சுதந்திர தினத்துக்கு வெளியாகவுள்ள பேய் படம்
திகில் கதையாக கடந்த 2015ஆம் ஆண்டு அஜய் ஞானமுத்து இயக்கத்தில், டிமாண்டி காலனி படம் வெளிவந்தது. இதில் நடிகர் அருள்நிதி கதாநாயகனாக நடித்திருந்தார். விறுவிறுப்பான திரைக்கதை ஓட்டத்தால் வரவேற்பை பெற்ற இந்த திரைப்படமானது, வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து அருள்நிதி மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் டிமாண்டி காலனி 2 படம் எடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது.
இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியாகி, ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், ரிலீஸ் எப்போது என்ற எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இதை பூர்த்திசெய்யும் வகையில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான ரெட் ஜெயிண்ட் மூவிஸ் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் அடுத்தமாதம் திரைக்கு வர உள்ளது. அடுத்த மாதம் 15 ம் திகதி, சுதந்திர தினத்தன்று இப்படம் திரைக்கு வருமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva