ஓவர் ரிஸ்க் எடுத்ததால் உயிரிழந்த நாயகன்
மலையாளத்தில் ஆக்சன் நடிகராக அறியப்பெற்றவர் ஜெயன். 70களில் ஜெயனின் படங்களுக்கு நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது ரசிகர்களும் இருந்தனர். இந்திய சினிமா உலகின் ஸ்டண்ட் லெஜண்ட். இவரைப்போல சண்டைபோட்ட நடிகர் யாரும் இல்லை என சொல்லப்படுகிறது
கடற்படை அதிகாரியாகவும் பணியாற்றி பின் திரைத்துறைக்கு நடிக்க வந்தவர். . ஸ்டண்ட்டில் கலக்கியவர். சிறந்த ஸ்டண்ட் கலைஞர் என்பதால் இவரின் ஆக்சன் காட்சிகளுக்கு மதிப்பு இருந்தது. சண்டைகாட்சி சிறப்பாக அமையவேண்டும் என்பதால் டூப் இல்லாமல் இவரே நடித்தார். இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்ப்பு பெற்றதால், சந்திரஹாசம் என்ற படத்தில் கப்பல் கிரேன் சண்டைக்காட்சியில் டூப்- இல்லாமல் நடித்தார். ஓஹேனக்கல் நீர்வீழ்ச்சியில் தன்னந்தனியாக ஆபத்தான ஒரு காட்சியில் நடித்தார். மயிர்க்கூச்செறியும் ஒரு சரக்கு ரயில் சண்டைக்காட்சியில் நடித்தார். மாமாங்கம் என்ற படத்தில் உண்மையில் காட்டு விலங்குகளுடன் மோதும் ஆபத்தான சண்டைக்காட்சியில் நடித்தார். பின்பு மூர்க்கன் கோப்ரா படத்தில் புல்லட்டில் சண்டை போடும் அதிரடி சண்டைக்காட்சியில் நடித்தார். இவர் இப்படி சண்டைக்காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்தவர்.
1980ல் இவர் நடித்த கோளிளக்கம் படத்தின் இறுதிக்காட்சியில் , தப்பிச்செல்லும் வில்லனின் (பாலன் கே. நாயர்) ஹெலிகாப்டரில், சுகுமாரன் ஓட்டிச்செல்லும் பைக்கில் இருந்து தாவி ஏறும் கட்சி யில் நடித்தார். இயக்குனர் முதல் ஷாட்டிலேயே ஏற்றுக்கொண்டாலும் இன்னும் அந்த காட்சி நன்றாக வரணும் என்று திரும்பவும் நடித்தார்.
ரீ-டேக்கின் போது, ஹெலிகாப்டரில் ஜெயன் தாவி ஏறியபோது ஹெலிகாப்டர் அதன் சமநிலையை இழந்து, தரையிறங்கும் போது, தொங்கிக்கொண்டிருந்த ஜெயனுடன் சேர்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அவர் உயிரிழந்தார். ரிஸ்க் இருக்க வேண்டியதுதான் ஆனாலும் இவர் எடுத்தது ஓவர் ரிஸ்க். இன்றும் இவருக்கு எண்ணற்ற ரசிகர்கள் கேரளத்தில் உள்ளனர். இவருக்கு அங்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.இவரை இந்திய சினிமா உலகின் ஸ்டண்ட் லெஜண்ட் என சொல்லலாம்.
இவர் இறப்பதற்கு முன்பாக மகேந்திரன் இயக்கத்தில் பூட்டாத பூட்டுக்கள் என்ற தமிழ் படத்தில் நடித்தார். இசைஞானி இளையராஜா இசைஅமைத்த " ஆண்டிபட்டி மாரியப்பன் பொண்டாட்டி" உள்ளிட்ட பாடல் உள்ள அந்த திரைப்படம் வணிக ரீதியாக வெற்றிபெறவில்லை.
கிழே ஹெலிகாப்டரில் தொங்கும் படம் ஜெயன் உயிர் இழப்பதற்கு ஒருசில வினாடிக்கு முன்பு எடுக்கப்பட்டது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva