
‘ரன்னர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது
நடிகர் பாலாஜி முருகதாஸ் தனது திறமையான நடிப்பின் மூலம் திரையுலகில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் வெளியான 'ஃபயர்’ திரைப்படத்தில் எவ்வித தயக்கமும் இல்லாமல் எதிர்மறையான காசி கதாபாத்திரத்தில் நடித்து பலரின் பாராட்டுகளைப் பெற்றார். தற்போது தனது புதிய திரைப்படமான ‘ரன்னர்’ மூலம் ரசிகர்களை ஈர்க்கத் தயாராகி வருகிறார்..
விளையாட்டை அடிப்படையாகக் கொண்ட (Sports Drama) கதைக்களத்தில் உருவாகிவரும் இப்படத்தை சிதம்பரம் A அன்பழகன் இயக்க, ரைனோஸ் ராம்பேஜ் பிலிம்ஸ் சார்பில் காலெப் மற்றும் கெல்வின் தயாரிக்கின்றனர். இதற்கு முன்பு இத்தயாரிப்பு நிறுவனம் உருவாக்கிய ‘ பாக்சர்’ மற்றும் ‘கொட்டேஷன் கேங்’ போன்ற திரைப்படங்கள் திரையுலகில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
மகாசிவராத்திரி நாளை முன்னிட்டு, மாஸ் நடிகர் சிலம்பரசன் TR, ' ரன்னர் ' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிடவிருக்கிறார்.
உலக அளவில் உள்ள பல்வேறு ஸ்பிரிண்டர்களின் (வேக ஓட்ட வீரர்கள்) (Sprinters) உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இப்படம், மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக படமாக்கப்படவுள்ளது.
இயக்குநர் சிதம்பரம் A அன்பழகன் இப்படம் குறித்துக் கூறும்போது:
"எனக்கு பல ஆண்டுகளாக பாலாஜி முருகதாஸை தெரியும் . அவரது கடின உழைப்பும், ஒழுக்கமான வாழ்க்கை முறையும் எப்போதும் எனக்கு ஆச்சர்யமாக இருக்கும். குறிப்பாக, இத்திரைப்படத்துக்காக கடந்த 6 மாதங்களாக அவர் சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பயிற்சியாளர்களிடமிருந்து தீவிரமாக வேக ஓட்டப் பயிற்சி பெற்று வருகிறார். இரவு 3 மணிக்கு உடற்பயிற்சி செய்துவிட்டு, காலை 5.30 மணிக்கு தடகள பயிற்சியில் இறங்குவது அவரது தினந்தோறுமான அட்டவணையாக உள்ளது. அவரது பொறுப்பும், கடின உழைப்பும் திரையில் கண்டிப்பாக பிரதிபலிக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது."
தயாரிப்பாளர்கள் காலெப் மற்றும் கல்வின் கூறும்போது:
"நடிகர் சிலம்பரசன் TR, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் தலைப்பை வெளியிட்டது எங்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் உருவாக்கியிருக்கிறது . அவரது ஆதரவால் இப்படத்துக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. இளைஞர்களை உற்சாகப்படுத்தும் தனித்துவமான கதையை உலகத்துடன் பகிர்ந்து கொள்வதில் எங்களின் முழு முயற்சியையும் சிறப்பையும் கொடுத்திருக்கிறோம். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்."

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva