பன்முவித்தகர் திரு சோ
பன்முவித்தகர் திரு சோ அவர்கள் ஓரெழுத்துப் பெயருடன் நமக்குத் தெரிந்தவர்கள் இருக்கிறார்களா. அப்படி ஒரேழுத்தில் பெயரைக் கொண்டு, தமிழ் உலகிலும் நாடக உலகிலும் பத்திரிகைத் துறையிலும் அரசியல் வட்டாரத்திலும் புகுந்து புறப்பட்டு ஓராயிரம் ஆச்சரியக்குறிகளை அள்ளியள்ளித்தந்தவர்... சோ!
இவரின் பெயர் என்னவோ ராமசாமிதான். தாத்தா அருணாச்சல ஐயர், தந்தை ஆத்தூர் ஸ்ரீனிவாச ஐயர், மாமா மாத்ருபூதம் என மிகப்பெரிய வக்கீல் குடும்பம். அதனால்தானோ என்னவோ, சென்னை பி.எஸ். பள்ளியில் படிப்பைத் தொடங்கியவர், பிறகு சென்னை சட்டக்கல்லூரிக்குச் சென்று படித்தார் ராமசாமி. உயர் நீதிமன்ற வக்கீலாகப் பணியாற்றினார். முன்னணி நிறுவனங்களுக்கெல்லாம் சட்ட ஆலோசகராகவும் திகழ்ந்தார். இவையெல்லாம்... குடும்பப் பாரம்பரியத்தின்படி அமைந்தது. அல்லது அமைத்துக் கொண்டார்.
பால்யத்தில், டீன் பருவம் முடிந்து 20-வது வயதில், நாடகங்களை அதிகம் பார்த்தார் ராமசாமி. சென்னை சபாக்களில் நாடகம் மேடையேறினால், அங்கே ராமசாமி, நாடகத்தைப் பார்க்க முதல் ஆளாக இருப்பார். பிறகு, நாடகத்தில் நடிக்க ஆர்வம் பிறந்தது. அதன்படி, ‘கல்யாணி’ எனும் நாடகத்தில் நடித்தார். இவரின் ‘பாடி லாங்வேஜ்’ வித்தியாசமாக இருந்தது. கண்களை உருட்டி உருட்டிப் பேசுகிற மேனரிஸம் அனைவரையும் கவர்ந்தது. ’ராமசாமிக்கு நடிப்பும் நல்லா வருதே..’ என்று வீடு கொண்டாடியது. நட்பு வட்டமும் பாராட்டியது.
அதன் பிறகு, ‘தேன்மொழியாள்’ எனும் நாடகம். அதில் இவரின் கேரக்டர் பெயர் “சோ’. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது இந்த நாடகம். எஸ்.ராமசாமி எனும் பெயர் ‘சோ’ ராமசாமி என்றானது. பிறகு, தொடர்ந்து நாடகங்களில் நடித்தார். இயக்கி நடிக்கவும் செய்தார். இப்போது ‘ராமசாமி’ போய், ‘சோ’ எனும் பெயர் நிலைக்கத் தொடங்கியது.
சோவின் நாடகத்தில் அரசியல் இருக்கும். ஆனால் சீரியஸாக அதை கையாளமாட்டார். காமெடியும் நையாண்டியும் என நக்கலடிப்பார். சமூகத்தில் நடக்கிற அவலங்களையும் சட்ட மீறல்களையும் சாடி, பகடிகள் செய்வார். மக்களையே குற்றம் சுமத்தி, கிண்டலடிப்பார். எல்லாவற்றையும் ரசித்து கைதட்டினார்கள் ரசிகர்கள்.
சம்பவாமி யுகே யுகே’ எனும் நாடகம் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பிரபலம். ‘முகமது பின் துக்ளக்’ நாடகத்தை இருபது முறை முப்பது முறை பார்த்தவர்களெல்லாம் உண்டு. இந்த நாடகங்களெல்லாம் தமிழகத்திலும் வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் என 1600-க்கும் மேல் மேடையேறிக் கலக்கின. ‘விவேகா ஃபைன் ஆர்ட்ஸ்’ என்ற பெயரில் சோ நாடகங்களை மேடையேற்றினார். இந்தப் பெயருக்கு மிகப்பெரிய மதிப்பு ஏற்பட்டது.
நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே, திரையுலகிலும் நடிக்கத் தொடங்கினார் சோ.
சிவாஜி நடித்த ‘பார் மகளே பார்’ நடிகர் சோ வின் முதல் படம். இதையடுத்து சிவாஜியுடன் ஜெமினியுடன் எம்ஜிஆருடன் ஜெய்சங்கருடன் என முன்னணி நடிகர்கள் பலருடன் தொடர்ந்து நடித்தார். இதேசமயத்தில், பத்திரிகைகளிலும் கதைகள் எழுதினார். நாடகங்கள் எழுதினார். நாவல்கள் எழுதினார். வக்கீல் பணியையும் பார்த்தார்.
’சோ சோர்ந்து போய் யாருமே பார்த்ததில்லை. எப்போதும் கலகலவென இருப்பார். எதிரில் இருப்பவர்களையும் சந்தோஷ மனநிலைக்குக் கொண்டு வந்துவிடுவார். எவ்வளவு பெரிய பிரச்சினைகள் இருந்தாலும், அதைச் சிரித்துக் கொண்டே ‘டீல்’ செய்வதில் சோ சார், மிகப்பெரிய ரோல்மாடல் பலருக்கும்’’
இயக்குநர் முக்தா சீனிவாசன் இயக்க, அவரின் சகோதரர் முக்தா வி.ராமசாமி தயாரிக்க, ‘முக்தா பிலிம்ஸ்’ எனும் பெயரில் ஏராளமான படங்கள் வெளிவந்தன. மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன. இதில் பல படங்களில் சோ நடித்திருக்கிறார். சில படங்களுக்கு கதை எழுதியிருக்கிறார். வசனம் எழுதியிருக்கிறார். இப்படி நிறைய பங்களிப்புகளை திரையுலகில் செய்திருக்கிறார்
தனது சித்தி மீது சோவுக்கு மிகப்பெரிய அன்பும் மரியாதையும் உண்டு. நடிகை ரம்யா கிருஷ்ணனின் பாட்டிதான் சோவின் சித்தி. சித்தியின் மீது உயிரையே வைத்திருப்பார் சோ. தன் கதைகளை அவரிடம் படித்துக் காட்டி, சித்தியின் ரியாக்ஷனைக் கவனிப்பார் சோ.
நிறைகுடம்’ படம், இயக்குநர் மகேந்திரனின் கதை. சோ வசனம். முக்தா சீனிவாசன் இயக்கம். படத்தில், வாணிஸ்ரீயிடம் சிவாஜி, கவிதையாகப் பேசுகிற வசனக் காட்சி.
“இந்த சீன் முக்கியமான சீன். பிரமாதமா, கவிதை எழுதிடுறா’’ என்று சிவாஜி உட்பட எல்லோரும் சொல்ல, ‘’கவலையே படாதீங்க. கலக்கிடுறேன்’’ என்று சொன்னார் சோ. மறுநாள்... அந்தக் காட்சி எடுக்கிறார்கள். கவிதை பேப்பர், சிவாஜியிடம் வருகிறது. சோவை ஏற இறங்கப் பார்த்தார். அட்டகாசமாக நடித்துக் கொடுத்தார்.
‘’சோவை வரச்சொல்லுப்பா’’ என்றார். சோ வந்தார். முக்தா சீனிவாசனும் இருந்தார். ‘’இந்த வசனக் கவிதையை இவன் எழுதல. அநேகமா கவிஞர்கிட்ட (கண்ணதாசன்) கேட்டு வாங்கிட்டு வந்திருக்கான். என்ன சரியா?’’ என்று செல்லமான அதட்டலுடன் சிவாஜி கேட்க,
‘’ஆமாம், அதுக்கென்ன, ஜாலியா எழுதுறவன்கிட்ட கவிதையாக் கேட்டா என்ன அர்த்தம்?
அதான் நம்ம கவிஞர்கிட்ட காட்சியைச் சொல்லி அஞ்சே நிமிஷத்துல வாங்கிட்டுவந்துட்டேன்’’ என்று சோ சொல்ல, எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva