
மாரிமுத்துவின் கடைசி ஆசை - நிறைவேற்றுகிறார் நடிகர் சூர்யா
எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக தினந்தோறும் இல்லத்தரசிகளின் கோபத்திற்கு ஆளாகும் மாரிமுத்து இப்போது நம்முடன் இல்லை. மாரடைப்பின் காரணமாக சில தினங்களுக்கு முன்பு மரணமடைந்த அவருடைய இழப்பு இன்னும் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.அந்த அளவுக்கு அவர் மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்துள்ளார். அதனாலேயே இப்போது அவருடைய நிறைவேறாத கடைசி ஆசையை பற்றி பலரும் வருத்தத்துடன் குறிப்பிட்டு வருகின்றனர்.
மாரிமுத்து 1.5 கோடி ரூபாய் மதிப்புள்ள வீட்டை வாங்கி இருக்கிறார். அதில் ஒவ்வொரு விஷயங்களையும் ஆசையுடன் செய்து வந்த அவர் தற்போது கிரகப்பிரவேசம் முடிவதற்கு முன்பாகவே மரணித்து விட்டார். இதை தான் அவருக்கு நெருக்கமானவர்கள் மிகவும் கவலையுடன் கூறி வருகின்றனர்.
வீட்டை சிவகுமாரின் குடும்பத்தினர் தான் திறக்க வேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருந்திருக்கிறது. இதற்கு ஒரு முக்கிய காரணமும் உண்டு. மாரிமுத்து இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக இருந்தார்.
அப்போது நேருக்கு நேர் படத்தில் பணி புரிந்த போது புதுமுகமான சூர்யாவுக்கு இவர்தான் அனைத்து விஷயங்களையும் சொல்லிக் கொடுப்பாராம்.
அப்போது ஆரம்பித்த இவர்களுடைய நட்பு இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறதாம். அதனாலயே சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் மாரிமுத்துவின் இழப்பு குறித்து தங்கள் சோசியல் மீடியா பக்கத்தில் மிகவும் உருக்கமாக இரங்கல் தெரிவித்திருந்தனர்.
சூர்யா கூட மாரிமுத்து தன்னுடைய நலம் விரும்பி, அவர் தன்னை சுற்றி இருப்பவர்களுடன் நட்புணர்வோடு இருக்கக்கூடியவர். அதேசமயம் எப்போதும் நகைச்சுவை உணர்வும் அவரிடம் இருக்கும். அதனால் அவரை நான் அதிகமாக மிஸ் செய்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
மாரிமுத்துவின் கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு சூர்யா விரைவில் புது வீட்டிற்கு குடும்பத்தினருடன் நேரில் கண்டிப்பாக செல்ல இருக்கிறாராம்.















































