
அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டாரா நடிகை அதிதி ராவ்?
மணிரத்னம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியிடை மற்றும் செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆனவர் அதிதி ராவ் ஹைடரி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஹே சினாமிகா. அதைத் தொடர்ந்து தற்போது காந்தி டாக்ஸ் என்கிற மெளன திரைப்படத்தில் விஜய் சேதுபதியுடன் நடித்திருக்கிறார் அதிதி ராவ்.
நடிகை அதிதி ராவுக்கு கடந்த 2002-ம் ஆண்டே சதய்தீப் மிஷ்ரா என்பவருடன் திருமணம் ஆனது. ஆனால் அவரின் இந்த திருமண வாழ்க்கை 11 ஆண்டுகளில் முடிவுக்கு வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு இருவரும் விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர். இதையடுத்து சினிமாவில் பிசியாக நடித்து வந்த நடிகை அதிதி ராவுக்கு நடிகர் சித்தார்த் மீது காதல் ஏற்பட்டது. இருவரும் மகா சமுத்திரம் என்கிற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தபோது இவர்களிடையே காதல் மலர்ந்தது.
ஆரம்பத்தில் ரகசியமாக காதலித்து வந்த சித்தார்த் - அதிதி ராவ் ஜோடி, பின்னர் விஷயம் லீக் ஆனதை அடுத்து ஜோடியாக பட விழாக்களில் பங்கேற்க தொடங்கினர். இதனிடையே அண்மையில் இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் ஆனது. கோவிலில் வைத்து சிம்பிளாக நடைபெற்ற இவர்களது திருமண நிச்சயதார்த்தத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். விரைவில் இந்த ஜோடி திருமண பந்தத்திலும் இணைய உள்ளது.
இந்நிலையில், நடிகை அதிதி ராவ் முகத்தில் பிளாஷ்டிக் சர்ஜரி செய்திருப்பதாக சர்ச்சை வெடித்துள்ளது. அவரின் பழைய புகைப்படங்கள் சில வெளியான நிலையில், அதில் முகமெல்லாம் வீங்கி ஆளே அடையாளம் தெரியாதபடி காட்சியளிக்கும் அதிதி தற்போது அப்படியே டோட்டலாக மாறி இருப்பதை சுட்டிக்காட்டிய நெட்டிசன்கள் அவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துகொண்டதாகவும் கூறி வருகின்றனர். ஆனால் நடிகை அதிதி ராவ் இதுபற்றி எந்தவித கருத்துக்களையும் வெளியிடவில்லை.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva