சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியதற்கான காரணத்தை கூறிய நடிகர் சிவகுமார்
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கியவர் நடிகர் சிவகுமார், சினிமாவில் இருந்து மொத்தமாக விலகியது குறித்து பேட்டி கொடுத்துள்ளார். அதில் அவர், கதாநாயகனாக நடிக்கும் போது ஒரு படத்திற்கு ரூ. 5 லட்சம் வரை சம்பளம் வாங்கினேன், அப்பாவாக நடிக்கும் போது ரூ. 2 லட்சம்.
சீரியலில் எனக்கு பேட்டா, சம்பளம் எல்லாவற்றையும் கணக்கு பார்க்கும் போது மாதத்திற்கு ரூ. 1 லட்சத்திற்கும் மேலே வந்தது. பாசமலர் படத்தில் கிளைமேக்ஸ் நடிக்க சிவாஜி கணேசன் தத்ரூபமாக வர வேண்டும் என்று 2 நாட்கள் இரவு தூங்காமல் சாப்பிடாமல் இருந்து நடித்தார்.
நானும் சீரியலுக்காக சாப்பிடாமல் தூங்காமல் அந்த காட்சியை நடித்துக் கொண்டிருந்தேன். அப்போது பக்கத்தில் இருந்த ஒரு பெண் அவரது காதலருடன் போனில் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு இருந்தது.
கோபத்துடன் உயிர் கொடுத்து நடித்துக் கொண்டிருக்கிறேன் இப்படி மதிக்காமல் பேசிக்கொண்டிருக்கிறாய் என கேட்டதற்கு, இப்ப எதற்கு சார் கத்துறீங்க, எப்படியும் இதை நீங்க டப்பிங் தான பேச போறீங்க என்று அலட்சியமாக பேசுனாங்க.
இதனால் நடிப்புக்கு மரியாதை இல்லை அதனால் எனக்கு இந்த நடிப்பு வேண்டாம் என்று நான் அன்னைக்கு செருப்பால என்ன அடிச்சுகிட்டு இனி நான் மேக்கப் போட மாட்டேன்னு முடிவு எடுத்தேன். அதனால் தான் இப்ப வரைக்கும் நான் நடிக்கல என்று அந்த பேட்டியில் பேசி இருக்கிறார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva