வேட்டையன் படத்திற்காக அபிராமியை தேர்வு செய்த ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில், இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் மஞ்சு வாரியர், அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, அபிராமி இணைந்து நடித்துள்ளார்.
டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகியுள்ள வேட்டையன் படம் அவரது முந்தைய படமான ஜெய் பீம் படத்தை போலவே சமூக கருத்துக்களை மையமாக கொண்டுள்ள போதிலும், ரஜினி ரசிகர்களை கருத்தில் கொண்டு கமர்ஷியலாகவும் உருவாகியுள்ளது.
இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களிலும் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்தின் 170வது படமாக உருவாகியுள்ளது வேட்டையன் படம். இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் 34 ஆண்டுகளுக்கு பிறகு இணைந்துள்ளார். படத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக ரஜினிகாந்த் நடித்துள்ள நிலையில், அவருக்கு எதிரான கருத்துக்களை கொண்ட மேலதிகாரியாக அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.
இந்த படத்தின் பாடல்கள் அடுத்தடுத்து வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இசை வெளியீட்டில் நடிகர் அமிதாப் பச்சன் தவிர்த்து மற்ற நடிகர்கள, நடிகைகள் அனைவரும் கலந்துக் கொண்டனர்.
படத்தின் கேரக்டர்களை லைகா நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வெளியிட்டது. வீடியோவாக வெளியான இந்த கேரக்டர் அறிமுகம் மிகச்சிறப்பான வகையில் ரசிகர்களை கவர்ந்திருந்தது. வேட்டையன் படம் குறித்து அடுத்தடுத்த படக்குழுவினர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர்.
தற்போது படத்தின் லீட் கேரக்டரில் நடித்துள்ள நடிகை அபிராமியும் பேட்டியளித்துள்ளார். அபிராமியின் கம்பேக் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. நடிகர் கமல்ஹாசனுடன் தக் லைஃப் படத்திலும் நடிகர் ரஜினிகாந்துடன் வேட்டையன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார் அபிராமி.
இந்தப் படத்தில் லீட் கேரக்டரில் நடிக்க பலரையும் யோசித்தபோது, தன்னை ரஜினிகாந்திடம் இயக்குநர் கூறியநிலையில், உடனடியாக அந்தப் பெண் இந்த கேரக்டருக்கு சிறப்பாக அமைவார் என்று ரஜினிகாந்த் கூறியதாக நடிகை அபிராமி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிக்கு எதிராக பக்கம் பக்கமாக வசனம் பேசும் ஒரு காட்சியில் தன்னையும் ரஜினிகாந்தையும் கேமராமேன் அடுத்தடுத்து சூட் செய்த நிலையில், அந்தக் காட்சி சிறப்பாக வர வேண்டுமே என்று மிகவும் பிரயத்தனம் செய்து தான் நடித்தாகவும் ஒரே ஷாட்டில் அந்தக் காட்சியை இயக்குநர் ஓகே செய்ததாகவும் அபிராமி கூறியுள்ளார்.
கண்ஜாடையில் கேமராமேனிடம் எப்படி நடிக்கிறா பாரு என்று ரஜினிகாந்த் தன்னை பாராட்டியதாகவும் தான் மிகப்பெரிய அளவில் உற்சாகம் அடைந்ததாகவும் அபிராமி மேலும் தெரிவித்துள்ளார். ரஜினியுடன் தனக்கு மிகவும் அழுத்தமான காட்சிகள் அமைந்துள்ளதாகவும் அபிராமி கூறியுள்ளார்.
இந்தப் படத்தில் ஒவ்வொரு நடிகர்களுடனும் தான் அதிகமான காம்பினேஷன் காட்சிகளை டிஜே ஞானவேலிடம் கேட்டு கேட்டு பெற்றதாகவும் அமிராமி கூறியுள்ளார். படத்தில் அமிதாப் பச்சனுடன் மட்டும்தான் தனக்கு காம்பினேஷன் காட்சிகள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் நடித்துள்ள அனைவரும் மிகப்பெரிய ஸ்டார்கள் என்பதால், படத்தில் நடிப்பது மிகப்பெரிய என்ஜாய்மெண்டை கொடுத்ததாகவும், இந்த கேரக்டருக்காக ரஜினி தன்னை செலக்ட் செய்தது தனக்கு மிகப்பெரிய நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அபிராமி குறிப்பிட்டுள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva