
அண்ணாத்த படத்தில் மீனா ரஜினிக்கு அக்காவா – அதிர்ச்சியில் ரசிகர்கள்
தீபாவளிக்கு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள அண்ணாத்த படம் வெளியாக உள்ளது. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தின் மொத்த வேலைகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.
விஸ்வாசம் படத்தின் வெற்றியை பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவை அழைத்து வாய்ப்பு கொடுத்தார் சூப்பர் ஸ்டார். பக்கா மாஸ் படமாக உருவாகியிருக்கும் இந்த படத்தில் ரஜினிகாந்துடன் குஷ்பு, மீனா ஆகியோர் நடிக்கின்றனர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சதீஷ், சூரி என பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது.
அண்ணாத்த படத்தில் ரஜினியின் மாமன் மகள்களாக குஷ்பு மற்றும் மீனா இருவரும் நடித்து வருவதாக கூறினார்கள். ஆனால் தற்போது கதையே வேறு என்கிறார்கள் நெட்டிசன்கள். உண்மையாகவே மீனா ரஜினிக்கு என்ன உறவுமுறையில் வரப்போகிறார் என்பது படக்குழுவினர் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
சமூக வலைதளங்களில் அண்ணாத்த திரைப்படத்தில் ரஜினிக்கு அக்காவாக மீனா நடிக்கிறார் என ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு விட்டனர். நயன்தாராவுடன் ரொமான்ஸ் பாடல் ஒன்றில் நடித்ததால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை நெட்டிசன்கள் ஒரு பக்கம் தங்கள் இஷ்டத்திற்கு கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.
படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு தகவல் வெளியாகியது படத்திற்கு பெரிய நெகட்டிவ் இமேஜை ஏற்படுத்தி விட்டது. படத்தின் மீதான எதிர்பார்ப்பை குறைத்து விடும் இதுபோன்ற வதந்திகளை வெகு சீக்கிரத்தில் ஒழித்துக் கட்டிவிட வேண்டும் என தீயாய் வேலை செய்து கொண்டிருக்கிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva