விவாகரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய்
முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யா ராய் நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். அவர்களது வாழ்க்கையில் சில பிரச்னைகள் ஏற்பட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல்கள் பரவின. அதனை அபிஷேக் பச்சன் திட்டவட்டமாக ஒரு பேட்டியில் மறுத்திருந்தாலும்; அபிஷேக் - ஐஸ்வர்யா விவாகரத்து என்ற கிசுகிசு அடங்கியபாடில்லை.
தமிழில் அவர் அறிமுகமானாலும் ஹிந்தியில் அவரது கொடி உயர பறந்தது. அதற்கு காரணம் ஐஸ்வர்யா ராய்தான். ஏனெனில் தமிழைவிடவும் ஹிந்தியில் அவர் அதிக கவனம் செலுத்தினார். தமிழிலும் நடித்தார். தமிழில் அவர் நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டடித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.
பாலிவுட்டில் பீக்கில் இருந்தபோது நடிகர் சல்மான்கானை தீவிரமாக காதலித்து வந்தார். சில வருடங்கள் ஜோடி புறாக்களாக இருவரும் இருந்த சூழலில் சில காரணங்களால் காதல் முறிந்தது.
நடிகர் அபிஷேக் பச்சனை காதலிக்க ஆரம்பித்தார். இருவீட்டார் சம்மதத்துடன் இரண்டு பேரும் கடந்த 2007ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார். கிட்டத்தட்ட 17 வருடங்கள் அவர்கள் காதலோடும், விட்டுக்கொடுத்தும் தங்களது திருமண வாழ்க்கையை நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் கடந்த சில மாதங்களாகவே அவர்களை சுற்றி ஒரு கிசுகிசு கிளம்பியிருக்கிறது. அமிதாப் பச்சனின் மனைவி ஜெயா பச்சன் ஓவர் அதிகாரம் செய்கிறார். அதனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை பிரியப்போகிறார் என்று பேச்சுக்கள் எழுந்தன. ஆனால் அப்படி எதுவுமே இல்லை; தங்களை பற்றி இஷ்டத்துக்கு கதை சொல்கிறார்கள் என்று அபிஷேக் பச்சன் ஒரு பேட்டியில் ஓபனாகவே பேசியிருந்தார்.
ஜெயா பச்சனும் தான் ஐஸ்வர்யா மீது எந்த அதிகாரமும் செலுத்திவில்லை என்பதையும் தெளிவுப்படுத்தியிருந்தார். சூழல் இப்படி இருக்க சில நிகழ்ச்சிகளில் மகள், கணவருடன் கலந்துகொண்டார் ஐஸ்வர்யா ராய். இதனால் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வந்தது. இருந்தாலும் திருமணத்தின்போது போடப்பட்ட மோதிரம் ஐஸ்வர்யா ராயின் கைகளில் இல்லாததால் மீண்டும் விவாகரத்து கிசுகிசு கிளம்பியது.
ஐஸ்வர்யா ராய் இப்போது பாரீஸ் சென்றிருக்கிறார். அங்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்கையில் அவரது கைகளில் அந்த மோதிரம் இருந்தது. அதனைப் பார்த்த ரசிகர்கள் அதான் மோதிரம் இருக்கே. இதன் மூலம் தனக்கு விவாகரத்தெல்லாம் இல்லை என்பது ஐஸ்வர்யா ராய் உறுதி செய்துவிட்டதாக மகிழ்ச்சியுடன் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva