- · 1 friends
-

சிங்கம் எப்படியும் தப்பிச்சுடும்
மருமகனுக்கு வேட்டையாடுவதில் விருப்பம் அதிகம்.
மனைவியையும், மாமியாரையும் கூட்டிக் கொண்டு வேட்டைக்குப் போனான். ரொம்ப இருட்டி விட்டதால் மூவரும் தூங்குவதற்காகப் படுத்தார்கள். நடு ராத்திரியில் தூக்கம் விழித்த மனைவி,
“என்னங்க, அம்மாவை காணோம்” என்றாள் பதற்றமாக மனைவி
கணவன் எழுந்தான். ஒரு பெக் விஸ்கியை போட்டுக் கொண்டு துப்பாக்கியோடு தேட ஆரம்பித்தான்.
ஒரு புதருக்கு அருகே, சிங்கத்துக்கு எதிரே மாமியார் இருந்ததைப் பார்த்தார்கள்.
“ஐயய்யோ, இப்ப என்ன பண்றது?” என்று பதறிய மனைவியை தோளில் தட்டி கணவன் சொன்னான்,
“சிங்கம் காட்டுக்கு ராஜா, அதுக்கா தப்பிக்க வழி தெரியாது? ப்ரீயா விடு, அது எப்பிடியாவது உங்கம்மாகிட்ட இருந்து தப்பிச்சிடும்” என்றான்.