விண்வெளியில் சினிமா படப்பிடிப்பு நடத்தும் ரஷியா

சர்வதேச விண்வெளி மையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளதாக ரஷியா அறிவித்துள்ளது. இதற்காக, ரஷியா ஒரு நடிகை மற்றும் ஒரு திரைப்பட இயக்குநரை வெகு விரைவில் விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது. இந்த ஆண்டின் தொடக்கத்தில்,  ஹாலிவுட் படம் விண்வெளியில் வைத்து படமாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

ஆனால் அந்த முயற்சி இன்னும் தொடங்கப்படவில்லை. புகழ்பெற்ற ஹாலிவுட் திரைப்படமான மிஷன் இம்பாசிபில் பட கதாநாயகன் டாம் குரூஸ்,  நாசா மற்றும் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து  இந்த திட்டம் குறித்து அறிவித்திருந்தார்.

 

நடிகை யூலியா பெரிசில்ட் (37 வயது) மற்றும் திரைப்பட இயக்குநர் ஷிபென்கோ (38 வயது) ஆகியோர் பழைய சோவியத்-கசகஸ்தானில் உள்ள பைகோனர் காஸ்மோட்ரோமில் இருந்து வெகுவிரைவில் விண்வெளிக்கு பயணம் செய்ய உள்ளனர்.

 

மூத்த விண்வெளி வீரர் ஆண்டன் ஷ்காப்லெரோவ் இப்பயணத்துக்கு தலைமை தாங்குகிறார். அவர்கள் மூவரும் சோயுஸ் எம் எஸ்-19 விண்கலத்தில் 12 நாள் பயணமாக செல்ல உள்ளனர். அவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் வைத்து படப்பிடிப்பு நடத்த உள்ளனர்.

 

தி சேலஞ்ச் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. படத்தின் பட்ஜெட் மற்றும் கதைக்களம் போன்ற விஷயங்கள் வெளியிடப்படாமல் இருந்த நிலையில், தற்போது  ரஷியாவின் விண்வெளி நிறுவனமான ‘ராஸ்காஸ்மோஸ்’ அவற்றை வெளியிட்டுள்ளது.  

 

படத்தின் கதையாக, பெண் அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவர் சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்று அங்கு ஆபத்தில் சிக்கியுள்ள விண்வெளி வீரரை பாதுகாக்க உள்ளார். இவ்வாறு படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.

 

இது ஒரு பரிசோதனை முயற்சி என்று படத்தை இயக்க உள்ள இயக்குநர் தெரிவித்துள்ளார். நாளை புறப்பட உள்ள அவர்கள், அக்டோபர் 17-ம் தேதி அவர்கள் அனைவரும் பூமிக்கு திரும்ப உள்ளனர். அவர்களுடன் விண்வெளி வீரர் ஓலெக் நோவிட்ஸ்கி பூமிக்கு திரும்ப உள்ளார். அவர் கடந்த  6 மாதங்களாக விண்வெளி மையத்தில் தங்கி பணி புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

ரஷிய விண்வெளி நிறுவனம் ஊழல் போன்ற  பல்வேறு பிரச்சினைகளில் சிக்கி தவித்து  வரும் வேளையில், இது போன்ற  புது முயற்சிகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

ரஷிய நாட்டு அரசியல் ஆய்வாளர் கான்ஸ்டண்டின் கலாச்சேவ் கூறுகையில்,  ரஷிய விண்வெளி நிறுவனம் சந்தித்து வரும் பிரச்சினைகளை மக்களுக்கு தெரியவிடாமல் திசை திருப்பவே இது போன்ற முயற்சிகள் நடைபெறுகின்றன என்று கூறியுள்ளார்.

 

கடந்த மாதம் எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனம், முறையான பயிற்சி இல்லாத நான்கு விண்வெளி வீரர்களை மூன்று நாள் பயணமாக விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்தது. அவர்கள் பூமியின் சுற்றுப்பாதையை வலம் வந்தனர் என்பது  குறிப்பிடத்தக்கது. இந்த முயற்சி அனைத்து மனிதர்களும் விண்வெளிக்கு செல்லலாம் என்னும் திட்டத்தின் ஒரு கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டது.

  • 707
  • More
சினிமா செய்திகள்
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
நடிகை சரிதா
கமலுக்கு இணையாக, ரஜினிக்கு இணையாக உடன் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு இணையாக, தன் நடிப்பால் தனி உச்சம் தொட்டவர் நடிகை சரிதா.தெலுங்குப் படத்தில், ‘மரோசர
சமந்தாவின் வைரலாகி வரும் புகைப்படம்
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தா தற்பொழுது பேமிலி மேன் இயக்குநர்கள் ராஜ் & டிகே இயக்கத்தில் சிட்டாடல் என்ற வெப்
சிறப்பு செய்திகள்
வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்
நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் கடும் குளிரில் நடைபெற
மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தில அறிமுகமாகி வெற்றிகரமான நாயகியாக வலம்வரும் அவர் இப்போது ருதி ஆட்டம், இந்தியன் 2 , ஓமணப் பெண்ணே மற்றும் அருண் விஜய் படம் ஆகிய படங்களி
ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை
அஜித்குமார் நடிப்பில் வெளியாகும் வலிமை திரைப்படத்திற்காக ரசிகர்களின் வெகு நாட்களின் காத்திருப்பு முடிவுக்கு வர இருக்கிறது. அஜித் ரசிகர்களின் முழு முதல
புதிய தோற்றத்தில் சமந்தா
சமந்தா நடிப்பில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கும் திரைப்படம் ”சாகுந்தலம்”. சமந்தாவுடன் இணைந்து தேவ் மோகன், அதிதி ப
இளையராஜாவின் புதிய அறிவிப்பு
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து உள்ளார். இவரது இசையில் 1986-
ரஜினியின் 170-வது படம்
ரஜினிகாந்த் அடுத்தடுத்து 2 புதிய படங்களில் நடிப்பது உறுதியாகி உள்ளது. இதில் ஒரு படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டத
விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.
விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான படம் ‘பீஸ்ட்’.சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க அனிருத் இசையமைக்க மனோஜ் பரமஹம்சா ஒளிப்
ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு
நடிகர் ரஜினிகாந்தின் அடுத்த படம் குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ரஜினிகாந்தின் புதிய படத்திற்கான அறிவிப்பை அந்நிறுவ
கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்
அந்த காலத்தில் எல்லாம் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்
ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்
நம்பியார், ரஜினி, தபு, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தனுஷ், பிரகாஷ்ராஜ், ஜிவி பிரகாஷ், நாசர், நெப்போலியன், மாதவன் போன்ற பலர் ஹாலிவுட் படங்களில் நடி
புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் பீஸ்ட் திரைப்படத்தின் பெர்ஸ்ட் சிங்கிள் பாடல் புத்தாண்டை முன்னிட்டு நள்ளிரவில் வெளியாகும் என அறிவிக்க
சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்
நடிகர் ஒரு முறையாவது ஹிட் கொடுத்தால் தான் ரசிகர்கள் மத்தியில் அந்த நடிகருக்கென தனி அடையாளம் உருவாகும். அதற்காக அவர் கடினமாக உழைக்க வேண்டும். ஆனால் ஒரு