
கேப்டன் விஜயகாந்த் பற்றிய கூறிய பொன்னம்பலம்
ஒருநாள் கேப்டனின் சண்டைக்காட்சி. ஹிந்தி வில்லன் வரவில்லை என்பதால் ஷூட்டிங் கேன்சல் ஆகி வெளியே வந்து கொண்டிருந்தார் கேப்டன். நான் ஒரு ஓரமாக பான் பராக் போட்டு துப்பிக்கொண்டு இருந்தேன். அதை பார்த்து தனது உதவியாளரிடம்..
'யார் இந்த காட்டான்? ஆள் வர்றதை கூட பாக்காம கண்ட எடத்துல துப்பிக்கிட்டு இருக்கான்?' எனக்கேட்டார். 'அந்த ஹிந்தி வில்லனுக்கு டூப் போட வந்த ஆளுதான் இவரு' என்றார். 'அப்படியா? இவரையே நடிக்க சொல்லு. ஷூட்டிங்கை ஆரம்பிக்கலாம்' எனக்கூறி.. என் வாழ்வில் திருப்பத்தை உண்டாக்கினார்.
சில மாதங்கள் கழித்து என் தங்கைக்கு கல்யாணம் வைத்திருந்தேன். 19 ஆம் தேதி கல்யாணம். 16 ஆம் தேதி ஷூட்டிங் ஒன்றில் அவரை சந்தித்தேன். 'கல்யாண செலவுக்கு உதவி வேணுமா?' என்றார். பாதிக்கும் மேல் சமாளித்துவிட்டேன். இன்னும் கொஞ்சம் தேவைப்படுகிறது' என்றேன்.
எங்கள் இருவருக்குமான முக்கியமான சண்டைக்காட்சி சில வாரங்கள் கழித்து எடுக்க வேண்டியது. ஆனால் இயக்குனரிடம் பேசி 18 ஆம் தேதி இரவு அந்த ஷூட்டிங்கை வைக்க சொன்னார்.
பகல் முழுக்க வேறு படத்தில் நடித்துவிட்டு... இரவில் என்னுடன் சண்டை போடும் காட்சியில் நடித்தார். பிறகு வீட்டிற்கு சென்று குளித்துவிட்டு, உடனே மண்டபத்திற்கு வந்து என்னை பார்த்தார்.
'இந்தா.. இதுல 50,000 ரூபா இருக்கு. உன்னோட சம்பளப்பணம்' எனக்கூறிய கேப்டனை என்றும் மறக்க மாட்டேன் என்றார் வில்லன் நடிகர் பொன்னம்பலம்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva