இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
உடலில் இருந்து வந்த சோர்வுகள் குறையும். தனவரவுகள் தேவைக்கு இருக்கும். சில இடங்களில் விட்டுக் கொடுத்து செயல்படுவது நல்லது. குடும்பத்தில் புரிதல்கள் ஏற்படும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்
ரிஷபம்
உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். கூட்டு வியாபாரம் சார்ந்த பணிகளில் பொறுமையுடன் செயல்பட வேண்டும். குழந்தைகளின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மிதுனம்
நினைத்த காரியங்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். தன வருவாயிலிருந்து வந்த இழுபறிகள் அகலும். விளையாட்டு செயல்களில் திறமைகள் வெளிப்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழித்து இருப்பதை தவிர்ப்பது நல்லது. அரசு செயல்பாடுகளில் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மெரூன்
கடகம்
தாய்மாமன் வழியில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த சுபச் செய்திகள் கிடைக்கும். வாகன பயணங்களில் நிதானம் அவசியம். எதிர்பாராத தனவரவுகள் கிடைக்கும். வழக்குகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வியாபார அபிவிருத்திக்கான உதவிகள் கிடைக்கும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் அறிமுகங்கள் சிலருக்கு சாதகமான பலன்களை ஏற்படுத்தும். பிரீதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
சிம்மம்
எந்த காரியத்தையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். வேலையில் பணியாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிந்தனைகளில் இருந்த குழப்பம் விலகும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
கன்னி
வருமானத்தில் திருப்தியான சூழல்கள் அமையும். பேச்சுக்களுக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். துணைவரின் ஒத்துழைப்புகள் மாற்றத்தை உருவாக்கும். பழைய பிரச்சனைகளில் சில தீர்வுகள் கிடைக்கும். களிப்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
துலாம்
நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை தரும். வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். கொடுக்கல் வாங்கலில் கவனத்துடன் செயல்படவும். வியாபாரத்தில் கடன் உதவிகள் சாதகமாகும். கடன் பிரச்சனை கட்டுப்பாட்டிற்குள் வரும். மனதில் இருந்த குழப்பங்கள் படிப்படியாக குறையும். அஞ்சல் துறையில் புதிய வாய்ப்புகள் ஏற்படும். தடைகள் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
விருச்சிகம்
கருத்துக்களுக்கு உண்டான மதிப்புகள் தாமதமாக கிடைக்கும். வெளிப்பயணங்களில் நிதானம் வேண்டும். கூட்டாளிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் ஏற்படும். அலுவலகத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழக்கவழக்கங்களில் சில மாற்றம் ஏற்படும். வரவுகள் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
தனுசு
தாழ்வு மனப்பான்மை இன்றி செயல்படவும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். முன் கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் நிமித்தமான புதிய சிந்தனைகள் உருவாகும். நட்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு
மகரம்
குழந்தைகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். துணைவர் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபார நெருக்கடிகள் படிப்படியாக குறையும். பணி சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். மனதளவில் இருந்த கவலைகள் குறையும். தாமதம் விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீலம்
கும்பம்
உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். சமூகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். மனதில் இருந்த குழப்பங்கள் விலகி தெளிவுகள் பிறக்கும். சேமிப்புகள் மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நெருக்கடியான சில பிரச்சனைகளுக்கு தீர்வுகள் ஏற்படும். சிக்கல் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
வெளியூர் பயண சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். இசை சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். விலையுயர்ந்த துணிகளை வாங்கி மகிழ்வீர்கள். காதில் அணியும் ஆபரணங்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். இன்பம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
விசுவாவசு வருடம் ஆனி மாதம் 25 ஆம் தேதி புதன்கிழமை 9.7.2025.
இன்று அதிகாலை 01.32 வரை திரியோதசி. பின்னர் சதுர்த்தசி.
இன்று அதிகாலை 04.35 வரை கேட்டை. பின்னர் மூலம்.
இன்று இரவு 11.07 வரை சுப்பிரம். பின்னர் ஐந்திரம்.
இன்று அதிகாலை 01.32 வரை . தைத்தூலம். பின்னர் பிற்பகல் 02.04 வரை கரசை. பிறகு வணிசை.
இன்று அதிகாலை 04.35 வரை சித்தயோகம். பின்னர் அதிகாலை 05.57 வரை அமிர்தயோகம். பின்பு சித்த யோகம்.
நல்ல நேரம்:
காலை : 09.15 முதல் 10.15 மணி வரை
காலை : 10.45 முதல் 11.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
*நீதிபதி; நீங்கள் இருவரும் காதல் திருமணம்தானே!... உங்களுக்கு கட்டாயம் விவாகரத்து வேண்டுமா!?*
*மனைவி; ஆமா பெரிய "காதல்!" நான் ஏமாந்துட்டேன் ஐய்யா!!! இவர் வாயை திறந்தாலே எல்லாமே பொய்தான், ஒரு விசயத்தில் கூட என்னிடம் உண்மையாகவே இல்லை...*
*கணவன்; இவள் பயங்கரமான ஹிட்லர் பேத்தி ஐயா! எல்லாவற்றிற்கும் ஒரு கேள்வி கேட்கிறாள், சந்தேகப்படுகிறாள், தயவு செய்து விவாகரத்து கொடுத்துடுங்க...*
*நீதிபதி; சரி உங்கள் விருப்பப்படி விவாகரத்து கொடுத்து விட்டால் உங்கள் குழந்தையை யார் வைத்துக் கொள்வது!?*
*கணவன்; என் குழந்தை என்னிடம்தான் வளர வேண்டும், அதுதான் நியாயமும் கூட...*
*மனைவி; அது எப்படி! பத்து மாசம் சுமந்து கஷ்டப்பட்டு பெத்தது நான்! உடனே இவங்களுக்கு தூக்கி கொடுத்திடணுமா!*
*நீதிபதி; இதற்கு என்ன சொல்கிறீர்கள் மிஸ்டர்.?*
*கணவன்; ஐய்யா உங்களிடம் ஒரு கேள்வி கேட்கலாமா?*
*நீதிபதி; ம்ம்! கேளுங்க!?*
*கணவன்; ஐய்யா!!! ATM மெஷின்ல கார்டு சொருகி பணம் எடுத்தப் பிறகு அந்த பணம் ATM மெஷினுக்கு சொந்தமா! இல்ல! பணம் எடுத்த அந்த ஆளுக்கு சொந்தமா!???*
*மனைவி: அடப்பாவி"!!!*
*ஒரே கேள்வியில் தலை கிறு கிறுவென சுற்றி டேபிளில் அடித்து கீழே விழுந்தார் ஜட்ஜ்...*
*கோர்ட்*
*இத்துடன் கலைகிறது.*
மனிதர்களைப் பொருட்களைப்போல் நடத்துவதும் பொருட்களை மனிதர்களைப்போல் பயன்படுத்துவதும் இன்றைய உலகின் இயல்பாகிவிட்டாலும் இச்சூழலிலிருந்தும் இத்தன்மையிலிருந்தும் , பலர் சாதுர்யமாக தப்பிவாழ்கிறார்கள்.
சிலர் சூழலுக்குத்/ மனிதர்களுக்குத் தக்கவாறு வாழ்வதையும் இயல்பாக கடைபிடிக்கிறார்கள். அவர்கள் இயல்பாகவும் அதனையே மாற்றிக்கொண்டுவிடுகிறார்கள். அடுத்தவர் வலியை அறிவதில்லை. பணம் -பதவி- தகுதி கண்டு பழகுகிறார்கள். தங்களையே அறிவிற் சிறந்தவர்களாகவும் கருதிக்கொள்கிறார்கள். காலத்தின் வலிமையை அவர்கள் உணர்வதில்லை . வரலாறு நெடுக மனிதர்களின் கதைகள் உள்ளதையும் அறிந்தும் அறியாது திரிகிறார்கள்.
மனிதர்களைப் போற்றுகிறவர்களாக வாழவும்
மனிதர்களை, மனித மனத்தின் வலியை உணர்ந்தவர்களோடும்
வாழவும் , வாழ்க்கை வளமாகவும் நல்வாழ்த்துகள்.
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள், என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன். நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை. சொத்து என்று இருந்ததெல்லாம் அவள் கணவரின் எழுத்துக்கள் மட்டுமே. கொஞ்சம் அவள் நிலையை எண்ணிப் பாருங்கள். அந்தக் காலத்தில், விதவைப் பெண்களின் வாழ்வு, அவள் உறவினர்களைச் சார்ந்தே இருந்தது. அதுவும் இரண்டு பெண்களை வளர்க்க வேண்டிய பொறுப்பு வேறு.
என் பாட்டிக்கு, பாரதிதான் தெய்வம். அவர் மறைவுக்குப் பின், அவர் விரும்பிய புதுமைப் பெண்ணாகவே நடந்தாள் என் பாட்டி. தன்னிடம் இருந்த சில மூட நம்பிக்கைகளையும், மனக் கலக்கங்களையும், தேவையில்லாத பழம் வழக்கங்களையும் விட்டு ஒழித்தாள்.
எதையும் சமாளிக்கும் மன தைரியமும், தீவிர கடவுள் பக்தியும், நல்ல காலம் பிறந்தே தீரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையும், விடா முயற்சியும் கொண்டு வாழ்ந்தாள்.
தன் பெண்கள் மற்றும் பேரக் குழந்தைகளின் கல்வி மட்டுமே அவளின் ஒரே குறிக்கோள். எப்படியாவது நாங்கள் அனைவரும் – முக்கியமாக பேத்திகள் – படித்து விட வேண்டும் என்று பாடுபட்டாள். நான் டாக்டர் பட்டம் வரை பெற்றதற்கு அவள்தான் ஓரே காரணம்.
தன் கணவன் பாரதியின் நினைவுகளே அவளின் சக்தி. நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரின் பாடல்களைப் பாடிக் கொண்டும், எங்களையும் பாட வைத்துக் கேட்டுக் கொண்டும் இருப்பாள். பாரதியும் எல்லாப் பாடல்களும் அவளுக்கு மனப்பாடம் என்று என் அம்மா சொல்லக் கேட்டு இருக்கிறேன்.
வறுமை என்பதை உணர விடாமலேயே என்னை வளர்த்தாள். நான் கல்லூரியில் இருந்து வரும் போதெல்லாம், என்னை வாசலில் இருந்தே கட்டி அணைத்து “வாடாக் குழந்தே.. கை கால் அலம்பிட்டு வா. சாப்பிடலாம்” என்று ஊட்டி விட்டுக் கொண்டே நான் என்னவெல்லாம் படிக்கிறேன் என்று ஆர்வமாய் கேட்பாள்.
1955 ஆம் வருடம். அவளுடன் என் கடைசி விடுமுறை.
“வந்துட்டியாம்மா! உனக்காகத்தான் காத்துண்டு இருக்கேன்” என்று என்னை படுக்கையில் இருந்தபடியே வரச் சொல்லி கட்டி அணைத்துக் கொண்டாள். அவளுக்கு உடல் நலம் சரியில்லை என்பதை எனக்கு எழுத வேண்டாம் என்று சொல்லி விட்டாள். “லீவு விட்டதும் வந்தா போதும்”.
அதற்குப் பிறகு, கோமாவில் விழுந்து விட்டாள். ஒரு அசைவும் இல்லை. உணவு செல்லவில்லை. டாக்டர் இனி ஒன்றும் செய்வதற்கில்லை என்று கை விரித்து விட்டார். எல்லோரையும் வரச் சொல்லி விட்டோம். பெண்கள், பேரன் பேத்திகள், உறவினர்கள் என்று வீடு முழுவதும் கூட்டம்.
நான் அவளின் முகத்தைப் பார்த்தபடியே அமர்ந்திருந்தேன். ஒரு முறையாவது கண் திறக்க மாட்டாளா என்ற ஏக்கம். கண் திறக்கவில்லை. விழி கூட அசையவில்லை.
பின்னிரவு நேரம். வீடே அமைதியில் உறைந்து இருந்தது. இறுதி நிமிடங்கள் என்று எல்லோருக்கும் தோன்றி இருக்க வேண்டும். நீர் நிறைந்த கண்கள் எதுவும் உறங்கவில்லை.
அவள் உதடுகள் மட்டுமே விரிந்தன.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்.
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
என்று மெல்லிய குரலில் பாட்டி பாடினாள். நிறுத்தி விட்டாள்.
என் மனதுக்குள் அடுத்த வரிகள் எழுந்தன. ஏங்கி வந்த அழுகையை அடக்கிக் கொண்டேன்.
நித்தச் சோற்றினுக்கே ஏவல் செய வந்தேன்;
நிகரிலாப் பெருஞ் செல்வம் உதவினான்.
வித்தை நன்கு கல்லாதவள் என்னுளே
வேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான்.
அதே இரண்டு வரிகளை இன்னும் ஒரு முறைப் பாடினாள்.
“திண்ணை வாயில் பெருக்க வந்தேன்
எனைத் தேசம் போற்றத் தன் மந்திரியாக்கினான்”
சில நொடிகள் மௌனம். மீண்டும் அவள் குரல். இன்னும் மெல்லியதாய்.
உடல் எழுப்பும் குரலாய் இல்லாமல், அதை விட்டு விலகிச் செல்லும் அவள் ஆத்மாவின் குரலாய்..
“திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான். திருமால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்”
அவள் மூச்சு நின்று விட்டது.
அவள் அரசன் பாரதி சென்ற நாராயணனின் திருவடிகளுக்கே பாரதியின் செல்லம்மாவும் சென்று விட்டாள்.
என் பாட்டி செல்லம்மாள் பெரும் பாக்கியவதி.
டாக்டர் விஜயா பாரதி, 1960களிலேயே, பாரதியின் கவிதைகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்றவர். அவர் கவிதைகளைப் பிழை நீக்கி நான்கு பகுதிகளாக சமீபத்தில் வெளியிட்டு இருக்கிறார்.
கதவைத் திறந்துகொண்டு இண்டர்வியு ரூமின் உள்ளே தலையை நீட்டினான் ரமேஷ்.
‘பிளீஸ் கம் இன்’ என்றார் ஒருவர்.
போனான்.
‘சிட் டவுன்’
உட்கார்ந்தான்.
அது ஒரு பெரிய ஹால். வலப்பக்கக் கோடியில் பெரிய திரை. சீலிங்கிலிருந்து டிஜிட்டல் புரஜக்டர் தொங்கியது. கீழே உயர்ந்த கார்ப்பெட். நாற்காலிகள் ஒவ்வொன்றும் அக்பர் சக்கரவர்த்தியின் அரியாசனம் போல் இருந்தன. ஸ்பிளிட் ஏஸிக்கள் ஓசையின்றி ஓடிக் கொண்டிருந்தன. இடப் பக்கச் சுவரின் ஓரம் கசக்கிப் போட்ட காகிதம் ஒன்று உறுத்தலாக இருந்தது.
ஒரு நீள்வட்ட மேசையின் எதிர்ப் புறத்தில் நான்கு பேர் உட்கார்ந்திருந்தார்கள். ரமேஷ் வருவதைப் பார்த்ததும் இடது கோடியில் இருந்தவரைப் பார்த்து கொஞ்சம் பவ்யமாக மற்ற மூவரும் ‘ஐயா, நீங்க கேக்கறீங்களா?’ என்பது போல் வளைந்தார்கள்.
அதற்கு அவர் ‘இட்ஸ் ஓக்கே.. நீங்க ஆரம்பியுங்க’ என்பது போல் ஜாடை காட்டிவிட்டு கொஞ்சம் தளர்ந்து உட்கார்ந்து கொண்டார்.
வலக் கோடியில் இருப்பவர் ஆரம்பித்தார்.
‘எப்படி இருக்கு இந்த அட்மாஸ்பியர்?’ என்றார்.
‘இது ஒரு நல்ல கான்ஃபரன்ஸ் ஹால். புரஜக்டர், ஸ்க்ரீன், வொய்ட் போர்ட், மார்க்கர், சவுண்ட் புரூஃபிங், வசதியான நாற்காலி, உயர்ந்த கார்ப்பெட். மனசுக்கு இதமான அட்மாஸ்பியர்’ என்றான் ரமேஷ்.
‘இவ்வளவு நல்ல அட்மாஸ்பியர்ல அந்த கசக்கிப் போட்ட காகிதம் உறுத்தலா இல்லையா? அதை ஏன் சொல்லல்லை?’
‘கவனிச்சேன் சார் அதை. அந்தக் காகிதம் அதோ உட்கார்ந்திருக்காரே அவரோட ஸ்க்ரிப்ளிங் பேடோட முதல் பக்கம். கிழிக்கிறப்போ கொஞ்சம் கோணலா கிழிச்சிருக்காரு. பேடிலே முக்கோணமா கொஞ்சம் பாக்கி இருக்கு அந்தப் பக்கத்தில். நான் பாட்டுக்க சுத்தமா இருக்கிற இந்த ரூம்ல யாரோ ஒரு மடையன் குப்பை போட்டிருக்கான்னு சொன்னா அவர் மனசு புண்படும்ன்னுதான் சொல்லல்லை’
நாலு பேரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
‘சரி, வெளியில ஒரு அம்மா தரையை துடைச்சிக்கிட்டு இருக்கும், அதைக் கூப்பிட்டு குப்பையை எடுத்துப் போடச் சொல்லுங்க’ என்றார் வலது.
‘அந்தம்மா பேர் என்ன சார்?’
மறுபடியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக் கொண்டார்கள்.
‘இட்ஸ் ஓக்கே. உங்க யாருக்கும் அந்தம்மா பேரு தெரியாதுன்னு நினைக்கிறேன்’ என்றவன் எழுந்து நடந்து போய் கதவைத் திறந்து வெளியில் உட்கார்ந்திருந்த பியூனிடம் ‘அந்தம்மா பேர் என்ன?’ என்று கேட்டான். பியூன் சொன்னான்.
‘பவானி, இங்கே வாம்மா’ என்று கூப்பிட்டான். சுத்தம் செய்யச் சொன்னான். மறுபடி வந்து நின்றான்.
‘சிட் டவுன். ஏன் நிக்கறீங்க?’
உட்கார்ந்தான்.
‘எல்லா விஷயத்தையும் நல்லா கவனிக்கிறீங்க. வேலைக்காரர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது எவ்வளவு முக்கியம்ன்னு உங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இன்னும் ஒரே ஒரு கேள்வி. அதுக்கும் சரியா பதில் சொல்லிட்டீங்கன்னா உங்களுக்கு நூறு மார்க்’
‘கேளுங்க சார்’
‘எங்க நாலு பேர்ல ஒருத்தர் தொழிற்சாலை முதன்மை அதிகாரி, ஒருத்தர் பர்ஸான்னல் டிப்பார்ட்மெண்ட் ஹெட், ஒருத்தர் ஃபைனான்ஸ் ஹெட், ஒருத்தர் உங்க பாஸ். யார் யார் என்னென்னன்னு சொல்லல்லைன்னா கூட பரவாயில்லை. தொழிற்சாலை ஹெட் யாருன்னு மட்டும் சொல்லுங்க பார்ப்போம்?’
‘நான் வரும்போது நீங்க மூணு பேரும் இடது கோடியில் இருக்கிறவர் கிட்டே ரொம்ப பவ்யமா நடந்துகிட்டீங்க. அது என்னை கன்ஃப்யூஸ் பண்ணத்தானே ஒழிய அவர் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்களும் ஃபேக்டரி ஹெட் இல்லை. நீங்கதான் பாஸ். நான் சரியா பதில் சொல்லச் சொல்ல உங்க முகத்தில் பெருமை தாங்கல்லை. எப்படிப்பட்ட ஆளை செலக்ட் பண்ணியிருக்கேன் பார் என்கிற பெருமை தெரியுது.
மீதம் ரெண்டு பேர் அமைதியா இருக்காங்க. அவங்கள்ள ஒருத்தர்தான் ஃபேக்டரி ஹெட். நீங்க எல்லாருமே ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட் வச்சி ஏதோ நோட் பண்ணிக்கிட்டே இருக்கீங்க. அந்த ரெண்டு பேர்ல ஒருத்தர் இதுவரை எதுவுமே எழுதிக்கல்லை. அவர் ஃபைனான்ஸ் ஹெட்டா இருப்பார். சம்பளம் பேசும்போதுதான் எழுதுவார். ஆகவே ரெண்டாவதா இருக்கிறவர்தான் ஃபேக்டரி ஹெட். இடது கோடியில் இருக்கிறவர் பர்ஸான்னல் மேனேஜர். அவர்தான் இந்த நாடகத்துக்கெல்லாம் டைரக்டர்.
‘ஸ்ப்ளெண்டிட்.. உங்க ஆப்ஸர்வேஷன் பவர் பிரமாதம். ஒரு மெய்ண்ட்டனன்ஸ் ஆளுக்கு இருக்க வேண்டிய தகுதி அது. வெய்ட் பண்ணுங்க. வீ வில் லெட் யு நோ’
‘சார், புது விதமான இண்ட்டர்வியூ சார். வழக்கமா வந்ததும் ஃபைலை வாங்கிப் பார்க்கிறது. டெல் அஸ் சம்திங் அபௌட் யூ மிஸ்டர் ரமேஷ்ங்கிறது. இதெல்லாம் எதுவுமே இல்லை. டக்குன்னு ஆரம்பிச்சிட்டீங்க. எனக்கும் ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. சூப்பர் சார்’
‘தேங்க் யூ. பட், பேரென்ன சொன்னீங்க, ரமேஷா? நீங்க சுந்தரேசன் இல்லையா?’
‘அவர் வெளியில வெய்ட் பண்றார் சார்’
‘பின்னே நீங்க?’
‘நான் கேன்டீன்ல புதுசா வேலைக்குச் சேர்ந்திருக்கேன். கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு எத்தனை செட் டீ ஸ்னாக்ஸ் அனுப்பணும்ன்னு பார்த்துகிட்டு வரச் சொன்னாரு சூப்பரவைசர். எட்டிப் பாத்தேன், உள்ளே கூப்பிட்டீங்க, உக்காரச் சொன்னீங்க, கேள்வி எல்லாம் கேட்டீங்க. ஜாலியா இருந்திச்சு சார்’....!!
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.
சமீப காலமாக சிம்பு நடிப்பில் வந்த எந்தப் படமும் ஹிட் படமாக அமையவில்லை. ஈஸ்வரன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, தக் லைஃப் ஆகிய படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றன. சமீபத்தில் திரைக்கு வந்த தக் லைஃப் நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றது. இப்போது சிம்பு தனது 49ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கி வருகிறார். இவர் பார்க்கிங் படத்தை இயக்கி பிரபலமானார்.
குறள் தியேட்டர் – சிலம்பு தியேட்டர் என்று ஒரு திரையரங்கு இருக்கிறதாம். இந்த தியேட்டரில் போதுமான வசதிகள் இல்லை என்றும், மிகவும் பழமையான திரையரங்கு என்றும் கூறப்படுகிறது. இந்த திரையரங்கானது வேலூர் கோடைக்கு பின்புறம் பெங்களூரு ரோட்டில் அமைந்துள்ளதாம். இனி வரும் காலங்களில் இந்த திரையரங்கு புதுப்பிக்கப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
2025 ஆம் ஆண்டு நிலவரப்படி சிம்புவின் நிகர சொத்து மதிப்பு பற்றி பார்க்கையில் அவருடைய நிகர சொத்து மதிப்பு மட்டும் ரூ.100 கோடியாம்.இந்த 100 கோடியும், அவர் நடிகர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் ஆகியவற்றின் மூலமாக சம்பாதித்துள்ளாராம். இப்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் தொடங்கியிருக்கிறார். இனி வரும் காலங்களில் இந்த நிறுவனம் மூலமாக பல படங்களை தயாரிக்க வாய்ப்புகள் இருக்கிறது.
பான் இந்தியன் ஸ்டாராக ஜொலித்து கொண்டிருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. அனிமல், புஷ்பா 2, சாவா என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.
கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த குபேரா படம் தமிழ்நாட்டை தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது. இதை தொடர்ந்து Girlfriend, Thama ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்களும் சோலோ ஹீரோயின் சப்ஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் Thama திரைப்படத்தின் First லுக் போஸ்டர் சமீபத்தில் வெளிவந்தது. இதில் வெறித்தனமான லுக்கில் ராஷ்மிகா மந்தனா இருந்தார்.
ராஷ்மிகா மந்தனாவின் போட்டோஷூட் என்றால் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். இந்த நிலையில், பிரபல magazine-க்கு ராஷ்மிகா நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
இந்த magazine cover போட்டோஷூட்டில் தனது கெட்டப்பை முழுமையாக மாற்றி, ஆள் அடையாளமே தெரியாத அளவிற்கு மாறியுள்ளார் நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனா. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இதுதான் அந்த புகைப்படம்..