காதலில் வயதிற்கு வேலை இல்லை என்ற ஆஷிஷ் வித்யார்த்தி
தமிழ் மற்றும் பிறமொழி படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்து மிரட்டியயவர் தான் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் தமிழ் சினிமாவிற்கு தரணி இயக்கத்தில் விக்ரம் நடித்த தில் படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பிறகு ரஜினியின் பாபா, அர்ஜுனின் ஏழுமலை,விஜய்யின் பகவதி, தமிழன், கில்லி போன்ற படங்களில் தன்னுடைய எதார்த்தமான நடிப்பையும் வில்லத்தனத்தையும் காட்டி இருப்பார்.
இந்த வருடத்தில் மட்டும் இவர் ஐந்து படங்களில் நடித்திருக்கிறார். அந்த அளவிற்கு பிஸியாக இருக்கக்கூடிய ஆஷிஷ் அவர்களின் இரண்டாவது திருமணம் சமீபத்தில் மிக எளிமையான முறையில் நடைபெற்றது. இத்திருமணம் தான் தற்போது சோசியல் மீடியாவில் எங்கு பார்த்தாலும் பேசப்படுகிறது.
இவர் ஏற்கனவே செய்து கொண்ட திருமணத்தில் மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் பல வருடங்களாக பிரிந்து வாழ்கிறார். இப்போது இவர் இரண்டாவதாக ரூபாலி என்பவரை காதலித்து திருமணம் செய்திருக்கிறார்.
திருமணம் முடிந்த கையோடு மனைவியுடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என கும்மாளம் போட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. காசு பணம் இருந்தால் 60 வயதிலும் ஆட்டம் போடலாம் போல என்கின்ற அளவுக்கு ஆஷிஷ் திருமணம் ஏகப்பட்ட சர்ச்சையை கிளப்பியது.
இதற்கெல்லாம் பதில் கொடுக்கும் விதமாக இவர் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருக்கிறார். அதில் 60 வயதில் உனக்கு திருமணம் தேவையா, முதல் மனைவிக்கு விவாகரத்து கொடுத்து விட்டாயா என பலரும் பலவிதமான கேள்விகளை கேட்கின்றனர்.
அதிலும் இந்த வயதில் இன்னொரு துணை கேட்கிறதா என்றும் கேலி கிண்டல் செய்கின்றனர். எல்லோருடைய வாழ்க்கையும் ஒரே மாதிரியாக இருக்காது. வேறு வேறு நம்பிக்கையோடு கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எல்லோருக்கும் அவரவர் வாழ்க்கையில் சந்தோசம் இருக்க வேண்டும் என்பதில் ஆணித்தரமாக இருக்கிறார்கள்.
22 வருடத்திற்கு முன் திருமணம் செய்து கொண்ட முதல் மனைவிக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டோம். அதன் பின் இப்போது இரண்டாவதாக எனக்கு பிடித்த பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறேன். எனக்கு இப்போது 57 வயது தான்.
எல்லோரும் சொல்வது போல் எனக்கு 60 வயது இன்னும் ஆகவில்லை. காதலில் வயதிற்கு வேலை இல்லை. இருவரும் சந்தோஷமாக இருந்தால் போதும். ஆகையால் என்னுடைய இரண்டாவது திருமணத்தை வைத்து கடலை போடுவதை நிறுத்திவிட்டு, அவரவர் தங்கள் வேலையை பார்த்தால் போதும் என நெட்டிசன்களை விளாசித் தள்ளி இருக்கிறார்.
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · TamilPoonga
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva