
அறியப்படாத படம் - இன்றும் ஒலித்துக் கொண்டிருக்கும் பாடல்
1980 கால கட்டங்களில் வெளியான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் பெரும்பாலும் ஹிட் ஆயிருக்கும். அதற்கு காரணம் இசை, பாடியவரின் குரல் வளம் உள்ளிட்ட பல காரணங்கள் உள்ளன. அந்த வகையில் சில பாடல்களை பல முறை கேட்டிருப்போம் ஆனால் அது இடம்பெற்ற படம் என்னவென்று அறிந்திருக்க மாட்டோம்.
அப்படியொரு பாடல் தான் "செவ்வந்தி பூக்களில் செய்த வீடு" இதை 80 களில் பிறந்த பலரும் கேட்டிருப்போம். ஆனால் படம் என்னவென்று பெரும்பாலோனோர் அறிந்திருக்க மாட்டோம். இந்த பாடல் மெல்லப் பேசுங்கள் என்ற படத்தில் இடம் பெற்றிருக்கும்.
மெல்லப் பேசுங்கள்
1983 ஆம் ஆண்டு மெல்லப் பேசுங்கள் திரைப்படம் வெளியானது. பாரதி மற்றும் வாசு ஆகிய இரட்டையர்கள் இயக்கிய இப்படத்தில் பானுப்ரியா, வசந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் மூலமாக நடிகை பானுப்ரியாவின் திரையுலகில் அறிமுமகானார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
செவ்வந்தி பூக்களில் செய்த வீடு:
1983ல் பாரதி வாசு இயக்கத்தில் வெளியான மெல்லப் பேசுங்கள் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பானுப்ரியாவுக்கு இது முதல் படம். இந்தப் பாடலின் துவக்கத்தில் மாணிக்கவாசகர் எழுதிய திருப்பள்ளியெழுச்சியின் சில வரிகள் இடம்பெற்றிருக்கும். அந்த வரிகளைப் பாடிவிட்டு, "செவ்வந்திப் பூக்களில் செய்த வீடு" என உமா ரமணன் துவங்கும்போது, அதிகாலையின் புத்துணர்வைத் தரும். இந்தப் படம் பெரிதாக அறியப்படவில்லை. ஆனால், பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன இன்றும் பல இடங்களில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.
புலமைபித்தன் வரிகளில் இளையராஜா இசையமைத்த இந்த பாடலை தீபன் சக்ரவர்த்தி மற்றும் உமா ரமணன் பாடியிருப்பார்கள்.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva