சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் நடிகை வாசுகி
காரைக்குடியை பூர்வீகமாக கொண்ட நடிகை வாசுகி, சினிமா மீது இருந்த ஆசையால் கடுமையாக போராடி பலத்திரைப்படத்தில் நடித்துள்ளார். குறிப்பாக இவர், கண்டமணியுடன் சேர்ந்து, கூட்டல் பெருக்கல் சொல்லித்தரும் கணக்கு டீச்சராக வரும் காமெடியும், பிச்சைக்காரியாக வரும் காமெடியின் மூலம் பிரபலமானார். சினிமா மட்டுமில்லாமல், அதிமுக கட்சியின் நட்சத்திர பேச்சாளராகவும் இருந்த இவர், ஜெயலலிதா மறைவுக்கு பின், அதிமுகவிலிருந்து ஓரங்கட்டப்பட்டு சினிமா வாய்ப்பும் இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்.
எனக்கு கர்ப்பப்பையில் மூன்று கட்டி இருந்தது. இது இருந்தால், புற்று நோயாக மாறிவிடும் என்றார்கள். இதற்காக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி இருந்தது இதற்காக என்னிடம் இருந்த நகைகளை விற்று சிகிச்சை செய்தேன். நான் கஷ்டப்படுகிறேன் என்று சொன்னதும், அனைவரும் சம்பாதித்த பணத்தை ஏன் சேர்த்து வைக்கவில்லை என்று கேட்கிறார்கள். நான் நன்றாகத்தான் சம்பாதித்தேன், ஆனால், அப்பா திடீரென விட்டு சென்று வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால், குடும்பத்தை கவனித்துக்கொள்ள வேண்டியதாகி விட்டது. இதைத்தொடர்ந்து, அம்மாவிற்கு கேன்சர் ஆப்ரேஷன், தங்கைக்கு திருமண செலவு என அனைத்தையும் நான் தான் செய்தேன். அதுமட்டுமில்லாமல், என் கணவராலும் பணத்தை இழந்தேன், இதனால் என் வாழ்க்கையும் முடிந்துவிட்டது. இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். இதைப்பார்த்த ஷகிலா தான் என்னை ஒரு பேட்டி எடுத்து, நான் படும் கஷ்டத்தை வெளி உலகத்திற்கு கொண்டு வந்தாள். அதன் பிறகு நடிகர் சங்கத்திடம் பட வாய்ப்பு கேட்டு கோரிக்கை வைத்து இருக்கிறேன், அவர்கள் நிச்சயம் வாய்ப்பு தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்றார் நடிகை வாசுகி.
நடிகர் பாலா, லாரன்ஸ் உதவி செய்வதை பற்றி கேள்வி பட்டு இருக்கிறேன். ஆனால், அவர் என்னை அழைத்து உதவி செய்யலாமா யார் வீட்டுக்கு தேடி சென்றாலும், வெளியில் இருக்கும் செக்யூரிட்டி விரட்டி விடுகிறார்கள். இப்படித்தான் விஜய்காந்த் இறந்த செய்தியை கேட்டு, கடன் வாங்கிக்கொண்டு காரைக்குடியில் இருந்து வந்தேன். அனைவரும், பிரேமலதா உதவி செய்வதாக சொன்னதால் அவர்களிடம் உதவி கேட்டேன். அவர்கள், நீங்க ஏதாவது வேலைக்கு போகக்கூடாதா என்று சொன்னார்கள். நான், இங்கே எதாவது வேலை போட்டுக்கொடுங்கள் என்றேன். பின் என் போன் நம்பரை வாங்கிக் கொண்டு ஆயிரம் ரூபாயை கையில் கொடுத்து அனுப்பினார்கள்.
காரைக்குடியில் தங்குவதற்கு கூட இடம் இல்லாமல், கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கிறேன். யாராவது உதவி செய்தால், யாருக்காவது சமைத்துக்கொடுத்தோ, டீ கடை போட்டோ நான் பிழைத்துக்கொள்வேன். ஆனால், எனக்கு உதவி செய்ய யாரும் இல்லை என்று வாசுகி தனது கஷ்டத்தை அந்த பேட்டியில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva