
நடிகர்தாமுவை பள்ளிகளுக்குள் விடாதீர்கள் என பள்ளிக்கல்வி துறைஅறிக்கை
1980 மற்றும் 1990 வருடங்களில் நகைச்சுவை நடிகராக மக்களிடையே பிரபலமானவர் நடிகர் தாமு. தற்போது திரைத்துறையை விட்டு ஒதுங்கி இருக்கும் இவர் நிகழ்ச்சிகளில் பங்கேற்று பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது பள்ளி ஒன்றிற்கு சென்ற நடிகர் தாமு மாணவர்களிடம் பேசியிருக்கிறார்.
பிள்ளைகளை படிக்க வைப்பதற்காக பெற்றோர் படும் துயரங்கள் மற்றும் மாணவர்கள் செய்யும் தவறுகள் பற்றி அவர் பேசும் போது மாணவர்கள் அழுதிருக்கிறார்கள். தொடக்கத்தில் தாமு பேசியது, சாதாரணமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு, அவரின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவிட்டது.
அதாவது, மென்மையாக அணுக வேண்டிய பள்ளி மாணவர்களை அழச் செய்து ஊக்கப்படுத்துவதா? குழந்தைகளுக்கான மனநல ஆலோசகர்கள் மற்றும் கல்வியாளர்கள் செய்யக்கூடிய வேலையை நடிகர் தாமு எவ்வாறு செய்கிறார்? பள்ளி கல்வித்துறை, அவருக்கு எவ்வாறு அனுமதி வழங்கியது? என்று பல கேள்விகள் எழுந்தது.
இந்நிலையில் அரசு பள்ளிகளுக்குள் நடிகர் தாமு வந்து மாணவர்களிடையே பேச பள்ளி கல்வித்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை. அவரை அழைத்து நிகழ்ச்சி நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களிடமும் விளக்கம் கேட்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு, நடிகர் தாமுவை அழைத்து அரசு பள்ளிகளில் நிகழ்ச்சிகள் நடத்துவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம் என்று பள்ளி கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva