தங்கலான் படத்தின் வார் பாடல் வெளியானது
நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள தங்கலான் படம் சுதந்திரப் போராட்ட காலத்தையொட்டி கேஜிஎஃப் பகுதிகளில் தங்கத்தை கண்டுபிடிக்கும் பணிகளில் பிரிட்டீஷாருடன் இணைந்து செயலாற்றிய தமிழக மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது.
இந்த படத்தில் விக்ரமுடன் மாளவிகா மோதனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ள நிலையில் மினுக்கி மினுக்கி பாடலை தொடர்ந்து தற்போது அடுத்தப்பாடல் வெளியாகியுள்ளது.
நடிகர் விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள தங்கலான் படம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தை ஒட்டி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே இந்த படம் ரிலீசுக்கு காத்திருந்த நிலையில் தற்போது ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பா ரஞ்சித் இயக்கத்தில் சுதந்திரப் போராட்ட காலகட்டத்தை ஒட்டிய கேஜிஎப் மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு தங்கலான் படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விக்ரம் வித்தியாசமான கெட்டப்புகளில் காணப்படுகிறார்.
இந்த படத்திற்காக மிகப்பெரிய மெனக்கெடல்களை விக்ரம் மேற்கொண்டுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. வெறுமனே பாதாம் பருப்புகளை மட்டுமே சாப்பிட்டு அவர் இந்த படத்திற்காக தன்னுடைய பிட்னஸை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்தின் ட்ரெயிலர், மினுக்கி மினுக்கி பாடல் ஆகியவை வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் இசை வெளியீடு திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் இந்த படத்தின் வார் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் லானே தங்கலானே என்ற இந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva