
பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரில் இறந்து கிடைத்த பிரபல நடிகர்
பிரபல மலையாள நடிகர் வினோத் தாமஸ் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் இறந்து கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அவர் அய்யப்பனும் கோஷியும், ஜூன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவின் கோட்டயம் பம்படி பகுதியில் இருக்கும் ஹோட்டல் ஒன்றின் பார்க்கிங்கில் ஒரு கார் நீண்ட நேரமாக நின்று இருக்கிறது. அதில் ஒரு நபர் இருப்பதாக போலீசுக்கு தகவல் தரப்பட்டு இருக்கிறது.
போலீசார் வந்து காரில் இருந்து மீட்டு ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைத்து இருக்கின்றனர். வினோத் தாமஸ் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிய நிலையில், பிரேத பரிசோதனைக்காக உடலை அனுப்பி வைத்தனர்.
காரின் ஏசியில் இருந்து விஷ வாயு சுவாசித்ததில் அவர் மரணமடைந்து இருக்கலாம் ஏன் போலீசார் சந்தேகிக்கின்றனர். இருப்பினும் அது போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வந்த பிறகு தான் உறுதியாகும்.
👍0
💓0
😆0
😲0
😥0
😠0
0
சினிமா செய்திகள்












சிறப்பு செய்திகள்











