
அருண்பாண்டியன் வீட்டு மருமகனாக மாறி இருக்கிறார் அசோக் செல்வன்
தெகிடி, சூது கவ்வும் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் தான் அசோக் செல்வன். இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான போர் தொழில் படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நல்ல கதைகளை அசோக் செல்வன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
அருண்பாண்டியன் வீட்டு மருமகனாக மாறி இருக்கிறார் அசோக் செல்வன். ஊமை விழிகள், இணைந்த கைகள் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்தான் அருண் பாண்டியன். இவருடைய மகள் கீர்த்தி பாண்டியனும் கதாநாயகியாக ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார்.
அன்பிற்கினியாள் படம் இவருக்கு சிறந்த படமாக அமைந்திருந்தது. அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவரும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் இணைந்து நடித்து வந்தனர். இதன் மூலம் இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்த நிலையில் இன்று கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கிறது.
அசோக் செல்வனை அருண் பாண்டியனுக்கு மிகவும் பிடித்திருந்ததால் கீர்த்தி பாண்டியன் காதலுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார். ஆனால் அவர்களது உறவினர்கள் முன்னிலையில் எளிமையாக திருமணம் நடைபெற்று இருக்கிறது. இவர்களது திருமணம் திருநெல்வேலியில் உள்ள சேது அம்மாள் பண்ணையில் நடைபெற்று இருக்கிறது.
விரைவில் சென்னையில் ரிசப்ஷன் ஏற்பாடு செய்ய உள்ளதாகவும் அதில் சினிமா பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · TamilPoonga

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva

- ·
- · GomathiSiva