சூரிக்கு வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்
நடிகர் சூரி அடுத்தடுத்து நாயகனாக களமிறங்கி நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை படம் அவருக்கு ஹீரோவாக மிகப்பெரிய ஏற்றத்தை கொடுத்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் நாயகனாகவே நடித்து வருகிறார். இனிமேல் இப்படித்தான் என்று மார்த்தட்டி களத்தில் உள்ளார் சூரி.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சூரி, சசிக்குமார், உன்னி முகுந்தன் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான கருடன் படமும் சூரிக்கு சிறப்பாக கைக்கொடுத்த நிலையில், ஆகஸ்ட் 23ம் தேதி சூரியின் கொட்டுக்காளி படம் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை கூழாங்கல் படத்தை இயக்கிய பிஎஸ் வினோத் ராஜ் இயக்கியுள்ளார்.
பிஎஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இரண்டாவது படைப்பாக ரசிகர்களை மிரட்ட தயாராகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்துள்ளார். படத்தில் சூரிக்கு ஜோடியாகியுள்ளார் அன்னா பென். சூரி இந்த படத்தில் பாண்டி என்ற கேரக்டரில் நடித்துள்ளார். அவர் தனது கேரக்டர் குறித்த பதிவுகளை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் கொட்டுக்காளி படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்த பிரமோஷன்களில் சூரி, அன்னா பென் உள்ளிட்டவர்கள் பங்கேற்று வருகின்றனர்.
வெற்றிமாறன் கொடுத்த அட்வைஸ்:
இதனிடையே, வினோத் ராஜை மிஸ் செய்துவிட வேண்டாம் என்று இயக்குநர் வெற்றிமாறனே தன்னிடம் கூறியதாக சூரி தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். விடுதலை படத்தில் தான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்தபோது, ஹீரோவாக நடிக்க தனக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் வந்ததாகவும் ஆனால் விடுதலை படத்தின் ரிலீசுக்கு பிறகு அந்தப் படங்களை கமிட் செய்துக் கொள்ள வெற்றி மாறன் தனக்கு அறிவுறுத்தியதாகவும் சூரி கூறியுள்ளார். ஆனால் வினோத் ராஜின் படம் குறித்து பேசியபோது, உடனடியாக ஒப்புக் கொள்ளும்படியும் அவரை மிஸ் செய்துவிட வேண்டாம் என்றும் வெற்றிமாறன் தனக்கு அட்வைஸ் செய்ததாக சூரி கூறியுள்ளார். இந்திய அளவில் ஆகச்சிறந்த இயக்குநர்களில் வினோத் ராஜ் ஒருவர் என்று வெற்றிமாறனே சர்ட்டிபிகேட் கொடுத்ததாகவும் சூரி கூறியுள்ளார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva