தியும் கலக்கும் இடமாகும்.
இந்த மூன்று பதங்களுமே பரமாணுவின் மூன்று செயல்களைக் குறிக்கின்றன.
பரமாணுவின் இந்த மூன்று செயல்களும் விடாது செயல்படுதலாலேயே இப் பிரபஞ்சம் இயங்கிக் கொண்டிருக்கிறது. பரமாணுவின் இந்தத் திருநடணமே பிரணவக் கூத்து என்றாகிறது.
அறிவியலின் தத்துவமாக, ஒரு தனிமத்தின் இரசாயன குணங்கள் மாற வேண்டுமானால் அதன் அணுக்களில் உள்ள புரோட்டான், எலக்ட்ரான், நியூட்ரான்-களின் எண்ணிக்கைகள் மாற வேண்டும். அதன்படி ஒரு தனிமம் மற்றொரு வேறுபட்ட தனிமமாகிறது. சித்தர்கள் இந்தத் தத்துவத்தைப் பயன்படுத்தியே இரசவாதம் என்ற முறையைக் கண்டறிந்தார்கள்.
இந்தத் தத்துவப்படியே உயிரணு எனப்படும் செல்களில் தவப் பயிற்சி மூலமாக மாற்றங்களைச் செய்து சாகாக் கலையைக் கண்டறிந்தார்கள்.
இதையே நம் திருமூலர் பின்வரும் பாடலில் விளக்குகிறார். திருமந்திரம் – (2008)
அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.
#பொருள் : அணுவுக்கும் அணுவாய் உள்ளதை ஆயிரம் கூறிட்டு, அந்த ஆயிரத்தில் ஒரு கூற்றை நெருங்க வல்லவர்க்கும், அணுவுக்கு அணுவானவனும், பழைமை உடையவனும், மிக சூட்சுமம் ஆனவனும் ஆகிய பரம் பொருளை அடையவும் கூடும் என்று கூறுகிறார்.
விஞ்ஞானம் வியக்கும் மெய்ஞான நடனம் நம் சிதம்பர நடராஜரின் நடனம் என்பதை அறியும் போது நம் மெய் சிலிர்க்கிறது அல்லவா?
கடவுள் துகள் ஆராய்சிக்கு கிடைத்த தெளிவான பதில் தான் நடராஜர் சிலை - கூறியவர் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்.
பெருமை கொள்ளுங்கள் இந்துக்களின் எந்த ஒரு வழிபாடும் உள் அர்த்தம் கொண்டது.
தில்லை அம்பல நடராஜா
செழுமை நாதனே பரமேசா
அல்லல் தீர்த்தாண்டவா வா வா
அமிழ்தானவா வா (தில்லை)
எங்கும் இன்பம் விளங்கவே
அருள் உமாபதே
எளிமை அகல வரம் தா வா வா
வளம் பொங்க வா (தில்லை)
பலவித நாடும் கலையேடும்
பணிவுடன் உனையே துதிபாடும்
கலையலங்கார பாண்டிய ராணி நேசா
மலை வாசா! மங்கா மதியானவா (தில்லை)

- · GomathiSiva
- ·

- · Yathusan
- ·



- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·

- · GomathiSiva
- ·